எதைச் சொன்னாலும் சரியா புரிஞ்சுக்காத, புரிஞ்சுக்க அதிகமான நேரம் எடுக்குற, பள்ளிக்கூட வாத்தியார்கள் அத்தனை பேரையும் கடுப்பேத்துற, கூட படிக்குற மத்த மாணவர்களை எல்லாம் வெறுப்பேத்துற ஒரு கேரக்டரைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணும்?
நான் “டான்” படம் பத்தி பேசல… மேல சொன்ன அத்தனை சர்வலட்சனங்களும் பொறுந்திய சாட்சாத் “Internet Explorer” பிரவுசர் பத்திதான் பேசுறேன்.

ஒருத்தன் 26 வயசுல உயிரை விட்டா எல்லாரும் பரிதாபப்படுவோம்ல… ஆனா 26 வருடங்களுக்குப் பிறகு மொத்தமா இண்டெர்ந்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு முடிவுரை எழுதி இனி அவ்வளவுதான்னு ஒரு அறிவிப்பு வந்ததுக்கு எவனாச்சும் வருத்தப்படுவான்னு பார்த்தா, எல்லாரும் மீம் போட்டுக் கொண்டாடுறானுங்க… இதுக்கான காரணம் என்னவா இருக்க முடியும்?
நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க, ஒரு காலத்துல இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் டான். டிஜிட்டல் களத்துல நடந்த முக்கியமான போர்களில் ஒன்னான “First Browser War”-ல Internet Explorer செய்த சம்பவங்கள் என்ன தெரியுமா? சுருக்கமா சொல்லனும்னா மெட்ராஸ் பட ஜானி தான் எக்ஸ்ப்ளோரர்.
ஒரு பக்கம் பயன்படுத்துற யூசர்ஸுக்கும், இன்னொரு பக்கம் web developers-க்கும் எக்கச்சக்க தொல்லைகள் கொடுத்தாலும்… 1995-ல் எக்ஸ்ப்ளோரர் அறிமுகப்படுத்தப்பட்டப்போ செம ஹிட். அதுவரைக்கும் பிரவுசர் உலகத்துல கோலோச்சிகிட்டிருந்த Netscape Browser சரிவை சந்திச்ச பிறகு முன்னாடியே சொன்ன மாதிரி எக்ஸ்ப்ளோரர் தான் அந்த ஏரியாவில் டான். அதாவது 2003-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பிரவுசர்களில் 95% எக்ஸ்ப்ளோரர் தான். அடுத்த 20 வருஷத்துக்குள்ள மொத்தமா சரிஞ்சதுக்கு முக்கியமான சில விஷயங்களை சொல்லலாம்.

