கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங் களத்துல மட்டுமில்ல, ஆன் தி ஃபீல்டு, ஆஃப் த ஃபீல்டு தக்லைஃப் மொமண்ட்லயும் ஹிட்மேன்தான். அமைதியா டக்குனு அவர் அடிக்குற ஒன்லைனர்களுக்கு இந்தியன் டீம் டிரெஸ்ஸிங் ரூம்லயே ஃபேன்ஸ் நிறைய பேரு இருக்காங்க… ஹிட்மேன் ரோஹித்தோட ஒருசில தக்லைஃப் மொமண்ட்ஸைப் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
ஹிட்மேன் ரோஹித்தோட ஃபேமஸான ஒன்லைனுக்கும் நம்ம வடிவேலு பஞ்ச்சுக்கும் இண்ட்ரஸ்டிங்கான ஒரு கனெக்ஷன் இருக்கு. அது என்னனு தெரிஞ்சிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க. விடை கடைசில இருக்கு…
ஹோம் அட்வாண்டேஜ்
இந்தியா வர்ற வெளி டீம்கள் இங்க பிட்ச் சரியில்லைனு அப்பப்போ மூக்கை சிந்தி அழுகாச்சி ஆடுறதுண்டு. அந்தக் கேள்வியை தலைவன் மொத்தமா சிதைச்சு விட்ட மொமண்ட்தான் 2021ல நடந்துச்சு. சென்னைல நடந்த முதல் மேட்ச்ல இங்கிலாந்து 221 ரன்ல ஜெயிக்க, இரண்டாவது மேட்ச்ல இந்தியா 337 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சு பதிலடி கொடுத்திருக்கும். அந்த மேட்சுக்குப் பிறகு மைக்கேல் வாகன், கிளார்க்னு கமெண்ட்டேட்டர்ஸ், இங்கிலாந்து சைட்லனு பிட்ச் மேல விமர்சனம் வைச்சாங்க.
அகமதாபாத் டெஸ்டுக்கு முன்னாடி அவர்கிட்ட இந்த கேள்வியைக் கேட்க, `இல்ல எனக்குப் புரியல. பிட்ச்ங்குறது ரெண்டு டீமுக்கும் பொதுதானே? ஹோம் டீமுக்கு ஏத்தபடிதான் எல்லா நாட்லயும் பிட்ச் ரெடி பண்ணுவாங்க… தெரியாமத்தான் கேக்குறேன்… நாங்க வெளிநாடுகளுக்குப் போறப்ப எங்களைப் பத்தி யாருமே பேசுறதே இல்ல.. இப்ப மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்க’னு மொத்த விமர்சனத்தையும் உடைச்சு விட்டிருப்பாரு.
கோச்சான கண்டிப்பா சொல்றேன்!
2019 வேர்ல்டு கப்ல பாகிஸ்தான் டீமை ஜெயிச்சதுக்குப் பிறகு அப்போ வைஸ் கேப்டனா இருந்த ரோஹித் ஷர்மா பத்திரிகையாளர்களை சந்திச்சிருப்பாரு. அப்போ ஒரு குறும்புக்கார பாகிஸ்தான் பத்திரிகையாளர், `மோசமான இந்த சூழ்நிலைல இருந்து பாகிஸ்தான் பேட்டர்ஸ் எப்படி வெளில வரணும்னு ஒரு சக கிரிக்கெட் வீரரா நீங்க என்ன அட்வைஸ் பண்ணுவீங்க?’னு கேட்டிருப்பாரு. அந்த கேள்விக்கு, `பாகிஸ்தான் டீம் கோச்சானா அப்போ என்ன சொல்வேன்னு நிச்சயம் உங்களுக்குச் சொல்றேன்’னு சிரிச்சுக்கிட்டே தக் பண்ணிருப்பாரு ரோஹித்.
என்னைய ஏன்பா காட்டுறீங்க?!
2023 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் சீரிஸ்ல நடந்த சம்பவம் இது. நாக்பூர் மேட்ச்ல ஹேண்ட்ஸ்காம் எல்பிடபிள்யூவை ரிவ்யூ பண்ணாரு அஷ்வின். அந்த டைம் பிளேயர்ஸ் உள்பட மொத்த ஸ்டேடியமும் பிக் ஸ்கிரீனைப் பார்த்துட்டு இருந்தப்போ… மெயின் கேமரா மேனோ ரோஹித்தோட ரியாக்ஷனை காட்டிட்டி இருந்தாரு. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த ரோஹித், `என்னையவே ஏன்பா காட்டிட்டு இருக்க… ரிவ்யூ போயிருக்கு பிக் ஸ்கிரீனையும் காட்டு’னு கேமரா மேனை சம்பவம் பண்ணிவிட்டிருப்பாரு. இதைக் கேட்டு கமெண்ட்ரி டீமும் சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சிருப்பாங்க.
ரோஹித் ஷர்மா பெரும்பாலான பிரஸ் கான்ஃப்ரஸ்கள்ல யூஸ் பண்ண ஒரு வார்த்தைதான் `Abhi kya bataunga?’. இதுக்கு டைரக்ட் மீனிங் என்னன்னா.. `ம்ம்ம்ம் வந்து என்னா உங்ககிட்ட சொல்றது’னு செல்அப்பாவா வடிவேலு சொன்ன டயலாக்கோட இந்தி வெர்ஷதான் இது . கேள்வியைத் தவிர்க்கணும்னு நினைக்குறப்ப, இதுக்கு பதில் சொல்லணுமானு யோசிக்கறப்போலாம் இந்த வார்த்தையை ரோஹித் யூஸ் பண்றதுண்டு. நார்த்ல இந்த டயலாக் மீம் ரொம்பவே ஃபேமஸ்.
பிரஸ் கான்ஃப்ரஸ்கள் ஏன் பிடிக்குங்குறது சொன்ன காரணம், தோனியோட பிறந்தநாள் பத்தின கேள்விக்கு சொன்ன பதில், ஆஃப் த ஃபீல்ட்ல தவான் மகனை அலறவிட்டது, ஆன் த ஃபீல்டுல `வேர்ல்டு கப் நெருங்கிருச்சு’னு தினேஷ் கார்த்திக்கை ஓட்டுனது, இஷான் கிஷானை வம்பிழுத்தது, டாஸ் வின் பண்ணி என்ன செலெக்ட் பண்ணோம்ங்குறதை மறந்துட்டேன்னு சொன்னதுனு இந்த லிஸ்டை அடுக்கிக்கிட்டே போகலாம்.. நேரம் கருதி இதை இத்தோட முடிச்சுக்கலாம்.
ரோஹித்தோட தக்லைஃப் மொமண்ட்ல இதுதான் அல்டிமேட்னு நீங்க நினைக்குற மொமண்டை கமெண்ட்ல சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்குறோம்!
Also Read – சச்சின் டெண்டுல்கர் கரியரின் முக்கியமான 7 தருணங்கள்!