எம்.எஸ்.தோனி

முதல்முறையாக இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்ஸியில் தோனி… கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்ஸியில் முன்னாள் கேப்டன் தோனி இருப்பது போன்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கேப்டன் கூல் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ஆகஸ்டில் ஓய்வுபெற்றார். இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் முக்கியமானவராகக் கருதப்படும் தோனி, ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியே அவரது கடைசி போட்டி. அதன்பிறகு ஓராண்டாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல், நேரடியாக ஓய்வு முடிவை சர்ப்ரைஸாக அறிவித்தார்.

ரெட்ரோ ஜெர்ஸியில் தோனி!

ஐபிஎல் தொடரில் விளையாடுவது தவிர பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களிலும் தோனி நடித்து வருகிறார். அந்தவகையில், விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக முதல்முறையாக இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்ஸியில் தோனி இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளஙகளில் வெளியாகியிருக்கின்றன. பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் படம்தான் செம்ம வைரல். அதில், “மகேந்திரசிங் தோனியை ஒரு விளம்பரப் படத்துக்காக இயக்கினேன். என்ன ஒரு அருமையான மனிதர். நேரம் தவறாமை, பழக மிகவும் இனிமையானவர், குறிப்பிட்ட நிறுவன ஊழியர்கள் தொடங்கி ஸ்பாட்பாய்ஸ் என அனைவருடனும் சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். நான் அவரின் ரசிகையாகிவிட்டேன்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்ஸியை அணிந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாடியதில்லை. இதனால், இந்த போட்டோக்களைப் பகிர்ந்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் தொடர் கொரோனா சூழலால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் தோனி ஆல்ஸ்டார் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகின.

Also Read – நீங்க தோனி ஃபேனா… உங்களுக்கான குவிஸ் இதோ!

4 thoughts on “முதல்முறையாக இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்ஸியில் தோனி… கொண்டாடும் ரசிகர்கள்!”

  1. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top