2004-ல் Firefox அறிமுகப்படுத்தப்பட்டதும் “ஓ பிரவுசர்னா இப்படித்தான் இருக்கனுமா, ஓ இதெல்லாம் செய்ய முடியுமா, இவ்வளவு வேகமா இருக்குமான்னு” மக்கள் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ அபப்டியே நம்ம பக்கம் திரும்புவானுங்களேன்னு கிரிகாலன் மேஜிக் ஷோ நடத்துன வடிவேலு கணக்கா Internet Explorer முழிக்க ஆரம்பிச்சது. அடுத்த நான்கு வருஷத்துல கூகுள் குரோம் பிரவுசரும் அறிமுகமானதும்… இதையாடா ராத்திரி முழுக்க ஒட்டிகிட்டிருந்தனு மக்கள் மொத்தமா எக்ஸ்ப்ளோரரை முடிச்சு விட்டாங்க.
முயலுக்கும் ஆமைக்கும் நடந்த பந்தயத்துல இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கலந்துகிட்டா யார் தோப்பாங்க?
பரமார்த்த குருவோட கடைசி சீடர் பெயர் என்ன தெரியுமா?
இந்த உலகத்தின் மிகவும் ஸ்லோவான ஒரு பொருள் என்னன்னு நீங்க கூகிள்ல தேடி இருக்கீங்களா? அதுக்கு என்ன விடை கிடைக்கும் தெரியுமா?
இப்போ இருக்க 2K kids-லாம் பூமர்களைப் பார்த்து “உன் சோப் என்ன ஸ்லோவாநு” கிண்டல் அடிக்குறாங்க… ஆனா, அந்த பூமர் அங்கிள்களே இதுதான் ஸ்லோனு கிண்டலடிச்சு கை கழுவின ஒரு விஷயம் என்ன தெரியுமா?
இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் “Internet Explorer”
அப்படி மாறி வந்த இணையத்தோட டெக்னாலஜிக்கு தன்னை அப்டேட் பண்ணிக்காம இப்படி ஒரு கெட்ட பேரை சம்பாதிச்சது ஒரு பக்கம்னா, போட்டியாளர்களா வந்த மத்த பிரவுசர்கள் அதிக திறனோடவும் எக்கச்சக்க Addons, Customization, Securityனு பல விஷயங்களில் சிறப்பா செயல்பட்டாங்க.
யூசர்களை இப்படி ஒரு பக்கம் படுத்தி எடுத்த மாதிரியே Web developerகளையும் படுத்தி எடுத்துச்சு எக்ஸ்ப்ளோரர். இப்படி எல்லா பக்கமும் அடிவாங்குன எக்ஸ்ப்ளோரரை இத்தனை வருசம் மக்கள் எப்படி பயன்படுத்தினாங்கன்றதே ஓர் ஆச்சரியமான விஷயம் தான்.
ஏன் அதைப் பயன்படுத்தினாங்க தெரியுமா? Windows OS கூடவே வந்த ஒரே காரணத்தினால், Chrome/firefox browser download செய்யுறதுக்காக மட்டுமே கடந்த 15 வருசத்துக்கும் மேல பயன்படுத்தி இருக்காங்க. இதெல்லாம் மைக்ரோசாப்ட்டுக்குத் தெரியாதா? அதை அப்கிரேட் செய்யாமலே ஏன் விட்டாங்க அப்படினுலாம் யோசிக்குறீங்களா? ரமனா படத்துல ஒரு டயலாக் வருமே “வலிக்காம கொல்லுங்க சார்” அதையே தான் மைக்ரோசாப்ட்டும் செஞ்சாங்க.
2016-ம் வருஷம் மைக்ரோசாப்ட் Edge னு ஒரு பிரவுசரைக் கொண்டு வந்தாங்க, அப்போவே எக்ஸ்ப்ளோரருக்கான new feature development நிறுத்திட்டாங்க, அடுத்த சில வருஷங்களில் updates நிறுத்திட்டாங்க, அடுத்த சில வருசங்களில் சப்போர்ட்டையும் நிறுத்திட்டாங்க. இந்த 2022 ஜூன் மாதத்தோட மொத்தமா வலிக்காம எக்ஸ்ப்ளோரரைக் கொண்ணுட்டாங்க.
நீங்க இந்த Internet Explorer பிரவுசரைப் பயன்படுத்தி இருக்கீங்களா? அதுல நீங்க ரொம்ப கடுப்பான விஷயம் என்னன்னு கமெண்ட்ல சொல்லுங்க. எக்ஸ்ப்ளோரர்லாம் யார் ப்ரோ யூஸ் பண்ணுவாங்கனு கேக்குற 2K kids-னா நீங்க யூஸ் பன்ற பிரவுசர் என்னன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read – விக்ரம்ல பட்ட பாடு போதும்… ஸ்பாய்லர்ஸ்ல இருந்து எப்படி தப்பிக்கலாம்?!


Your article helped me a lot, is there any more related content? Thanks!
I do trust all of the concepts you’ve ofgered on your post.
They’re very convincing and will definitely work.
Nonetheless, the posts are very brief for beginners. Could you please lengthen them
a bit from next time? Thanks for the post. https://Glassi-freespins.Blogspot.com/2025/08/how-to-claim-glassi-casino-free-spins.html
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.