BGMI

பப்ஜி ரிலீஸ்… புதிய வெர்ஷனில் என்ன ஸ்பெஷல்?!

இந்தியாவில் பப்ஜியை அஃபிசியலா லாஞ்ச் பண்ணிட்டாங்கங்க… `என்னங்க சொல்றீங்க பப்ஜியா?!’னு கேக்காதீங்க.. பேரை கொஞ்சம் ஆல்டர் பண்ணி `பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா’ அப்டின்ற பேருல லாஞ்ச் பண்ணிருக்காங்க. ஏற்கெனவே, நீங்க ப்ரீ ரெஜிஸ்டர் பண்ணியிருந்தா இந்த கேமை டவுன்லோட் பண்ணி விளையாடலாம். ஏற்கெனவே நீங்க விளையாடிட்டு இருந்த பப்ஜிக்கும் தற்போது லாஞ்ச் ஆகியிருக்கும் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியாவுக்கும் அப்படி என்ன வித்தியாசம்? – அதைப்பற்றிதான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம். வாங்க…

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமில் பப்ஜியில் இருந்ததைவிட ஒரு சில ஃபியூச்சர்ஸை இந்தியாவுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த கேமின் ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷன் கடந்த மே மாதமே ஆரம்பித்துவிட்டது. மற்ற நாடுகளில் இந்த பப்ஜி கேமிற்குத் தடை இல்லை என்பதால் இந்தியாவுக்கென பிரத்யேகமாக இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த கேமை 16 வயதுக்கு மேல் உள்ள அனைவருமே விளையாட முடியும். பப்ஜி விளையாட்டில் இருந்த அளவுக்கு வன்முறைகள் இதில் இருக்காது என்றும் முடிந்த அளவு வன்முறைகளை இதில் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தென்கொரியாவைச் சேர்ந்த கிராப்டன் என்ற நிறுவனமானது இந்த கேமை வெளியிடுகிறது. 

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா
பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

பப்ஜியில் என்னென்ன லொகேஷன்ஸ், மேப்ஸ், மோட்ஸ், கன்ஸ், செட்டிங்க்ஸ் இருந்ததோ அதேபோல தான் பெரும்பாலும் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே விளையாடிக்கொண்டிருந்த பப்ஜி கேமில் இருந்த டேட்டாக்களை இதில் இம்போர்ட் செய்து தொடர்ந்து விளையாட முடியும். கேமை தொடங்கும்போதே இதற்கான ஆப்ஷன் உங்களிடம் கேட்கப்படும். அப்படி உங்களுக்கு தேவை எனும் பட்சத்தில் எந்த அக்கௌண்டுடன் டேட்டாக்களை கனெக்ட் செய்து வைத்துள்ளீர்களோ அதனை லாகின் செய்து எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் நீங்க எந்த இடத்துல கேமை விட்டீங்களோ அதே இடத்தில் இருந்து கேமை தொடர்ந்து விளையாட முடியும். அதோடு கிராஃபிக்ஸிலும் சில மாற்றங்களை செய்துள்ளனர். இந்த கிராஃபிக்ஸ் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியாவில் நன்றாக இருப்பதாகவும் பப்ஜி பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பப்ஜியில் நீங்கள் விளையாடும்போது எதிரில் இருப்பவரை சுட்டு வீழ்த்தினால் `கில்’ என்று வரும். தற்போது வெளியான பேட்டில் கிரவுண்டில் `கில்’ என்பதற்கு பதிலாக `ஃபினிஷ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, நீங்கள் சுடும் நபர் செத்து கீழே விழாமல் தூளாக காற்றில் சிதறிவிடுகிறார். சுடும்போது ரத்தம் சிவப்பு நிறத்தில் பப்ஜியில் தெறிக்கும். ஆனால், அதற்கு பதிலாக இதில் மங்காத்தாவில் வருவதுபோல பச்சை நிறத்தில் ரத்தம் வரும். இதன்மூலம் கொடூரமான விஷயங்கள் கேம் விளையாடுவர்களின் மனதில் பதியக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு இந்த கேமை வடிவமைத்துள்ளனர் என்பது தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், “நிஜ உலகை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கேம் அல்ல. இது முழுவதும் விர்ச்சுவல் கேம்தான். பிளே ரெஸ்பான்ஸிபிளி” என்பதையும் அடிக்கடி நோட்டிஃபிகேஷனாக குறிப்பிடுகிறது.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா
பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

பழைய பப்ஜிக்கும் புதிய பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமுக்கும் இவ்வளவுதான் வித்தியாசமானு நீங்க கேக்குறது கேக்குது. சிவா ஒரு படத்துல கண்ணத்துல மச்சத்தை வைத்து மாறுவேஷம்னு சொல்லி ஏமாத்துற மாதிரி ஏமாத்திட்டாங்கனு பப்ஜி பிளேயர்ஸ் பலரும் தங்களுடைய கருத்தை பதிவு செஞ்சிட்டு இருக்காங்க. புதிய கன்ஸ், லொகேஷன்ஸ், வெகிக்கிள் எல்லாம் வரப்போகுதுனு கனவோட இருந்தவர்களுக்கு இந்த கேம் பெரிய ஏமாற்றம்தான். இருந்தாலும், பப்ஜி கேம் அப்படியே வந்தா போதும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த கேம் வரம்தான். சீக்கிரமே எல்லாரும் டவுன்லோட் பண்றதுக்கான ஆப்ஷன்ஸ் வந்துரும்னு சொல்றாங்க. ஐஓஎஸ் மொபைல்க்கும் இந்த கேம் விரைவில் அறிமுகம் ஆகும்னு எதிர்பார்க்கப்படுது. அப்புறம் என்ன.. வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்தான்!

நீங்க இந்த கேமை விளையாடிட்டு இருக்கீங்களா… உங்க அனுபவத்தை கமெண்ட்ல சொல்லுங்க… நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்!

Also Read : 90ஸ் கிட்ஸுக்கு `சக்திமான்’ ஏன் ஸ்பெஷல் தெரியுமா? #HBDMukeshkhanna

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top