பிரக்ஞானந்தா

கோட்டையில்ல… கொடியுமில்ல… ஆனா, 64 கட்டத்துக்குள்ள ராஜா இந்த பிரக்ஞானந்தா!

`நான் இந்த டோர்னமெண்ட்ல மேக்னஸ் கார்ல்சன்கூட விளையாடுவேன்னு எதிர்பார்க்கவே இல்ல. ஏன்னா, அவர்கூட விளையாடணும்னா அதுக்கு ஃபைனல்ஸ் போகணும். அதுதான் ஒரே வழி’ செஸ் தரவரிசைல மூணாவது இடத்துல இருக்க அமெரிக்க வீரர் கருவானாவை ஜெயிச்சு ஃபைனல்ஸ் போனபிறகு பிரக்ஞானந்தா சொன்ன வார்த்தைகள் இவை. உலகத்துல இருக்க மிகப்பெரிய செஸ் பிளேயர்ஸ் சங்கமிக்குற இடம்தான் FIDE வேர்ல்டு செஸ் சாம்பியன்ஷிப். பிரக்ஞானந்தாவோட ஸ்பாட்படி, நாலாவது ரவுண்ட்ல நம்பர் 2 வீரர் நகாமுராவை எதிர்த்து விளையாடுற மாதிரி இருந்திருக்கு. இன்னும் சொல்லப்போனா, அவர் அந்த மேட்ச் வரைக்கும்தான் பிளான் பண்ணியே டோர்னமெண்டையே ஸ்டார்ட் பண்ணிருக்காரு. ஆனா அதுக்கப்புறம் நடந்தது எல்லாமே ஹிஸ்டரி. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக் கோப்பை செஸ் டோர்னமெண்டோட ஃபைனல்ஸுக்குப் போற இந்தியன் இவருதான். அவரைப் பத்தின சில சுவாரஸ்யமான விஷயங்களைத்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

விஷ்ணுவின் கடைசி அவதாரமாகக் கருதப்படும் கல்கியின் தீவிர பக்தர்கள் பிரக்ஞானந்தாவின் அப்பா ரமேஷ் பாபுவும் அம்மா நாகலட்சுமியும். அவங்க, வீட்ல இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துல இருக்க கல்கி ஆசிரமத்துக்கு அடிக்கடி போறது வழக்கமாம். அப்படி பிரக்ஞானந்த பிறந்தபிறகு கோயிலுக்குப் போயிருக்காங்க. அப்போ அங்க இருந்த பூசாரி ஒருத்தர்தான் பிரக்ஞானந்தானு பேர் வைங்கனு சொல்லிருக்கார். `அப்போ அந்தப் பேருக்கான அர்த்தம் கூட எங்களுக்குத் தெரியாது. ஆனால், அந்தப் பேரைக் கேட்ட உடனே ஒரு கியூரியாஸிட்டி வந்துச்சு’னு ரமேஷ் பாபு ஒரு பேட்டிலயே சொல்லிருப்பார். ஒவ்வொரு டோர்னமெண்ட்லயும் அவரோட பெயரை உச்சரிக்க வெளிநாடுகள்ல ரொம்பவே சிரமப்படுவாங்க. விஷ்வநாதன் ஆனந்த்கிட்ட நிறைய வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டர்ஸ் அந்த யுனீக்கான பேர் பத்தியும் அவரைப் பத்தியும் அடிக்கடி கேட்டு தெரிஞ்சுக்குவாங்களாம். ஸ்போர்ட்ஸ் ஸ்கில்ஸ் மட்டுமில்ல, அவரோட பேரும் அகில உலக ஃபேமஸ்தான். சின்ன வயசுலயே செஸ் வேர்ல்டைக் கலக்கத் தொடங்கிய அமெரிக்க செஸ் மேதை பாபி ஃபிஷருக்கு செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தது, அவரோட பெற்றோர்கள் இல்லை. அக்கா. அதேதான் நம்ம பிரக்ஞானந்தாவுக்கும். இவரோட அக்கா வைஷாலியும் ஒரு செஸ் பிளேயர்தான். அதிகமா டிவி பாக்குறாங்கனு அவரை ஒரு செஸ் அகாடமில சேர்த்து விட்டுருக்காங்க. செஸ்ஸுக்கு எந்தவித சம்மந்தமுமே இல்லாத ரமேஷ் பாபுவின் வீட்டுக்குள் அப்படித்தான் முதன்முதல்ல செஸ் போர்டு வந்திருக்கு. அப்போ மூன்றரை வயசான பிரக்ஞானந்தா அக்காவைப் பார்த்து செஸ் விளையாட்டக் கத்துக்கிட்டாராம். கிராண்ட் மாஸ்டருக்கு முன்னாடி இருக்க இண்டர்நேஷனல் மாஸ்டர்ங்குற நிலையை வைஷாலி எட்டியிருக்காங்க. இரண்டு பேரும் சேர்ந்து நிறைய டோர்னமெண்ட்ஸ்லயும் ஆடியிருக்காங்க. மகாபலிபுரத்துல நடந்த செஸ் ஒலிம்பியாட்ல வெண்கலப் பதக்கமும் ஜெயிச்சிருந்தாங்க.

