ராஜபாளையம் நாய்

புலியை மிரட்டும் ’செங்கோட்டை’; பாம்பை விரட்டும் ’கட்டைக்கால்’ – நாட்டு நாய் வகைகள்!

நம்மில் பெரும்பாலானோருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் தனி இன்ட்ரெஸ்ட் இருக்கும். அதில், நிறைய நன்மையும் இருக்கு. மன அழுத்தம் குறையும், ரத்த அழுத்தம் ஏறாமல் இருக்கும். பெட் என்றாலே நாய் பிரியர்கள்தான் அதிகம்னே சொல்லலாம். எனக்குமே நாய் வளர்க்கணும்னு ஆசை. ஆனா அது என்ன பரீட்?!

Pet Dog-னு சொன்னாலே எல்லாருக்கும் லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர்தான் சொல்வாங்க. ஏன்னா அந்த நாய்கள் ரொம்ப ஃபிரண்ட்லி. இதுவே காவல் நாய்னு சொன்ன ராட்வீலர், டாபர்மேன், கிரேட்டேன். சரி ஷோவா இருக்கணும்னா ஷிட்ச்சு, பக், பீகுள் இப்டி எல்லாம் வெளிநாட்டு ப்ரீட்களைப் பரிந்துரை பண்ணுவாங்க.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாய் வகைகள் என்னென்ன இருக்கு, அதுல எத்தனை இருந்த இடம் தெரியாம போச்சு, எத்தனை அழிவின் விளிம்பில் இருக்குனு தெரியுமா? இந்த நாய்கள் நமக்கு ஃபிரெண்ட்லியாகவும் இருக்கும், அதே சமயம் உயிரைக் கொடுத்து காவல் காக்கும் .அது என்னன்ன ப்ரீட்னு தெரிஞ்சிக்கணும்னா, வீடியோவை முழுசாப் பாருங்க.

நாய்களுக்கு மூதாதையர் ‘இந்தியன் பரியா டாக்ஸ்’, அதாவது தெருநாய்கள். நீங்க பாக்குற தெருநாய்கள் கலப்பினம் ‘மோங்கறல்ஸ்’. இந்த வகை நாய்களுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி அதிகம். கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு சர்வைவ் செய்ய வல்லவை.

செங்கோட்டை

இந்த வகை நாய்கள் மேற்குத் தொடர்ச்சி மலை பக்கம் அதிகமா காணப்பட்டதா சில கல்வெட்டுகள்ல இருந்தது. புலியே வந்தாலும் எதிர்த்து நிற்குற தைரியம் இந்த வகை நாய்களுக்கு இருக்கும்னு சொல்வாங்க. சோகமான விஷயம் என்னென்னா இந்த வகை நாய்கள் இப்ப கிடையாது. முழுமையா அழிஞ்சுடுச்சுனு சொல்றாங்க. ஒரு சிலர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Rhodesian Ridgeback தான் அந்த ப்ரீட் னு ஏமாத்திட்டு சுத்துறாங்க.

மலையேறி

கேரளா பார்டர்ல இந்த வகை நாய்கள் அதிகமா இருந்துச்சு. இந்த வகை நாயும் இப்ப இல்ல; சுத்தமா அழிஞ்சிடுச்சு. அடுத்து வர சந்ததிகளுக்கு வரைஞ்சுதான் காட்டணும்.

மந்தை , மண்டை

ராம்நாடு மந்தை நாயை சிலபேர் மண்டை நாய்னு சொல்லுவாங்க. ஏன்னா அதோட தலை அவ்வளவு பெருசா இருக்கும். இந்த வகை நாய்கள் சிலர் இன்னும் இருக்குனு சொல்றாங்க. இல்ல, அது ஒரிஜினல் ப்ரீட் இல்லை; கலப்பினம், அந்த வகை அழிஞ்சிடுச்சுனு சிலபேர் சொல்றாங்க.

கட்டைக்கால்

Dash Hound கேள்விப்பட்டிருப்பீங்க கிட்டத்தட்ட அதே உடல்வாகுதான் குட்டையா கொஞ்சம் நீளமா இருக்கும். இந்த வகை ப்ரீடுகள் விவசாயிகளுக்கு உதவியா இருந்துச்சு. அதாவது வயல்களுக்கு இடையே இருக்க பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை அசால்ட்டா கையாளும். இன்னும் காரைக்கால் பக்கம் போனா கிடைக்கும்னு சொல்றாங்க. ஆனா இதோட மொத்த எண்ணிக்கையே 60-ல் இருந்து 80 வரைதான் இருக்காம்.

அலங்கு (Alangu)

பேருக்கு ஏத்தமாதிரி கம்பீரமான ப்ரீடு. சோழ மன்னன் போர்களில் யூஸ் பண்ணாருன்னு ஒரு கதை இருக்கு. “என்ன என்ன சொல்றான் பாருங்கன்னு” கமெண்ட் பண்றதுக்கு முன்னாடி நீங்களும் கொஞ்சம் தேடிப் பார்த்து கமெண்ட் பண்ணுங்க. இந்த வகை நாய்களை எங்க பார்க்கலாம்னா, தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல மட்டும்தான் பாக்க முடியும். சிலர் “புள்ளி குட்டா” ப்ரீட் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் பக்கம் பாக்கலாம். அதை இதோடு ஒப்பிட்டு வித்துட்டுருக்காங்க. ஆனா அது இது இல்லை.

