பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

`வெயிட் இஸ் ஓவர்’ – பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியாவின் ஏர்லி அக்சஸ்!

இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அடிக்ட்டான விளையாட்டுக்களில் முதன்மையானது பப்ஜி. உலகம் முழுவதும் 60 கோடி முறைகளுக்கும் மேல் இந்த பப்ஜி கேம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 கோடி பேர் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. இதில் அதிகபட்மாக இந்தியாவில்தான் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இங்கு சுமார் 17 கோடி மக்களுக்கும் அதிகமானவர்கள் இந்த பப்ஜியை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பிரச்னை காரணமாக சீன செயலிகள் பலவற்றுக்கும் இந்தியா தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து பப்ஜிக்கும் தடை விதிக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இந்தியாவில் பப்ஜிக்கும் தடை விதிக்கப்பட்டது.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் பலரும் வி.பி.என்-ஐப் பயன்படுத்தி பப்ஜியை விளையாடி வந்தனர். தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடுவது குற்றம் என்று தெரியாமலேயே பலரும் இந்த விளையாட்டை விளையாடி வந்தனர். மேலும், பப்ஜி பிரியர்கள் மீண்டும் இந்த விளையாட்டைக் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து குரல்களை எழுப்பி வந்தனர். இந்த நிலையில், தற்போது பப்ஜியின் மற்றொரு வடிவமாக `பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா‘ என்ற பெயரில் கேம் லாஞ்ச் ஆகவிருக்கிறது. இதன் முன்னோட்டமாக ஏர்லி அக்சஸ் பயனாளர்களுக்கு நேற்று முதல் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த கிராப்டன் என்ற நிறுவனமானது இந்த கேமை வெளியிடுகிறது. பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள இந்த கேமை ஆன்ட்ராய்டு மொபைல் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடலாம்.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமில் பப்ஜியில் இருந்ததைவிட ஒரு சில ஃபியூச்சர்ஸை இந்தியாவுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளனர். இந்த கேமின் ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷனை கடந்த மே மாதமே ஆரம்பித்துவிட்டனர். மற்ற நாடுகளில் இந்த பப்ஜி கேமிற்குத் தடை இல்லை என்பதால் இந்தியாவுக்கென பிரத்யேகமாக இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமை 16 வயதுக்கு மேல் உள்ள அனைவருமே விளையாட முடியும். பப்ஜி விளையாட்டில் இருந்த அளவுக்கு வன்முறைகள் இதில் இருக்காது என்றும் முடிந்த அளவு வன்முறைகளை இதில் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே இந்த கேமை பதிவிறக்கம் செய்ய முடியும். ஐ.ஓ.எஸ் மொபைல்களில் இந்த கேமை பதிவிறக்கம் செய்ய முடியாது. ஐ.ஓ.எஸ் மொபைல்களிலும் இந்த கேம் விரைவில் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

பப்ஜியுடன் ஒப்பிடும்போது பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமில் மேப்ஸ், கேமில் பயன்படும் ஆயுதங்கள், புதிய வகையான வாகனங்கள், கிராஃபிக்ஸ், 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதிய விஷயங்கள் இந்த கேமில் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பேட்டில் கிரவுண்டில் பல அற்புதமான தருணங்கள் உள்ளன. வெயிட் இஸ் ஓவர்” என்று ட்வீட் செய்து ஏற்கெனவே பப்ஜி விளையாடுபவர்கள் மத்தியில் ஹைப்பை கிரியேட் செய்துள்ளது. இந்த கேம் இன்றைக்கு லாஞ்ச் ஆகியுள்ளது. எட்டு மாதங்களுக்குப் பிறகு பப்ஜியைப் போன்ற கேம் லாஞ்ச் ஆகியுள்ளதால் பப்ஜி பிரியர்கள் மீம் போட்டு கண்ணீருடன் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேமை வரவேற்று வருகின்றனர். இந்த கேமைப் பற்றி நீங்க என்ன நினைக்கீறீங்க? ஆல்ரெடி டௌன்லோட் செய்து விளையாட தொடங்கிட்டீங்களா? இதுல உங்களுக்கு பிடிச்ச ஃபியூச்சர் என்ன? – அப்டினு கமென்ட்ல சொல்லுங்க!

Also Read : சிம்ப்ளி சரத் முதல் My Randy வரை… திக் திக் அனுபவங்களைத் தரும் யூ டியூப் சேனல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top