Vadivukkarasi

‘அருணாச்சலம் சீனை தியேட்டர்ல பார்த்து ஜெர்க் ஆயிட்டேன்’ – வடிவுக்கரசி-யின் அனுபவம்

பிரைமரி ஸ்கூல் டீச்சர், சேல்ஸ் கேர்ள் என பல வேலைகளுக்குப் பின் சினிமாவில் நுழைந்தவர். தனது கன்னிப் பருவத்திலேயே சிகப்பு ரோஜாக்கள் மூலம் அசத்தலாகக் கவனம் ஈர்த்தவர். முதல் மரியாதையில் சிவாஜியையே மிரட்டும் பொன்னாத்தாவாக பின்னியிருப்பார்.

44 ஆண்டுகளாக திரைப்பயணத்தில் 350 படங்கள், 40 சீரியல்கள் என எனிடைம் எனர்ஜியுடன் கவர்பவர். இன்றைய டிரெண்டிங் யுகத்திலும் 2கே கிட்ஸ்களுக்கு சவால் அளிக்கிறார் நம் வடிவுக்கரசி. இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் ஒரு செல்லக் கோபத்துடனே முதல் மரியாதையில் நடிப்பில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்தார். ரஜினியை இவர் ஸ்கிரீனில் திட்டியதால் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து போராட்டம் செய்தார் ரசிகர் ஒருவர். அந்த அளவுக்கு கலவரங்களை உண்டாக்கும் சாட்டையடி சின்சியாரிட்டுக்குச் சொந்தக்காரர். பென்ச் மார்க் கேரக்டர்கள் நடிப்பதையே தனது டிரேட் மார்க்காகக் கொண்டிருக்கும் வடிவுக்கரசிக்கு தங்கக் கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது Tamilnadu Now Golden Carpet Awards. வடிவுக்கரசிக்கு Tamilnadu Now சார்பாக Lifetime Achievement விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Vadivukkarasi
Vadivukkarasi

நடிகை வடிவுக்கரசிக்கான விருதை தயாரிப்பாளர்கள் கட்ரகடா பிரசாத், கலைப்புலி எஸ்.தாணு மற்றும் குணச்சித்திர நடிகர் இளவரசு ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர். நடிகர் இளவரசு பேசுகையில், ஸ்டில் போட்டோகிராஃபராகத் தான் இருந்த சமயத்தில் முதன்முதலில் வடிவுக்கரசியை சந்தித்த அனுபவம் மற்றும் அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் பகிர்ந்திருந்தார். வடிவுக்கரசி மேடையேறி மைக் பிடித்ததும், `இந்த நிகழ்ச்சிக்காக Tamilnadu Now சார்பாக என்னிடம் முதலில் பேசியபோது, நான் ரொம்ப சாதாரணமா நினைச்சிட்டேன். அதான், நாம பேசுறவங்களைப் பார்த்து நாம சாதாரணமா நினைக்கக் கூடாதுங்குறதுக்கு எனக்கு இது ஒரு பாடம். ரொம்ப பிரமாண்டமா இருந்துச்சு உங்க வந்து பார்த்ததுக்குப் பிறகு… நிறைய பிரபலங்கள் சத்யப்ரியா, தேவயானி தொடங்கி நிறைய பேர் வந்திருக்காங்க.

நாங்க வந்து குணச்சித்திர நடிகர்களுக்கு விருது கொடுக்கப்போறோம்னு முதல்ல என்கிட்ட சொன்னாங்க. அதைக் கேட்டதும் நான் ஆச்சர்யப்பட்டேன். ஏன்னா நம்ம செல்வமணி சார் சொன்னமாதிரி, ஒரு படம்னு எடுத்துக்கிட்ட ஹீரோவுக்கு அவார்டு கொடுப்பாங்க; ஹீரோயின், டைரக்டர், கேமரா மேனுக்குக் கொடுப்பாங்க. சமீபமாத்தான் எடிட்டருக்கெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ்னு நாம இருப்போம். அவங்களையெல்லாம் மறந்துடுவாங்க. நாம வேடிக்கை பார்த்துட்டு அப்படியே இருப்போம். நமக்குக் கொடுக்கலைனா பரவாயில்லை. நம்ம கூட நடிச்சவங்களுக்குக் கொடுக்குறாங்களேனு இருக்கும்.

டைரக்டர் கட் சொன்னவுடனே, ஃபர்ஸ்ட் கிளாஸா பண்ணீங்கம்மானு சொல்வார்ல அதுதான் அவார்டு. அதோட சரி; அதுக்கப்புறம் நம்மளை யாரும் கூப்பிடுறதே கிடையாது. அந்த ஸ்பாட்ல கிடைக்குறதோட சரி. இப்போ முத்துக்காளை அண்ணன் வந்தாரு… இதோ இருக்காரே மனோகர் சார். அவர்கூட நடிக்கும்போதெல்லாம் சிரிப்பை அடக்கவே முடியாது. அந்த அளவுக்குப் பண்ணுவார். அவங்க பேரை எல்லாம் சொல்லும்போது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு… எல்லா இடத்திலும் ரெட் கார்ப்பெட் வெல்கம்தான் சொல்வாங்க.. ஆனால் இங்க Golden Carpet. வேற லெவல் அவார்டுங்க இது…’ என்று பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வடிவுக்கரசி
Vadivukkarasi

 அருணாச்சலம் படத்தின் சீனைத் தியேட்டரில் பார்த்துவிட்டு ஜெர்க் ஆனதாகப் பகிர்ந்த வடிவுக்கரசி, டப்பிங்கின்போது கூட அந்த பயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் வடிவுக்கரசி பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான விஷயங்களை மிஸ் பண்ணாமப் பார்க்க Tamilnadu Now யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் Golden Carpet Award ஷோவை முழுசா பார்க்க மறக்காதீங்க. லிங்க் கீழே..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top