ரியல் ரஜினி

ரியல் ரஜினி.. ரீல் ரஜினி.. யார் நல்லவர்?

இந்திய சினிமால மட்டுமில்ல, உலக அளவுல சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஃபேன்ஸ் அதிகம். ஜெயிலர் படத்தோட கலெக்‌ஷன்லாம் பார்த்து அவருக்கு போட்டியான ஸ்டார்ஸ்லாம் மிரண்டுட்டாங்கனே சொல்லலாம். அவ்வளவு மாஸா போய்ட்ருக்குற நேரத்துல, யோகி ஆதித்யநாத் கால்ல விழுந்து அவருக்கு அவரே சூனியம் வைச்சு மொத்த கோட்டையும் அழிக்க சொல்லி, முதல்ல இருந்து அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனால், அதுக்குலாம் அவர் கொடுத்த விளக்கத்தைப் பார்த்து ரஜினி ஃபேன்ஸே கொஞ்சம் ஜெர்க் ஆகி பொலம்புறாங்க. ரீல் லைஃப்ல இவ்வளவு மாஸா எல்லாம் பண்ண தெரிஞ்ச உங்களுக்கு, ரியல் லைஃப்ல எப்படி இருக்கணும்னு தெரியாமல் போச்சேனு எல்லா பேரும் சேர்ந்து அடிக்கிறாங்க. நமக்கு இதெல்லாம் பார்க்கும்போது, ஆடியோ லாஞ்ச்ல கழுகு, காக்கானு கதை சொன்னதுலாம் அப்போனு தான் கேட்க தோணுது.

ரஜினி ஸ்டைல் ஐகான்.. நிறைய பேரோட இன்ஸ்பிரேஷன். அவர் ரீல் லைஃப், ரியல் லைஃப் எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட்டா இருக்கணும்ன்றது சாதாரண விஷயம். ஆனால், மனுஷன் ரியல் லைஃப்ல பண்ற அட்ராசிட்டி எல்லாம் பார்த்தா.. மொவனே கொலை காண்டு மோடுதான் வரும். தூத்துக்குடில ரஜினினா யாருனு கேட்டது தப்பே இல்லைனு தோணுற மாதிரி பல வேலைகளை மனுஷன் அப்பப்போ பண்ணிட்டு இருக்காரு.

ரியல் ரஜினி.. ரீல் லைஃப் ரஜினி.. ரெண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தா யாரு பெஸ்ட்? யாரு நல்லவர்?

அங்க மாஸு.. இங்க தூஸு..!

தமிழ் சினிமால எல்லா நடிகர்களுக்கும் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் ரொம்பவே முக்கியம். அந்த ஸ்கிரீன் பிரசன்ஸ்ல தலைவர் வந்தாலே சும்மா வேறமாறி சம்பவம்தான். 16 வயதினிலே தொடங்கி ஜெய்லர் வரைக்கும் நடிச்சு பட்டையகிளப்பிட்டாடு. அதுக்கப்புறம் குறைஞ்சது 1000 ஹீரோக்கள் வந்துட்டு போய்ருப்பாங்க. யாராலயும் ரஜினியோட அந்த பிரசன்ஸை கொண்டு வர முடியல. அதே மாதிரி நிறைய ஹீரோக்கள் ரஜினியோல ஸ்டைலைப் பார்த்து காப்பியடிச்சு சர்வைவ் பண்ணிட்டு இருக்காங்க. எக்ஸாம்பிள்னு சும்மா யோசிச்சாலே அவ்வளவு பேரை சொல்லலாம். ஆனால், ரியல் லைஃப்ல இவர் பண்ற சேட்டைகள் இருக்கே. தன்னை அடக்க வந்த ஆள்கள், வில்லன்கள்கிட்டலாம் தூக்கி போட்டு மிதிப்பேன்னு சொன்ன அதே ரஜினி, ரியல் லைஃப்ல தன்னைவிட வயது குறைந்த ஆள்களோட கால்ல விழுறாரு. கேட்டா.. அவர் என்னைவிட சின்னவரு.. யோகி வேற அதுனால அவர் கால்ல விழுறது வழக்கம்ன்றாரு. பயணம் படத்துல வர்ற காமெடி சீன்கள் இருக்கு.. சினிமா வேற வாழ்க்கை வேறனா.. ஷைனிங் ஸ்டார்னு பட்டம் கொடுத்தப்போவே வேணாம்னு சொல்ல வேண்டியதானனு கேப்பாரு.. டக்னு அந்த நியாபகம் வந்துச்சு. அதேமாதிரி கபாலில, நான் கால் மேல கால் போட்டு உட்கார்றதுதான் உன் பிரச்னைனா, நான் கால் மேல கால் போடுவேன்டா, கோர்ட் சூட் போடுறது உனக்கு பிரச்னைனா, நான் கோர்ட் சூட் போடுவேன்டா.. ஸ்டைலா.. கெத்தா.. சிலிர்த்து போய் சில்லறைலாம் விட்டெறிஞ்சேன். ஆனால், ரியல் லைஃப்ல கால்ல போய் விழுந்துருக்கீங்க. தாய்க்கு ஆபத்துனா ஆம்புலன்ஸ் கூப்பிடுவேன்.. தாய் நாட்டுக்கு ஆபத்துனா நானே ஓடுவேன்னு சொன்னதுலாம் பொய்யா தலைவரே. இதுல இருந்து என்ன தெரியுது? எது வியாபாரம் ஆகுற கண்டெண்டுனு புரிஞ்சு, தெரிஞ்சு தலைவர் பண்றாப்புல!

