ஒரு மாதத்தில் சராசரியாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் யூசர்ஸைக் கொண்டிருக்கிறது இன்ஸ்டாகிராம். அந்தத் தளத்தில் தினசரி 100 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் போட்டோக்கள், வீடியோக்களை அப்லோட் செய்கிறார்கள். இன்ஸ்டாவில் அதிகமானோர் பின்தொடரும் பிரபலங்களைத் தெரிந்திருக்கலாம் உங்களுக்கு. மில்லியன் கணக்கான லைக்குகளைக் குவித்த போஸ்டுகள் எவை தெரியுமா?
10. அரியானா கிராண்டே
அமெரிக்க பாப் பாடகி அரியானா கிராண்டே, டால்டன் கோமெஸுடன் திருமண நிச்சயம் முடிந்த செய்தியை அறிவித்த போஸ்ட், 15.6 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றிருக்கிறது.
9. பிறந்தநாள் பதிவு
கெயிலி ஜென்னர், தனது முன்னாள் பாய் பிரண்டான டிராவிஸ் ஸ்காட்டின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்த போஸ்டுக்கு 15.90 மில்லியனுக்கு அதிகமான லைக்குகள் கிடைத்திருக்கின்றன.
8. மெஸ்ஸியின் நினைவலைகள்
அர்ஜெண்டின கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, மாரடோனா மறைவு குறித்து பகிர்ந்திருந்த போஸ்டை 16.41 மில்லியனுக்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கிறார்கள்.
7. ஜெனீஃபர் அனிஸ்டன்
ஹாலிவுட் நடிகை ஜெனீஃபர் அனிஸ்டன், தனது ஃப்ரண்ட்ஸ் வெப் சீரிஸ் குழுவினருடன் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாவில் 7-வது அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவாகும். அந்த போஸ்ட்டை இதுவரை 16.44 மில்லியனுக்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கிறார்.
6. கெயிலி ஜென்னர்
அமெரிக்க சோசியல் மீடியா பிரபலம் கெயிலி ஜென்னர், தனது மகள் ஸ்டோர்மி கையைப் பிடித்தபடி இருக்கும் போட்டோ 18.51 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை ஈர்த்தது.
5. பில்லி எய்லிஷ்
அமெரிக்க பாப் பாடலி பில்லி எய்லிஷ், தனது தலைமுடியின் நிறத்தை மாற்றியதாக இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோவுக்கு 19.32 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்திருக்கிறது.
4. சாத்விக் போஸ்மேன்
பிளாக் பேந்தர் ஹீரோ சாத்விக் போஸ்மேனின் மரணத்தை இன்ஸ்டா போஸ்ட் வழியாக அவரது குடும்பம் அறிவித்தது. இந்தப் பதிவு 19.19 மில்லியனுக்கும் மேலான லைக்குகளைப் பெற்றது.
3. ரொனால்டோவின் மாராடோனா நினைவுப் பதிவு
2. அமெரிக்க பாடகரின் கடைசிப் பதிவு
அமெரிக்க பாப் பாடகர் XXXTentacion-ன் கடைசி இன்ஸ்டா பதிவுக்கு இதுவரை 23.8 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். 2018ம் ஆண்டு ஜூலையில் அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு `LOVE IS WAR’ என்ற கேப்ஷனுடன் இந்தப் போட்டோவை அவர் பகிர்ந்திருந்தார்.
1.முட்டை
இன்ஸ்டாவில் அதிகப்படியான லைக்குகளைக் குவித்த சாதனையைத் தன்வசம் வைத்திருப்பது ஒரு முட்டை. 2019ம் ஆண்டு ஜனவரியில் world_record_egg என்ற இன்ஸ்டா கணக்கில் பதிவேற்றப்பட்ட முட்டை படத்தை இதுவரை 54.9 மில்லியனுக்கும் அதிகமனோர் லைக் செய்திருக்கிறார்கள்.