விஜய் படம்னு சொன்னாலே பிரச்னைகள் கண்டிப்பா இருக்கும். துப்பாக்கில டைட்டில் பிரச்னை, தலைவால டைம் டு லீட் பிரச்னை, கத்தில இலங்கை பிரச்னை, மெர்சல்ல ஜி.எஸ்.டி பிரச்னை, சர்கார்ல கதை பிரச்னை, பிகில்ல விஜய் பேசுனது பிரச்னைனு பிரச்னைலயே பிறந்து பிரச்னையிலயே வாழ்றவரு விஜய். மாஸ்டர்ல நமக்கு எதுக்கு பிரச்னைனு கொஞ்சம் விலகினாலும், வாரிசுல ஆந்திரால இருந்து அவரை அட்டாக் பண்ண பிரச்னைகள் வந்துருக்கு. இந்த வீடியோல, விஜய் படங்கள் சந்திச்ச பிரச்னைகளைதான் பார்க்கப்போறோம்.

தளபதி 67 படத்துக்கு இருக்குற எதிர்பார்ப்பு இல்லைனாலும், வாரிசு படத்துக்கும் பயங்கரமா பலரும் வெயிட் பண்ணிட்டுதான் இருக்காங்க. விஜய்க்கு தமிழ்நாட்டுல இருக்குற ஃபேன் பேஸ் மாதிரி ஆந்திரா, கேரளாலயும் பயங்கரமான ஃபேன்ஸ் இருக்காங்க. ஆனால், இப்போ விஜய்யோட வாரிசு படத்தை ஆந்திரால வெளியிட எதிர்ப்புகள் கிளம்பியிருக்கு. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், “பண்டிகை நாள்கள்ல தெலுங்கு படத்துக்கு அதிக முன்னுரிமை அளித்து தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும். வாரிசு படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கக்கூடாது”னு அறிக்கை வெளியிட்ருக்காங்க. இதுக்கு தமிழகத்துல இருந்து சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களையெல்லாம் நாங்க கொண்டாடுறோம். எங்க ஹீரோ படம் அங்க ரிலீஸ் ஆகக்கூடாதா? தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த ஸ்டேட்மென்டை திரும்ப பெறவில்லைனா, தெலுங்கு படங்கள் இங்க ரிலீஸ் ஆகுறதுல சிக்கல் வரும். விஜய் படத்துக்கே இந்த பிரச்னை, அப்போ, மற்ற நடிகர்களின் படங்களுக்கு சொல்லவா வேணும்னு தெலுங்கு சினிமா உலகத்தை சினிமா, அரசியல், சோஷியல் மீடியா பிரபலங்கள் வைச்சு செய்துட்டு இருக்காங்க. விஜய் படத்துக்கு சிக்கல் வர்றது ஒண்ணும் புதுசு இல்லை.

துப்பாக்கி, விஜய்யோட கரியர்ல ரொம்பவே முக்கியமான படம். அந்தப் படத்துக்கு டைட்டில் அறிவிச்சதுல இருந்தே பிரச்னை தொடங்கிருச்சுனு சொல்லலாம். “கள்ளத்துப்பாக்கினு டைட்டில் ஏற்கெனவே இருந்துச்சு, எங்க படத்துல இருந்துதான் முருகதாஸ் டைட்டிலை காப்பி பண்ணிட்டாரு. டைட்டிலை முருகதாஸ் உடனே மாத்தனும். இல்லைனா, கோர்ட்டுக்கு போவேன்”னு கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் ரவிதேவன் சொன்னாரு. அதுக்கப்புறம் இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்துக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட ஆரம்பிச்சது. எந்த உள்நோகத்தோடவும் இந்தப் படத்துல இஸ்லாமியர்கள் தொடர்பான காட்சிகள் வைக்கல. அந்தக் காட்சிகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிச்சுக்கோங்க. இனிமேல் விஜய் நடிக்கிற எதாவது படத்தில் இஸ்லாமியரால நடிப்பார்”னு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி சொன்னதுக்கு அப்புறம்தான் துப்பாக்கி படம் ரிலீஸ் ஆச்சு. விஜய்க்கு அரசியல் ஆசை வந்துருச்சுனு சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் தோண வைச்ச படம் தலைவா. ஏன்னா, படத்தோட டைட்டில் தலைவா, டேக்லைன் “டைம் டு லீட்”. குறிப்பா, அப்போ ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை இந்தப் படம் ரொம்பவே கோவப்படுத்துனதா சொன்னாங்க. இதனால, அந்தப் படம் ரிலீஸ் ஆகாததுக்கு பின்னால ஜெயலலிதா இருக்குறதாகவும் பேச்சுகள் அடிபட்டுச்சு. இதுக்கிடைல, விஜய் சிகரெட் புடிக்கிறது ரசிகர்களை தப்பாக வழிநடத்தும்னு பா.ம.கவினர் எதிர்ப்பு தெரிவிச்சுட்டு இருந்தாங்க.