வள்ளலா? வாய் சவடாலா?

பாட்ஷா, அண்ணாமலை, முத்துனு எல்லா படங்கள்லயும் இருக்குற பொதுவான விஷயங்கள்னு பார்த்தால்.. ஏழைகளுக்கு உதவுறது, வாரி வழங்குறதுதான். கிட்டத்தட்ட எல்லா படங்கள்லயும் வாரி வழங்கி மட்டும்தான்  தொடர்ந்து நடிச்சிட்டே இருந்துருக்காரு. ஆனால், நிஜ லைஃப்ல பெருசா மனுஷன் ஹெல்ப் பண்ணாருனு தகவலே வராது. வலது கை கொடுக்குறது இடது கைக்கு தெரியாமல் கொடுக்குறாரானு தெரியல. ஆனால், ரீசண்ட் டைம்ல அவருக்கு ஹிட் கொடுத்த இயக்குநர்களுக்கு எதுவும் அவர் பெருசா வாங்கி கொடுத்ததுலாம் இல்லைனே சொல்லலாம். நெல்சன்கூட ரஜினிகிட்ட இருந்து ரோல்ஸ் ராய்ஸ் எதிர்பார்க்குறாரு போல. அது மட்டும் இல்லை. திரைப்படங்கள்ல இவ்வளவு போல்டா பேசுற ரஜினி, நிஜ வாழ்க்கைல ஒரு முடிவை எடுக்க அவ்வளவு திணறுராரு. அதுவும் சமீப ஆண்டுகள்ல ரொம்பவே அதிகம். கட்சியெல்லாம் நமக்கெதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு, ஜெயலலிதாவுக்கு எதிரா பேசுனதுனு போல்டா சில விஷயங்களை அப்படி பண்ணியிருக்காரு. இப்போ என்னடான்னா.. நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால், தேதி பின்னர் அறிவிக்கபடும்னு சொல்லி, நாளைக்கு நாளைக்குனு இழுத்தடிச்சு, மீட்டிங் போட்டு, கடைசில நானே சுகர் பேஷண்டு, கட்சிலாம் மேய்க்க முடியாதுனு சொல்லிட்டாரு. இதுக்கா அவ்வளவு பண்ணீங்க?!

ஷமூகமா? ஷமூக விரோதிகளா?

