சின்னத்திரை யூ டியூப்

சின்னத்திரை நட்சத்திரங்களின் யூடியூப் சேனல்களில் என்ன ஸ்பெஷல்!

கொரோனா லாக்டௌன் ஆரம்பிச்சதுல இருந்து ஷூட்டிங் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களோட கவனத்தை யூ டியூப் பக்கம் திருப்ப ஆரம்பிச்சாங்க. சின்னத்திரை பிரபலங்கள் சிலர் அப்லோட் செய்த வீடியோக்களில் சிலது வைரலானதுடன் சமூக வலைதளங்களில் அதிகளவு விமர்சனங்களையும் பெற்றன. ஒரு வீடியோனா நல்லது, கெட்டது ரெண்டும் இருக்கத்தானப்பா செய்யும். அப்டின்றீங்களா? சரி, இப்போ நம்ம அதுக்குள்ள போக வேணாம். சின்னத்திரை நட்சத்திரங்களின் பிரபல யூ டியூப் சேனல்கள் எது? அவங்க சேனலோட ஸ்பெஷல் என்ன? இதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம். சோ.. லெட்ஸ் ஸ்டார்ட்!

Priyanka Deshpande

விஜய் டி.வில ஃபேமஸ் ஆங்கரா இருக்குறவங்கதான், பிரியங்கா. இவங்களோட யூ டியூப் சேனல்தான் பிரியங்கா தேஷ்பாண்டே. கடந்த ஆண்டு லாக்டௌன் போடப்பட்டபோது இவங்க சேனலை ஆரம்பிச்சாங்க. ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட 1.28 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவங்க சேனலை ஃபாலோ பண்றாங்க. தன்னோட லைஃப்ல நடக்குற டெய்லி ஆக்டிவிட்டீஸ வீடியோவா பதிவு பண்ணி அப்லோட் பண்றாங்க. சமீபத்துல இவங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனதைக்கூட வீடியோவா போட்டு டிரெண்டிங்ல இடம் பிடிச்சாங்க. இவங்களோட பல வீடியோக்கள் மில்லியன் வியூஸை ரீச் பண்ணியிருக்கு. “சும்மா, ஜாலியா ஆரம்பிச்ச விஷயம் இன்னைக்கு என்னோட லைஃப்ல ஒரு முக்கியமான பார்ட்டா என்னுடைய பிரியங்கா தேஷ்பாண்டே யூ டியூப் சேனல் ஆயிடுச்சு”னு அவங்களே ஜாலியா சொல்லியிருக்காங்க. கோல்ட் பட்டன் வாங்கிட்டதால பிரியங்கா இப்போ, `அமுக்கு டுமுக்கு டமால் டுமீல்’ ஃபீலிங்க்ல இருக்காங்க.

Mr. Makapa

விஜய் டி.வில இன்னொரு ஃபேமஸ் ஆங்கர், மா.கா.பா ஆனந்த். இவரும் லாக்டௌன் அப்போதான் மிஸ்டர்.மாகாபா சேனலை ஆரம்பிச்சாரு. இதுவரைக்கும் சுமார் 5.62 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இவரை ஃபாலோ பண்றாங்க. இவரும் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை தொகுத்து வீடியோவா போட்டுட்டு இருக்காரு. நிறைய விஷயங்களை லைவ் ஸ்ட்ரீம் பண்றது, சேலஞ்சஸ் பண்றதுனு மக்கள்கூட எப்பவும் ஒரு கனெக்ட்லயே இருப்பாரு. கியூட்டான நிறைய ஷார்ட் வீடியோக்கள் அப்லோட் பண்ணுவாரு. ஷார்ட் வீடியோக்கள் உங்களுக்கு பிடிக்கும்னா இவரோட சேனலை நீங்க ஃபாலோ பண்ணலாம். அப்பப்போ சில பியூட்டி டிப்ஸூம் குடுப்பாரு.

Parattai pugazh

குக் வித் கோமாளினு பேரை சொன்னாலே நமக்கு புகழ் ஞாபகம்தான் வரும். அந்த அளவுக்கு ஃபேமஸ் ஆயிட்டாரு. அவரோட யூ டியூப் சேனல்தான் பரட்டை புகழ். அன்றாடம் தன்னோட வாழ்க்கைல நடக்குற விஷயங்களை விளாக் வீடியோவா பதிவு செய்து அப்லோட் பண்றாரு. இதுல என்ன ஸ்பெஷல்னுதான கேக்குறீங்க. ஒவ்வொரு வீடியோலையும் புகழோட அந்த மேஜிக் காமெடி டச் இருக்கும். அதுக்காகவே இவரது சேனலை ஃபாலோ பண்ணலாம். இதுவரைக்கும் சுமார் 1.12 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவரோட சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிருக்காங்க. இவரும் கடந்த ஆண்டுதான் தன்னோட யூ டியூப் சேனலை ஸ்டார்ட் பண்ணியிருக்காரு.

Wow life

“வாவ் லைஃப் மிகவும் மகிழ்ச்சியான டிஜிட்டல் தளம். அன்பை பரப்புவதன் மூலமும் வெறுப்பை நீக்குவதன் மூலமும் மட்டுமே உலகம் சிறந்த இடமாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதை செய்யவே நாங்கள் எங்களது கவனத்தை செலுத்துகிறோம்” என பாஸிட்டிவ் வைப்ஸ் நிரம்பிய சேனல்தான் வாவ் லைஃப். விஜே அர்ச்சனாவும் அவங்களோட பொண்ணும் சேர்ந்துதான் இந்த சேனலை நடத்திட்டு வராங்க. 6.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்க. சமீபத்துலகூட பாத்ரூம் டூர் வீடியோ போட்டு பல விமர்சனங்களை சந்திச்சாங்க. நிறைய ட்ரோலுக்கும் ஆளானாங்க. இவங்களும் நிறைய விளாக் வீடியோக்களைதான் அப்லோட் பண்ணுவாங்க. யார் என்ன சொன்னாலும் எதிர்மறையான விமர்சனங்களை தள்ளி வச்சிட்டு அன்பை மட்டுமே பரப்பிட்டு சேனலை ரன் பண்ணிட்டு இருக்காங்க.