தலைவா படம் ரிலீஸ் ஆகும்னு சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகலை. தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததும் காரணம். ஜெயலலிதாகிட்ட இந்தப் படம் ரிலீஸ் தொடர்பா பேசலாம்னு எஸ்.ஏ.சி, விஜய் ரெண்டு பேரும் போய்ருக்காங்க. ஆனால், அவங்களுக்கு ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை. பக்கத்து ஸ்டேட்ல படம் ரிலீஸ் ஆனதா செய்திகள் வந்ததும் விஜய் ரசிகர்கள் அங்கப்போய் படம் பார்த்தாங்க. இணையத்துல இந்தப் படத்தோட ஹெச்.டி பிரிண்டும் ரிலீஸ் ஆச்சு. எவ்வளவோ விஜய்யோட தரப்பு முயன்றும், படம் ரிலீஸ்க்கு தீர்வு காண முடியலை. கடைசில விஜய் வீடியோ ஒண்ணு ரிலீஸ் பண்ணாரு. அதுல, “தலைவா படம் தவிர்க்க முடியாத காரணங்களால ரிலீஸ் ஆகலை. தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்ருக்கோம். மக்களுக்கு நிறைய நல்லது பண்ண முதல்வர், தலைவா ரிலீஸ்க்கு உதவி செய்வாருனு நம்புறோம்”னு கையை கட்டி பவ்யிமா பேசினாரு. அந்த நேரத்துல விஜய்க்கு தி.மு.க பிரபலங்கள் ஆதரவா இருந்தாங்க. ஆனால், சினிமா பிரபலங்கள் யாரும் ஆதரவு அளிக்கலை. விஜய்யோட வீடியோ ரிலீஸ் ஆன சில நாள்கள்ல தலைவா படம் ரிலீஸ் ஆச்சு. ஆனால், முதல்ல சொன்ன ஆகஸ்ட் 9-ம் தேதியை இன்னும் ரசிகர்கள் மறக்காமல் ஒவ்வொரு வருஷமும் கொண்டாடிட்டுதான் இருக்காங்க.

கத்தி படமும் வழக்கம்போல பிரச்னைகளை சந்திச்சது. இந்தப் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இலங்கை ராஜபக்ஷேவின் ஆதரவு பெற்ற நிறுவனம், அதனால், கத்தி படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாதுனு தமிழ் தேசியவாதிகள் சொல்லத் தொடங்குனாங்க. தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ‘கத்தி’ படத்தை வெளியிட்டால் போராட்டம் நடத்துவோம்னு அறிவிச்சாங்க. தயாரிப்பாளர்கள் காவல் நிலையத்துக்குப்போய் இதுதொடர்பா பேசுனாங்க. அதிகாரிகள், இதை நீங்க தயாரிப்பாளர்கள் சங்கத்துலதான் பேசணும்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் தயாரிப்பாளர்கள் சங்கத்துல பேச்சு வார்த்தை நடந்துச்சு. கடைசில, கத்தி படத்தோட விளம்பரங்கள்ல லைகா நிறுவனம் பெயரை நீக்கி வெளியிட்டாங்க. படமும் ரிலீஸ் ஆச்சு. இந்தப் பிரச்னை முடிஞ்சதும் விஜய் வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். கத்திக்கு அப்புறமா புலி படம் ரிலீஸ் ஆச்சு. கரெக்டா அன்னைக்கு விஜய்க்கு சொந்தமான இடங்கள்ல வருமான வரித்துறையினர் சோதனை பண்ணாங்க. முதல் காட்சி திரையிடலை நிறுத்துனாங்க. பிரச்னைகள் எல்லாம் முடிஞ்ச பிறகு பகல்லதான் முதல் காட்சி ரிலீஸ் ஆச்சு.