எல்லா படங்கள்லயும் மக்களுக்கு ஒரு பிரச்னைனா பின் வரிசைல இருந்து முன் வரிசைக்கு வந்து முன்னாடி நின்னு கெட்டவங்களை பொழக்குறதுதான் மனுஷனோட வேலையாவே இருக்கும். ஆனால், நிஜத்துல அதே மக்களுக்கு எதிரான கருத்துள்ளவர்களுக்கு ஆதரவா செயல்படுவாரு. எக்ஸாம்பிள் தூத்துக்குடி சம்பவத்தை சொல்லலாம். விஜய் உட்பட நிறைய பல நடிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவா நின்னு முடிந்தளவு குரல் கொடுத்தாங்க. நம்ம தலைவர் அங்க போய் கொடுத்த பேட்டில ஒட்டு மொத்த தமிழ்நாடும் அலறிடுச்சு அப்டினே சொல்லலாம். மக்களோட போராட்டத்துக்குள்ள ஷமூக விரோதிகள் புகுந்துட்டாங்க. அது தான் இந்த சம்பவத்துக்கு மிகப்பெரிய காரணம்னு சொல்லியிருக்காரு. மக்கள் அவரை எங்கக் கொண்டு போய் உட்கார வைச்சிருக்காங்க. ஆனால், மனுஷன் இப்படி பேசிட்டு திரியுறாரு. அரசை கண்டிச்சு, துப்பாக்கி சூட்டை கண்டிச்சு ஒரு வார்த்தைகூட பேசலை. ஆனால், எத்தனை படத்துல மக்களுக்கு ஒரு பிரச்னைனானு டயலாக் பேசி நடிச்சிருப்பாரு. தூத்துக்குடில காயமடைந்தவர்களை பார்க்கப்போகும்போது, பாதிக்கப்பட்ட பையன்.. யாரு நீங்கனு கேட்பாரு. நான்தாங்க ரஜினினு சொல்லுவாரு. ரஜினி ஃபேன்ஸ் கொந்தளிச்சாலும்.. அந்தப் பையன் கேட்ட கேள்வில இருக்குற உள்நோக்கத்தை புரிஞ்சுகிட்டுதான் ஆகணும். வேற வழியில்லை. இப்படியாக, மக்களுக்கு ஒரு பிரச்னைனா பாதிக்கப்பட்டவங்க பக்கம் நிக்காமல், எப்பவும் பாதிப்பை ஏற்படுத்துறவங்க பக்கம் மட்டும்தான் நிப்பாரு, நம்ம சூப்பர் ஸ்டார்.

சேலத்தில் 1971 ஆம் ஆண்டு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் பேரணி ஒண்ணு நடத்தினாரு. அதுல கடவுள்களான ராமர் மற்றும் சீதாவின் நிர்வாணச் சிலைகளை எடுத்துட்டுப் போனாங்க. இந்த சம்பவம் தொடர்பாக எந்த செய்தித் தாள்களும் செய்திகளை வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்ததுனு ரஜினி துக்ளக் விழால பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் துக்ளக் இதழை படிச்சா அறிவு வளரும்னு சொல்லி தன்னோட அகவழி பயண கருத்துகளை சொல்லி, அப்போ மற்ற இதழ்கள் படிக்கிறவன் அறிவு வளராதானு பலரையும் பொங்க வைச்சாரு.  

Also Read – `உங்ககூட பேசுனது மகிழ்ச்சியா இல்ல…’ ஜெயலலிதா பிரஸ்மீட் அலப்பறைகள்!

வயலன்ஸ்.. சைலன்ஸ்!

ஏன்டா, அவர்கிட்ட எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு.. அதெல்லாம் விட்டுட்டு இவ்வளவு நெகட்டிவான விஷயங்களை மட்டும் சொல்றியேனு கேக்கலாம். கேக்குறவங்களுக்கு பதில்.. சும்மா இருக்கணும், இல்லை, நியாயமா பேசணும். செயல்களை காமிக்கணும். இல்லைனா.. மீம் கிரியேட்டருக்கு கண்டண்ட்தான். ஒரு விஷயத்துல அவரை பாராட்டணும். அமைதியா இருப்போம், சைலன்ஸ் முக்கியம், காந்தி வழி பயணம்னு பேசும்போதுலாம் சொல்லுவாரு, அப்பப்போ.. அவரோட ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணுவாரு அதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், படங்கள்ல வயலன்ஸ் ரொம்ப அதிகமா இருக்கும். மொத்தத்துல ரியல் லைஃப், ரீல் லைஃப்னு பார்த்தா ஏட்டிக்குப்போட்டியாதான் அவரோட செயல்கள் இருந்துருக்கு. அதனால, நல்லவர் அப்டின்ற முடிவுக்கு வருவது ரொம்பவே டிப்ளோமெட்டிக் விஷயம்.

ரஜினி ஃபேன்ஸ் கோவப்படாமல் என்ன சொல்ல வர்றோம்ன்றதை புரிஞ்சுகிட்டு கமெண்ட் பண்ணா நலம்!

2 thoughts on “ரியல் ரஜினி.. ரீல் ரஜினி.. யார் நல்லவர்?”

  1. I recently noticed that you’ve taken the time to visit my website, and I wanted to express my heartfelt gratitude for your interest. Your support means a lot to me, and I’m truly grateful for your visit.

  2. I recently noticed that you’ve taken the time to visit my website, and I wanted to express my heartfelt gratitude for your interest. Your support means a lot to me, and I’m truly grateful for your visit.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top