வீடு மற்றும் இடம் வாங்குறதுலாம் பலருக்கும் கனவாகவே இருக்கும். குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் வீடு மற்றும் இடம் வாங்குவது. அதை வாங்குறதுல எவ்வளவு நல்லது இருக்கோ, அதே அளவுக்கு வில்லங்கங்களும் இருக்கும். நாம் சென்னை மாநகரில் வாங்கப்போற சொத்துக்களுக்கு, பின்னால் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுப்பதற்காக, வாங்குவதற்கு முன்பாக இந்த ஆவணங்களையெல்லாம் சரிபார்ப்பது நல்லது. அப்படி எந்த ஆவணங்களையெல்லாம் சரி பார்க்கணும்னு தெரிஞ்சுக்கலாம், வாங்க!
தாய் பத்திரம்
நீங்கள் வாங்கப்போர வீடு அல்லது இடத்தின் ஆரம்பகால உரிமையாளர் முதல் தற்போது வாங்கப்போகும் உரிமையாளர் வரை அனைவர் குறித்த விபரங்களும் இந்த தாய் பத்திரத்தில் இடம்பெற்றிருக்கும். சொத்துகள் வாங்க மற்றும் விற்க இருதரப்பினரும் ஒப்புக்கொண்டால் விற்பனை பத்திரம் மூலம் இந்த தாய் பத்திரத்தில் உள்ள பெயர் மாற்றப்படும். துணை பதிவாளர் அலுவலகத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த ஆவணம் உங்களுக்கு சட்ட ஆவணமாக இருக்கும். இந்த ஆவணங்கள் தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் விற்பனையாளர்களிடம் இருக்கும் earliest document-ல் உள்ள டைட்டிலை வைத்து வழக்கறிஞர் உதவியுடன் பத்திரங்களில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறியலாம். இந்த earliest document நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடு அல்லது இடத்தை வாங்கும்போது குறைந்தபட்சம் அதன் கடந்த 30 ஆண்டுகால வரலாற்றை கவனிப்பது அவசியம். 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆவணங்கள் காணாமல் போகும்பட்சத்தில் அதன் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும். செய்தித்தாள்களில் இதுதொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டும். இந்த காலத்தில் யாரும் இதற்கு உரிமைக்கோரவில்லை என்றால் அந்த சொத்து எஃப்.ஐ.ஆர் கொடுத்த நபர்களுக்கு உரிமையானதாக அறிவிக்கப்படும்.
Encumbrance Certificate (EC)
Monetary மற்றும் legal liabilities ஆகியவற்றிலிருந்து நீங்கள் வாங்கப்போகும் சொத்து விடுபட்டது என்பதற்கு இந்த சான்றிதழ் மிகவும் அவசியமானது. வங்கியில் இருந்து சொத்துக்களுக்கு கடன் வாங்கப்போகும் நேரத்தில் இந்த சான்றிதz கட்டாயம் இருக்க வேண்டும். சொத்து தொடர்பான பண பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விபரங்களும் இதன்மூலம் தெரியவரும். இதனை கண்டிப்பாக சொத்தை வாங்குபவர்கள் பெற வேண்டும். துணை பதிவாளர் அலுவலகத்தில் இந்த சான்றிதழ் கிடைக்கும்.
Legal scrutiny report
ரியல் எஸ்டேட் துறையில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் ஒருவரிடம் இந்த லீகல் ரிப்போர்ட்டை பெற வேண்டும்.
Tax paid receipts
இரண்டு வகையான வரிகள் உள்ளன. நிலங்களுக்கு செலுத்துவது வருவாய் வரி. வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செலுத்துவது வீட்டு வரி அல்லது சொத்து வரி. வருமான வரி வருவாய்த்துறைக்கும் வீட்டு வரி சென்னை மாநகராட்சிக்கும் செலுத்தப்படுகிறது. இந்த வரிகள் செலுத்தப்படுவதை ஆராய்ந்து அதற்கான ரசீதுகளை சரிப்பார்க்க வேண்டும்.
