90s கிட்ஸ் எப்படி கோவா டூர் போகணும்னு கனவோட சுத்துனாய்ங்களோ அதே மாதிரி 2K கிட்ஸோட டிரீம் லொக்கேசன்னா அது லடாக். ஒரு சின்ன வித்தியாசம் என்னன்னா 90s கிட்ஸ் கடைசி வரைக்கும் ப்ளான் மட்டும்தான் போடுவாய்ங்க. போக மாட்டாய்ங்க. ஆனா 2கே கிட்ஸ் அப்படியில்ல. ‘இங்க இருக்குடா லடாக்’னு டக்குனு பைக் எடுத்துட்டு கிளம்பிடுறாய்ங்க. சைக்கிள்ல போறது, ஸ்கேட்டிங்ல போறது, லிஃப்ட் கேட்டே லடாக் போறது, நடந்தே போறதுனு எப்படியாச்சும் லடாக் போறோம். ‘கையிலே ஆகாசம்’னு பாட்டப் போட்டு இன்ஸ்டாகிராம்ல வீடியோவா போடுறோம்னு வெறித்தனமா கிளம்பிடுறானுங்க. அப்படி என்னதான் இருக்கு லடாக்ல? லடாக் போனா என்ன பார்க்கலாம்? ஏன் அந்த ட்ரிப் அவ்ளோ முக்கியம்? ஏன் இவங்கள்லாம் அதை பார்க்கத் துடிக்குறாங்க. இதெல்லாம்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
இந்தியாவோட வட எல்லைல இமயமலைக்கு பக்கத்துல இந்திய கட்டுபாட்டுல இருக்குற ஒரு பகுதிதான் லடாக். சமீபத்துலதான் இதை யூனியன் பிரதேசமா மாத்துனாங்க. இங்க லே மற்றும் கார்கில்னு ரெண்டு மாவட்டம் இருக்கு. கடல் மட்டத்துல இருந்து 8,000 அடி உயரத்துல இருக்குற லடாக்ல இரவு நேரங்கள்ல மைனஸ் 10 டிகிரி குளிர்லாம் இருக்கும்.
போலாமா.. புல்லட் ஊர்கோலம்!
சுத்தி மலை,பள்ளத்தாக்கு, ஆள் நடமாட்டமே இல்லாத நீளமான ரோடு, பனில உறைஞ்சு போகுற மாதிரி ஜில்லுனு ஆறு, எக்ஸ்ப்ளோர் பண்றதுக்கு எக்கச்சக்கமான இடங்கள் இருக்குறதாலதான் இந்த இடம் அவ்வளவு ஃபேமஸ். ரொம்ப தூரம் லாங் ட்ரைவ் போறது குறிப்பா பைக்ல போறதுனா செம்மயான சாய்ஸ் லடாக்தான். உலகின் உயரமான மலைப்பாதையான கார்துங்லாவுல புல்லட்ல பறக்கலாம். தமிழ்நாட்டுல இருந்து லடாக் பைக்ல வர்றது கிட்டத்தட்ட இந்தியாவையே சுத்தி பாத்த மாதிரி நிறைய மாநிலங்களைக் கடந்து வர்ற மாதிரி இருக்கும். அது ஒரு லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸ். ஒருவேளை நீங்க டெல்லிக்கு ஃப்ளைட்ல வந்து அங்கிருந்து லடாக் வந்தா லடாக்ல நீங்க பைக் வாடகைக்கு எடுத்து நாள் முழுக்க சுற்றலாம். 600 ரூபா ரேஞ்சுல கிடைக்கும். அப்படி நீங்க பைக்ல போனா மறக்காம போக வேண்டிய இடம் மேக்னடிக் ஹில், இந்த மலைக்கு பக்கத்துல உங்க பைக்க நிறுத்துனா அந்த பைக் தானா மலையை நோக்கி நகருமாம். கொடைக்கானல் தொப்பி தூக்கும் பாறையோட லடாக் வெர்சன் போல.
வாழாய் என் வாழ்வை வாழவே…
இந்தியா சீனாவை பிரிக்குற எல்லைல பாங்காங் ஏரி இருக்கு. இந்த ஏரியோட ஒரு பகுதி இந்தியாலயும் மீதி ரெண்டு பகுதி திபெத்லயும் இருக்கு. உலகிலேயே மிக உயரமான இடத்துல இருக்குற உப்பு நீர் ஏரி இதுதான். இந்த ஏரி குளிர்காலங்கள்ல பனிக்கட்டியா உறைஞ்சு போகும். இப்படி ஒரு ஏரிக்கு பக்கத்துல ஒரு டெண்ட்டை போட்டு ஒரு டீ ஃப்ளாஸ்க்கும் எடுத்துட்டு போயிருந்தீங்கன்னா நாள் முழுக்க குடிச்சிட்டே பார்த்துட்டே இருக்கலாம். லடாக்ல இன்னொரு செம்ம ஸ்பாட் நூப்ரா பள்ளத்தாக்கு. இது ஒரு குளிர் பாலைவானம். ஒட்டகத்துல ஏறி ‘சியோக் நதி பார்க்கணுமே.. பொழுதுக்குள்ள’னு நாள் முழுக்க ஜாலி ரைடு அடிக்கலாம்.
புத்தம்.. சரணம்.. கச்சாமி!
லடாக் திபெத்துக்கு ரொம்ப பக்கத்துல இருக்குறதால இங்க புத்த மதத்தைச் சேர்ந்தவங்க அதிகம். லடாக்ல நிறைய பழமையான புத்த விகாரங்களைப் பார்க்க முடியும். திஸ்கித்ங்குறது லடாக்ல ஒரு கிராமம். மொத்தமே இரண்டாயிரம் பேர் வசிக்குற இந்த கிராமத்துல இருக்குற புத்த விகாரம் ரொம்பவே ஃபேமஸ். இந்த விகாரங்கள் 14-ஆம் நூற்றாண்டுல கட்டப்பட்டதா சொல்றாங்க. இந்த இடங்கள்ல நேரம் செலவழிக்குறது பயங்கரமான மெடிட்டேசனா இருக்கும்.
உங்களுக்கு லடாக் போகணும்னு ஆசை இருந்தா சீசன் பார்த்து போங்க சில ரோடுகளை அப்பப்போ க்ளோஸ் பண்ணிடுவாங்க. உதாரணத்துக்கு மாணாலில இருந்து வர்ற ரோடு டிசம்பர்ல இருந்து மே வரைக்கும் க்ளோஸ் பண்ணிருக்கும். அது செக் பண்ணிக்கோங்க. அதே மாதிரி இது எல்லைல இருக்குறதால நிறைய இடங்கள்ல பெர்மிட் வாங்கணும். ஆதார் கார்டு நிச்சயமா கொண்டு போங்க. ஒரு முறை போயிட்டு வாந்தாலே வாழ்நாளைக்குமான எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.
4c7iv9
Very interesting info!Perfect just what I was looking for!Raise your business
Your article helped me a lot, is there any more related content? Thanks!