அலுங்கு (Alunku)

இது ஒரு அரிய வகை ப்ரீட். அதாவது இந்த வகை நாய்களுக்கு முடியே இருக்காது. இப்ப மட்டும் இந்த வகை நாய்கள் இருந்திருந்தா பல Dog Show-க்கள்ல தமிழ்நாட்டுக்கு பரிசு அடிச்சுக் கொடுத்திருக்கும். இதுக்கு என்ன அர்த்தம்னா இதுவும் அழிஞ்சுடுச்சு. முன்னாடி தஞ்சாவூர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் இருந்தது. இன்னமும் இது ஆந்திரா சைடு இருக்கு.

கோம்பை

அழிவின் விளிம்பில் இந்த வகை நாய்கள் இருக்கு. இப்ப பல பேருக்கு இந்த நாயைப் பத்தின விழிப்புணர்வு இருக்கு. ஏன்னா இவர் வீரமானவர், சேட்டைக்காரர், காவல்காரர். பெர்சனலா எனக்கு ரொம்ப புடுச்ச ப்ரீட். தேனி, சிவகங்கை பக்கம் இந்த வகை நாய்களை பராமரிச்சுட்டு வராங்க. அப்படியும் சில கலப்பினம் இருக்கு. பார்த்து வாங்கணும். செம்மண் கலர்ல இருக்கும். வாய் பகுதி கருப்பு மாஸ்க் போட்டமாதிரி இருக்கும். இந்த வகை நாய்கள் எஜமானுக்கு விசுவாசமானது. எதுக்கும் பயப்படாத குணாதிசயம். நீங்க வளர்த்துருக்கீங்கன்னா கமெண்ட்ல சொல்லுங்க.

ராஜபாளையம்

இந்திய ராணுவத்துல இடம் பிடிக்கிற அளவுக்கு திறமை வாய்ந்த ப்ரீட் இந்த நாய். நல்ல உடல் வலிமை மற்றும் மோப்பத்திறன் உடையது. இந்திய வகை நாய்களிலேயே பியூர் வெள்ளை, இந்த நாய் வகை மட்டும் தான். அது இதுக்கே உரித்தான அழகு. பண்ணை வீடா இருந்தாலும் சரி சிட்டி வீடா இருந்தாலும் சரி, ஆல் ஏரியா மை கண்ட்ரோல்னு கெத்தா உலாத்தும்.

சிப்பிப்பாறை & கன்னி

இந்த ப்ரீட் பரியேறும் பெருமாள் படத்துல பாத்திருப்பிங்க. அப்ப ஃபேமஸாச்சு. சிப்பிபாறைக்கும் கன்னி பிரீடுக்கும் உடல்வாகுல பெருசா வித்தியாசம் இருக்காது இரண்டுமே கூர்மையான முகத்தோற்றம் வேகமா ஓடுறதுக்குனே ஏரோ டைனமிக் உடல் அமைப்பு. இந்த நாய்கள் பெரும்பாலும் வேட்டைக்காக பயன்படுத்தினாங்க. இதையெல்லாம் கரெக்ட்டா ட்ரெயின் பண்ணினா உலகத்துலயே வேகமா ஓடுற நாய் வகைகள்ல நம்ம தமிழ் பரீட் இதுவாதான் இருக்கும்.

பெட் வளக்குறதுனு முடிவு பண்ணிட்டிங்கனா நம்ம பாரம்பரிய நாட்டு இன நாய்களை கன்சிடர் பண்ணுங்க. அட்லீஸ்ட் அந்த இனம் அழியாம பாத்துக்கலாம்… உங்களுக்கு என்ன நல்லதுன்னு கேட்டீங்கன்னா பட்ஜெட். ஆமா, வெளிநாட்டு நாய்களோடு ஒப்பிடும்போது, நாட்டு நாய்கள் வாங்குற காசும் கம்மி; நம்ம என்ன தர்றோமோ அதை சாப்பிட்டு ஆரோக்கியமாவே இருக்கும். நம்ம ஊரு காலநிலைக்கும் ஈஸியா செட் ஆகிடும்.

நான் எதுவும் ப்ரீட் மிஸ் பண்ணிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க. உங்களுக்கு புடிச்ச ப்ரீட் எது.. சப்போஸ் வாங்குறதா இருந்தா என்ன ப்ரீட் வாங்குவிங்க?! அதுவும் கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – அடேய் சும்மா இருங்கடா… டெலிவரி பாய்ஸ் ரீல்ஸ் அலப்பறைகள்!

1 thought on “புலியை மிரட்டும் ’செங்கோட்டை’; பாம்பை விரட்டும் ’கட்டைக்கால்’ – நாட்டு நாய் வகைகள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top