Theatre D

குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனியோட சேனல்தான் இந்த தியேட்டர் டி. கனியோட பெயரை சொன்னதும் அவங்க குக்கிங் வீடியோஸ் நிறைய போடுவாங்கனு தான நினைச்சீங்க? கரெக்டுதான் நீங்க நினைச்சது! ஆனால், குக்கிங் வீடியோஸ் கூடவே பொன்னியின் செல்வன் கதையையும் சொல்லி வீடியோ போட்டு அசத்தியிருப்பாங்க. மிஸ் பண்ணவங்க மறக்காம போய் பாருங்க. அவங்க கதை சொல்ற அழகே தனிதான். டிராவல் வீடியோஸூம் அப்லோட் பண்ணுவாங்க. இதுவரைக்கும் சுமார் 4.6 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இவங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்க.

Sunita Xpress

சுனிதாவோட தமிழுக்கே அவ்வளவு ஃபேன்ஸ் இருக்காங்க. அசாம்ல இருந்து வந்து தமிழ்நாட்டுல ஒரு ஃபேமஸ் குக்கிங் ஷோல கோமாளியா இருந்து மக்கள் மனசுல இடம் பிடிக்கிறது எல்லாம் வேற லெவல்தான. இவங்களும் நிறைய விளாக்ஸ், மேக் அப் டிப்ஸ், டேன்ஸ் வீடியோக்களை அப்லோட் பண்ணுவாங்க. இதுவரைக்கும் சுமார் 4.07 லட்சம் பேர் இவங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்க. இந்த வருஷம் கடந்த மார்ச் மாதம் தான் யூ டியூப்ல இவங்க ஜாய்ன் பண்ணாங்க. 

Hussain manimegalai

மணிமேகலை மற்றும் ஹூசைன் வாழ்க்கைல நடக்குற விஷயங்களை வீடியோவா பதிவு பண்ணி அப்லோட் பண்றாங்க. இவங்க சேனலை இதுவரைக்கும் 1.17 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்க. தரமான எண்டர்டெயின்மெண்ட் வேணும்னா இவங்க சேனலை ஃபாலோ பண்ணா போதும். குறிப்பா மணிமேகலை சமையல் தொடர்பான வீடியோக்கள் எல்லாம் வேற லெவல் ஃபன்னா இருக்கும். சோ மிஸ் பண்ணாதீங்க மணிமேகலை அட்ராசிட்டீஸை!

Sanjiev & Alya

ராஜா ராணி சீரியல் மூலமா பலரது மனதையும் தங்கள் பக்கம் ஈர்த்தவங்க சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி. லாக்டௌன்ல இருந்து யூ டியூப் மூலமா பலரது மனதையும் கவர்ந்துட்டு வர்றாங்க. இவங்களும் நிறைய விளாக் வீடியோக்களை அப்லோட் பண்ணுவாங்க. இதுவரைக்கும் 4.65 லட்சம் பேர் இவங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்க. இவங்க பாப்பாவோட சேர்ந்து இவங்க பண்ற அட்ராசிட்டீஸ் எல்லாமே செம க்யூட்டா இருக்கும்.

Kathakelu Kathakelu

ஸ்டோரி டெல்லிங் உங்களுக்கு ரொம்ப புடிக்குமா? அப்போ உங்களுக்கான சேனல்தான் இது. நடிகை சுஜிதாதான் இந்த சேனலை நடத்திட்டு இருக்காங்க. குழந்தைகளுக்காகவும் அம்மாக்களுக்காகவும் நிறைய கதைகள் சொல்றாங்க. அப்படியே, அன்றாட வாழ்க்கைல நடக்குற விஷயங்களையும் வீடியோவா பதிவு பண்ணி அப்லோட் பண்றாங்க. இதுவரைக்கும் சுமார் 3 லட்சம் பேர் இவங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்னியிருக்காங்க. 

Sivaangi Krishnakumar

பாட்டு புடிக்குமா உங்களுக்கு? ம்ம்ம்.. அப்புறம் ஃபன் புடிக்குமா உங்களுக்கு? என்னது ரெண்டுமே புடிக்குமா? அப்போ உங்களுக்கான சேனல்தான் சிவாங்கி கிருஷ்ணகுமார். சூப்பர் சிங்கர் வழியாக எண்ட்ரி கொடுத்து குக் வித் கோமாளி மூலமா பலரது மனசுலயும் இடம் பிடிச்சிருக்கும் சிவாங்கி தன்னோட வாழ்க்கைல நடக்குற விஷயங்களை வீடியோவா பதிவு செய்து தன்னோட யூ டியூப் பக்கத்துல போடுவாங்க. அவங்க ஃபேவரைட் பாடல்களை பாடியும் அப்லோட் பண்ணுவாங்க. இதுவரைக்கும் 1.55 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்க. 

சின்னத்திரை பிரபலங்களின் இந்த சேனல்களில் உங்க ஃபேவரைட் சேனல் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க… அப்படியே நாங்க எதாவது சேனலை மிஸ் பண்ணியிருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க!

Also Read : `கணவருடன் சேர்ந்து வில்வித்தையில் கலக்கிய தீபிகா!’ – யார் இவர்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top