15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை அழிக்கும் வாகன அழிப்புக் கொள்கை 2021 பற்றி மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. 2022 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாகும் புதிய சட்டம் என்ன சொல்கிறது.
பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கை 2021
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களை ஒழிப்பது குறித்து பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய கொள்கையின்படி, 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனம், 15 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருக்கும் வர்த்தக வாகனங்களைத் தகுதி சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதில் தேர்ச்சிபெறாத வாகனங்களை அழித்துவிடவும் புதிய வாகனக் கொள்கையில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்கிராப்பிங் மையங்கள் எனப்படும் பழைய வாகனங்களை அழிக்கும் இடத்தில் இதற்காக சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் புதிய வாகனங்கள் வாங்கும்போது 5% தள்ளுபடி பெறலாம். அதேபோல், தனிநபர் வாகனங்கள் வாங்கினால் வாகன வரியில் 25%, வர்த்தகப் பயன்பாட்டுக்கு வாங்கப்படும் வாகனங்களாக இருந்தால் வரியி 15 சதவிகிதமும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாகும் இந்த புதிய கொள்கையின்படி பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் கட்டணமும் 8 மடங்கு உயர்த்தப்பட இருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையின் முக்கிய அம்சங்கள்.

- 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய மோட்டார் சைக்கிள்களை மறுபதிவு செய்ய இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த 300 ரூபாய் என்ற மறுபதிவுக் கட்டணம் ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது.
- பழைய கார்களுக்கான மறுபதிவுக் கட்டணம் ரூ.600-ல் இருந்து 5,000 ரூபாயாகவும், பழைய பேருந்துகள், லாரிகளுக்கான கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.12,500 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.
- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார், மோட்டார் சைக்கிள்களுக்கான மறுபதிவுக் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும். அதேபோல், இந்த வாகனங்களின் ஃபிட்னெஸ் சர்ட்டிபிகேட் எனப்படும் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி இருந்தால், குறிப்பிட்ட தேதியில் இருந்து தினசரி 50 ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்படும். தனியார் வாகனங்களாக இருந்தால், மாதத்துக்கு ரூ.300, வர்த்தக வாகனங்களாக இருந்தால் மாதத்துக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.
- சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்களுக்கான மறுபதிவுக் கட்டணம் 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
Also Read – நீங்க வடிவேலு ரசிகரா… அப்போ இந்த க்விஸ்ல 10-க்கு 7 மார்க் வாங்கிக் காட்டுங்க!


Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.