சம்பத் ராம்

கூட்டத்தில் ஒருத்தன், வில்ல முக நண்பன்.. சம்பத் ராம்!

 தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, குணச்சித்திரக் கலைஞர்களைக் கொண்டாடும் கௌரவிக்கும் ஒரு மேடை Tamilnadu Now நடத்திய Golden Carpet Awards. துணை நடிகர்கள், நகைச்சுவை நட்சத்திரங்கள், நடணக் கலைஞர்கள் என வெளிச்சம் படாத பல கலைஞர்களுக்கு சிவப்புக்கம்பளம் அல்ல, தங்கக் கம்பளம் விரித்து கொண்டாடிய நிகழ்வில் சம்பத் ராம்-க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சம்பத் ராம்

சம்பத் ராம்
சம்பத் ராம்

கூட்டத்தில் ஒருவராக திரைப்பயணத்தைத் தொடங்கியவர், பெரிய தலைகளின் மிரட்டல் வில்லனாக தமிழ், மலையாளத் திரையுலகில் கலக்குகிறார்.

‘தீனா’ அஜித் தொடங்கி ‘விக்ரம்’ விஜய் சேதுபதி வரை தமிழ் சினிமாவின் அத்தனை லோக்கல் கேங்க்ஸ்டர் க்ரூப்பிலும் தவறாமல் இடம்பிடிக்கும் முக்கிய நபர்.

சினிமாவில் நடிப்பதற்காக பார்த்துக்கொண்டிருந்த வேலையைவிட்டு வந்தவருக்கு முதல் படமான முதல்வனில் நொடியில் கடந்துவிடும் கதாபாத்திரமாக அமைய, சளைக்காமல் போராடியவருக்கு அடையாளம் கொடுத்த படம் தீனா.

200-க்கும் அதிகமான படங்களில் அடியாள், ரவுடி, நெகடிவ்வான போலீஸ் என ஸ்கிரீனில் அதகளம் செய்த சம்பத்ராம், மோகன்லாலின் ‘ஜனகன்’ படம் மூலம் மெயின் வில்லனாகவும் ப்ரோமோட் ஆனார். சம்பத் ராம் நடித்த 200வது படமான ‘கசகசா’ படத்தில் ஹீரோவே அவர்தான். வெள்ளி விழா கொண்டாடும் வில்ல முக நண்பன் சம்பத் ராமுக்கு நடிகர் பிரஷாந்த் விருது வழங்கி கௌரவித்தார்.

சம்பத் ராம்
சம்பத் ராம்

“சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆனாலும், இப்போதான் முதல் முறையா ஒரு அவார்ட் வாங்குறேன். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நெறைய அவார்ட் பங்ஷன்லாம் பாக்கும் போது எனக்கு தோணும், நெறைய பேருக்கு விருது தராங்களே, நம்மளை மாதிரி ஆட்களுக்குலாம் ஏன் விருது தர யாரும் யோசிக்குறதில்லையேன்னு நினைப்பேன். அதுக்குலாம் விடிவு காலமா நீங்க விருது தர ஆரம்பிச்சிருக்கீங்க. இது நீங்க தொடர்ந்து பண்னனும். அப்போதான் எங்களை மாதிரி ஆட்களும் தொடர்ந்து நல்லா பண்ணனும், நமக்கும் அங்கீகாரம் கிடைக்கும்னு நம்புவாங்க. ஒரு உத்வேகமா இருக்கும்.” என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

Also Read – `இட்லி உப்புமா சீக்ரெட்’ – `சூர்யவம்சம்’ சுவாரஸ்யம் பகிர்ந்த சத்யப்ரியா

“இதுவரைக்கும் 212 படம் நடிச்சிட்டேன். அதுல பாதி படங்களில் வில்லனுக்குப் பின்னாடி, ஹீரோ பின்னாடி பெருசா டயலாக் பேச வாய்ப்பில்லாம தான் நின்னுருக்கேன். ஆனா, என்னையும் கவணிச்சு, ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கீங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அத்தனை பேருக்கும் நன்றி, எனக்கு வாய்ப்பு கொடுத்த அத்தனை இயக்குநர்களுக்கும் நன்றி” என பேசினார்.

இந்த விருது விழாவின் அத்தனை சுவாரஸ்யங்களையும் Tamilnadu Now Youtube Channel-ல் பார்த்து மகிழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top