மெர்சல் படத்துக்கு வந்த பிரச்னைகளை பார்த்துட்டு அவரோட ரசிகர்கள் எல்லாம் பழகிப்போச்சு, விஜய் படத்துக்கு பிரச்னை வரலைனாதான் பிரச்னைனு மீம்ஸ்லாம் போட்டுட்டு இருந்தாங்க. மெர்சல் படத்துக்கான பிரச்னை தேசிய அளவில் பேசப்பட்டுச்சு. முதல்ல இளைய தளபதினு இருந்ததை தளபதினு மாத்துனாரு. அப்போ, அரசியல் ஆசையில் விஜய்யா?னு திரும்பவும் டிபேட்லாம் பண்ண ஆரம்பிச்சாங்க. முதல்ல டைட்டில் பிரச்னை ஆரம்பிச்சுது. இடைக்காலத்தடைலாம் வந்த பிறகு ஒருவழியா டைட்டில் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைச்சாக்காங்க. அப்புறம் அந்தப் படத்துல வந்த ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களைக் குறிப்பிட்டு பா.ஜ.க கட்சியினர் பிரச்னை பண்ண ஆரம்பிச்சாங்க. விஜய்யை ஜோசப் விஜய்னு சொல்லி அடையாளப்படுத்துனாங்க. மெர்சல் படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு பா.ஜ.க-வும் முக்கியமான காரணம்னு சொல்லி ஓட்ட ஆரம்பிச்சாங்க. ஹெச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஒருத்தர் விடாமல் எல்லாரும் விஜய்யை விமர்சிச்சு, வாங்கி கட்டிக்கிட்டாங்க. ஜோசஃப் விஜய்தான் உங்களுக்குப் பிரச்னை என்றால், இனி விஜய்யைவிட ஜோசஃப் விஜய்க்கு 100 மடங்கு துணை நிற்போம்னு விஜய்யை புடிக்காதவங்ககூட அவருக்கு ஆதரவா நின்னாங்க.
Also Read – விஜய் முதல் பிரதீப் வரை… நெகட்டிவிட்டியை எப்படி ஹேண்டில் பண்ணாங்க?
சர்கார் படத்தோட பிரச்னை எல்லாருக்குமே தெரியும். கதைதான் பிரச்னையே. சிவாஜி ஓட்டை மாற்றிப் போட்டதை வைச்சு ஏற்கனவே ஒருத்தர் கதை பண்ணிருந்ததாகவும் அதை முருகதாஸ் திருடிட்டதாகவும் பிரச்னை வந்துச்சு. அப்புறம் அந்தக் கதை என்னோடதுனு சொன்ன வருண் ராஜேந்திரன் பெயரை படத்துல போடுறதா சொன்னதும் பிரச்னை முடிஞ்சது. ஆனால், ஆடியோ லாஞ்ச்ல விஜய் பேசுனது, படத்துல அரசியல் பேசுனது, ஒருவிரல் புரட்சி பாட்டுலாம் சேர்ந்து பெரிய டிபேட்டே போச்சு. பிகில் படத்துக்கு பெருசா எந்த பிரச்னையும் வரலை. ஆனால், விஜய் பேசுனதுதான் பெரிய பிரச்னையே. “யாரை எங்க உட்கார வைக்கனுமோ, அங்க அவரை உட்கார வைக்கணும்”னு பேசுனது செம பரபரப்பாச்சு. எடப்பாடி பழனிடாமிய தான் விமர்சனம் பண்றாருனுலாம் அடுத்த பல நாள் பேச்சு ஓடிச்சு. ஃபஸ்ட் லுக் போஸ்டர் வந்தப்போ, கறி வெட்டுற கட்டை மேல விஜய் கால் வைச்சதை வைச்சு போராட்டம்லாம் நடந்துச்சு. படம் ரிலீஸ் ஆனப்பிறகு, கால்பந்து விளையாட்டையே தப்பா எடுத்து வைச்சிருக்காங்கனு கால்பந்து பிரியர்கள் விமர்சனம் பண்ணாங்க. மாஸ்டர் படம் ஷீட்டிங் அப்போ, அவர் வீட்டுலலாம் வருமான வரித்துறை சோதனை பண்ணாங்க. அதுக்கு அமையா நெய்வேலில வேன் மேல ஏறி செல்ஃபியை போட்டு டிரெண்ட் பண்ணிட்டு போய்ட்டாரு. பீஸ்ட் படம் ரிலீஸ் ஆனப்பிறகும் இஸ்லாமியர்கள் மேல திரும்பவும் விஜய் வெறுப்பை விதைச்சிருக்காருனு விமர்சனங்கள் வந்துச்சு.
விஜய் படம்னு சொன்னாலே பிரச்னைகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சாயத்து இருக்காது. அப்படிதான், வாரிசு படத்துக்கும். இனி டிரெய்லர்லாம் வந்தாதான் தெரியும். என்னென்ன பண்ணப்போறாங்கனு.
olos1c
Thank you, your article surprised me, there is such an excellent point of view. Thank you for sharing, I learned a lot.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your article helped me a lot, is there any more related content? Thanks!