பிரக்ஞானந்தாவோட முக்கியமான பலம் அவரோட அம்மா. காலிறுதில ஜெயிச்சதும், அவரோட அம்மா சேலைத் தலைப்பால் கலங்கியிருந்த கண்ணீரைத் துடைத்த படம் வைரலானது. சின்ன வயசுலேயே செஸ் விளையாட ஆரம்பிச்சுட்ட பிரக்ஞானந்தாவை உலகத்தில் பல இடங்கள்லயும் நடக்குற செஸ் போட்டிகளுக்குக் கூடவே போய் கவனிச்சுக்குறது அவரோட அம்மா நாகலட்சுமிதான். அது எவ்வளவு பெரிய சப்போர்ட்ங்குறதை பிரக்ஞானந்தா தன்னோட ரோல்மாடலாவே நினைக்குற ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் கேரி கேஸ்பரோவே சொல்லிருப்பார். அம்மாவோட அவர் இருக்க போட்டோவைப் பகிர்ந்து, `பிரக்ஞானந்தாவுக்கும் அவரது அம்மாவுக்கும் எனது வாழ்த்துகள். என் அம்மா என்னுடைய அனைத்துப் போட்டிகளிலும் என்னுடன் வந்திருக்கிறார் என்கிற முறையில் சொல்கிறேன், தாயின் துணை மிகச்சிறப்பானது. சிக்கல் நிறைந்த தருணங்களில் கூட பிரக்ஞானந்தா திடமாக இருந்திருக்கிறார்’னு நெகிழ்ந்திருந்தார்.

Also Read – வேர்ல்டு கப் விவாதத்துக்குள்ள அஸ்வின் எப்படி வந்தார் – யூடியூப் வீடியோ மேஜிக்!

அதேபோல், இந்தோனேசியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஐரின் சுகந்தர், `உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள். ஆனால், அவரின் பெருமைமிக்க தாயாருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும், ஏனெனில் அவர் இல்லாமல் இது எதுவுமே நடந்திருக்காது’னும் பதிவு பண்ணிருந்தார். சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்கிற பிரக்ஞானந்தாவுக்கு இந்த செய்தி எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும்னு நாம சொல்லத் தேவையில்லை. சரி மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரா பிரக்யானந்தாவோட ரெக்கார்டு என்ன? உலகக் கோப்பை மேட்சுக்கு முன்னாடி மேக்னஸ் கார்சலை பிரக்ஞானந்தா 19 முறை எதிர்க்கொண்டிருக்கிறார். இதுல ஒரே ஒரு மேட்ச்தான் கிளாசிக்கல் செஸ்னு அழைக்கப்படுற நேருக்கு நேர் மோதிய மேட்ச். அது டிரால முடிஞ்சது. ரேபிட்/கண்காட்சிப் போட்டிகள்ல இரண்டு பேரும் மோதிய போட்டிகளில் கார்ல்சன் 7, பிரக்ஞானதா 5 மேட்ச்கள்லயும் ஜெயிச்சிருக்காங்க. மத்த ஆறு மேட்ச்கள் டிரால முடிஞ்சிருக்கு. உலகக் கோப்பை செஸ் டோர்னமெண்ட் ஃபைனல் நடக்குற ஆகஸ்ட் 22, இன்னொரு வகைல முக்கியமானதுனே சொல்லலாம். காரணம் போன வருஷம் இதே நாள்லதான் கார்ல்சனைத் தொடர்ச்சியா 3 போட்டிகள்ல பிரக்ஞானந்தா ஜெயிச்சிருந்தார். இன்னும் சொல்லப்போனா கார்ல்சனும் பிரக்ஞானந்தாவும் ஒரு வகையில் நல்ல நண்பர்கள்தானாம். ஒரு மேட்ச்ல டிரா பண்ணிக்கலாம்னு கார்ல்சன் ஆஃபர் பண்ணப்போ, பிரக்ஞானந்தா அதை நிராகரிச்சுட்டு தொடர்ந்து மேட்ச் ஆடியிருக்கார். அப்ப இருந்தே இவரைக் கவனிக்க ஆரம்பிச்சிருக்கார். இதனாலதான், நகாமுராவை பிரக்ஞானந்தா தோற்கடிச்சப்போ, தன்னோட மேட்ச் நடந்துக்கிட்டு இருந்த டைம்ல கூட சீட்டை விட்டு எழுந்துபோய் அவரைத் தட்டிக்கொடுத்து பாராட்டினார் கார்ல்சன். ஃபைனல்ல ரெண்டாவது இடம் வந்து வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சிருக்கது பிரக்ஞானந்தாவோட கரியர்ல முக்கியமான டர்னிங் பாயிண்ட்னே சொல்லலாம்.

18 வயசான பிரக்ஞானந்தா செஸ் வேர்ல்டுல பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கு. வேர்ல்டு செஸ் சாம்பியன் உள்பட பல டைட்டில்களை அவர் ஜெயிப்பாருனு நாம நம்பிக்கையோட கண்கள் மிளிரச் சொல்லலாம்… வாழ்த்துகள் பிரக்ஞானந்தா. அவரோட இந்த ஜர்னி பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க… அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top