Types of layouts/plots
சென்னையில் layouts/plots இரண்டு வகைப்படும். ஒன்று, அரசால் அங்கீகரிக்கப்பட்டவை. மற்றொன்று, அங்கீகரிக்கப்படாதவை. குரூப் ஆஃப் ப்ளாட்ஸ்தான் லேஅவுட் என்று குறிப்பிடப்படுகிறது. CMDA மூலம் விற்பனை மற்றும் கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட லேஅவுட்டுகள் அங்கீகரிக்கப்பட்டவை. இவைதான் சாலை ஆக்கிரமிப்பு, பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை வரையறுக்கின்றன. எனவே, அங்கீகரிக்கப்படாத இடங்களை வாங்குவது நல்லதல்ல. இதனால், பிற்காலத்தில் மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு போன்றவை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
Patta
மாவட்டம், தாலுகா மற்றும் கிராமம், பட்டா எண், உரிமையாளர் பெயர், சர்வே எண், நஞ்சை நிலமா அல்லது புஞ்சை நிலமா, இடம் இருக்கும் ஏரியா மற்றும் வருமான வரி தகவல்கள் போன்றவை இந்த பட்டாவில் இடம்பெற்றிருக்கும். பட்டாவை நாம் ஆன்லைனிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம்.
The importance of personal scrutiny
மேற்சொன்ன சான்றிதழ்கள் சரிபார்த்தப் பின்னர் இடத்தை நேரில் சென்று பார்வையிடுவதும் அவசியம். வாங்குபவர்கள் இடத்தை முறையாக அளந்து வாங்க வேண்டும். கார்னரில் இடம் வாங்குபவர்கள் இடத்தின் ஒருபகுதி சாலை அமைக்க பஞ்சாயத்து எடுக்கலாம் என்ற உண்மையை அறிந்து அதற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்தி மனையை வாங்க வேண்டும்.
Building plan approval
சென்னையில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் கட்டடம் கட்ட ஜி.சி.சி அனுமதி அளிக்கிறது. அதற்கு மேல் கட்ட வேண்டும் என்றால் சி.எம்.டி.ஏ-விடம் அனுமதி வாங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கட்டடம் கட்டுவதற்கான திட்டத்தை வாங்கிய பின்னர் கட்டடம் கட்ட தொடங்க வேண்டும். ஆறு அடுக்குகளுக்கு மேல் கட்டப்படும் குடியிருப்புகள் மற்றும் 500 சதுர மீட்டருக்கு மேலே உள்ள குடியிருப்புகள் TN RERA-விடம் பதிவு செய்ய வேண்டும்.
No deviation
குடியிருப்புகளை வாங்குபவர்கள் உங்களிடன் அளிக்கப்பட்ட பிளானின் நகலை கட்டப்படும் கட்டடத்தோடு ஒப்பிட்டு கவனிக்க வேண்டும். இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதற்கும் சி.எம்.டி.ஏ-விடம் அனுமதி வாங்க வேண்டும்.
Structural stability report
கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது. சி.எம்.டி.ஏ அளித்த சான்றிதழில் கட்டடத்தின் உறுதித்தன்மை தொடர்பான விவரங்கள் இருக்கும். பழைய கட்டடங்களை விற்கும்போது அதனை மதிப்பீடு செய்து அதனை சரிபார்க்க இஞ்சினீயர் ஒருவரை நியமிக்கவும் பரிந்துரை செய்யப்படும்.
Completion Certificate
மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது போன்றவற்றை சரிபார்த்து கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும். தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றைப் பெற இந்த சான்றிதழ் கட்டாயம்.
Joint Development Agreement (JDA)
சென்னையில் பெரும்பாலான கட்டடங்கள் ஜே.டி.ஏ-வின் கீழ் கட்டப்படுகின்றன. நில உரிமையாளருக்கும் கட்டடம் கட்டுபவருக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதனடிப்படையில் கட்டடம் கட்டங்களை வாங்கும்போது தாய் பத்திரம் மற்றும் பிற சான்றிதழ்களை சரிபார்ப்பது மிகவும் அவசியம்.
Undivided Share (UDS)
அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும்போது யு.டி.எஸ் அளவை ஆராய்வது மிகவும் முக்கியமானது. குடியிருப்புகள் இடிக்கப்பட்டாலோ அல்லது சீரமைக்கப்பட்டாலோ சொத்தில் ஏற்படும் இழப்புகளை யு.டி.எஸ் மூலமே அளவிடுகின்றனர்.
Dealing with delayed handover
கட்டுமானப்பணிகளை முடித்துத்தர ஒப்பந்தத்தாரர்கள் நிறைய நாள்கள் எடுத்துக்கொள்ளும் சம்பவங்கள் இன்றைக்கு அதிகமாக நடக்கின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் ரியல் எஸ்டேட் விதிமுறைகளின்படி வாங்குபவர்கள் இழப்பீடுகளை பெற முடியும்.
Also Read: புது வீடு வாங்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான செலவுகள்!