படிப்பறிவு இல்லை, பாட்டறிவு மட்டும்தான்… பாடியே கலங்க வைக்கும் நஞ்சம்மாவின் கதை!

அய்யப்பனும் கோஷியும் படத்துக்கு மிகப்பெரிய புரொமோஷனா இருந்தது நஞ்சம்மாவோட பாடல்கள்தான்.  அந்தப் பாட்டுக்கு நேஷனல் அவார்டும் நஞ்சம்மா வாங்கிட்டாங்க. தமிழ், மலையாளம் மக்கள் மட்டும் நஞ்சம்மாவை முதல்ல கொண்டாடுனாங்க. ஆனால், இன்னைக்கு இந்தியாவே அவங்களைக் கொண்டாடுது. பிரித்விராஜ், பிஜூமேனன்னா யாருனு தெரியாதுனு சொன்ன வெகுளி பேச்சும் இன்னசண்ட் மன்சும் அவங்க குரலும் நம்மள ரொம்பவே ஈர்த்துச்சு. யார் இந்த நஞ்சம்மா? அவங்க பாடுன களக்காத்தா பாட்டுக்கு உண்மையான அர்த்தம் என்ன? அந்தப் படத்துல அவங்க பாடுன இன்னொரு பாட்டைக் கேட்டா கண்டிப்பா அழுதுருவோம். அது என்ன பாட்டு? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

Nanjamma
Nanjamma

நஞ்சம்மா பிறந்து வளர்ந்ததுலாம் தமிழ்நாட்டுல உள்ள ஆனகண்டிபுதூர் அப்டின்ற மலைகிராமத்துலதான். அந்த கிராமத்து மக்களோட எல்லா நிகழ்வுகள்லயும் பாட்டும் ஆட்டமும் இருக்கும். யாராவது பிறந்தாலும் சந்தோஷத்துல பாடுவாங்க. யாராவது இறந்தாலும் சோகத்துல பாடுவாங்க. இதையெல்லாம் சின்ன வயசுல இருந்து பார்த்துதான் நஞ்சம்மா வளர்ந்தாங்க. நஞ்சம்மா படிக்கலாம் இல்லை. ஆனால், அவங்க வளரும்போது ஸ்கூல் இருந்தா கண்டிப்பா படிச்சிருப்பேன்னு சொல்லுவாங்க. படிக்கணும்னு நஞ்சம்மாவுக்கு ரொம்பபே ஆசை. வயசானப்பிறகு முதுயோர் கல்வி நிலையத்துல படிச்சிருக்காங்க. இப்போ, அவங்க பேர் எழுதுவாங்க. கையெழுத்து போடுவாங்க. அதை சொல்லும்போதே அவ்வளவு சந்தோஷப்படுவாங்க. அவங்க குழந்தைகளை கூலி வேலை செய்து படிக்க வைச்சிருக்காங்க. சின்ன பிள்ளைல அவங்க வேலை எல்லாமே மற்ற குழந்தைங்ககூட சேர்ந்து விளையாடுறதும், ஆடு, மாடு மேய்க்கிறதும்தான்.

பழங்குடி மக்கள் வாழ்க்கைல இசை தவிர்க்க முடியாத ஒரு விஷயம். ஏன்னா, அங்க முன்னாடிலாம் வேற எந்த பொழுதுபோக்கும் இருக்க வாய்ப்பில்லை. இதனால, நஞ்சம்மாவுக்கும் இசை மேல மிகப்பெரிய ஆர்வம். ஒரு 13 வயசு இருக்கும்போது நஞ்சம்மாவும் பாட்டு பாட தொடங்கிட்டாங்க. பழங்குடி மக்கள் மத்தியில இருந்த இசைக்குழுலயும் இருந்துருக்காங்க. அவங்க ஊர்ல எந்த நிகழ்ச்சி நடந்தாலும் இவங்க குழுவா போய் அங்க பாடுவாங்க. அவங்க குடும்பமா முழுநேரமும் விவசாயம் தான் பண்ணியிருக்காங்க. கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் அவங்களை கேரளால இருக்குற அட்டப்பாடி ஊருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துருக்காங்க. எந்த வருஷம் கல்யாணம் ஆச்சுனுலாம் அவங்களுக்கு தெரியலை. ஆனால், கல்யாணம் பயங்கரமா பெரிய அளவுல பண்ணி கொடுத்துருக்காங்கனு மட்டும் நஞ்சம்மாக்கு நியாபகம் இருக்கு.

இன்னைக்கு நஞ்சம்மாவை எல்லாருக்கும் தெரியுறதுக்கு முக்கியமான காரணம் அவரோட கணவர்தான். ஒரு நாள் நஞ்சம்மாவோட வீட்டுக்காரர் அவங்கக்கிட்ட, “மா, இப்படி இருந்தா எப்படி நாலு பேருக்கு உன்னைத் தெரியும்? இப்போ நீ வீட்டுக்குள்ளயே இருக்க. எதிர்காலத்துல வெளிய இறங்கி போகும்போது எப்படி நாலு பேரைப் பார்ப்ப? நம்ம ஊர்ல இருந்து நிறைய பொம்பளைங்க ஊரு விட்டு வெளியயெல்லாம் போய் பாடுறாங்க. உன்னால போக முடியா?”னு கேட்ருக்காரு. அப்போ நஞ்சம்மா, “நீ வீட்டுல இருனு சொன்னா இருக்கேன். போனு சொன்னா போறேன். உன் சொல்லுக்கு மேல எனக்கு வேற ஒண்ணுமில்ல”னு கணவர்கிட்ட சொல்லியிருக்காங்க. அப்போ, பாடப்போனு சொல்லியிருக்காரு. “உனக்கு என்ன திறமை இருக்கோ. அதை பண்ணு”னு சொல்லியிருக்காரு.

Nanjamma
Nanjamma

கேரளால இருக்குற நிறைய பழங்குடி மக்கள் கலந்துக்கிட்ட நிகழ்ச்சி ஒண்ணுல அட்டப்பாடி சார்பா நஞ்சம்மாவை பாட கூப்பிட்ருக்காங்க. ஊரை விட்டுக்கொடுக்க முடியாதுனு நஞ்சம்மாவும் பாட அக்சப்ட் பண்ணிக்கிட்டாங்க. அங்க நிறைய ஆஃபீஸர்ஸ்லாம் வந்துருக்காங்க. நஞ்சம்மா முதல்ல தெய்வத்தைப் பத்தி ஒரு பாட்டு பாடியிருக்காங்க. அங்க இருந்த எல்லாருமே அவங்க குரலைக் கேட்டு உறைஞ்சு போய்ட்டாங்களாம். அப்போதான், பழனிசாமினு ஒருத்தர் நஞ்சம்மாவுக்கு அறிமுகம் ஆகியிருக்காரு. அவர்தான் பழங்குடி மக்களை நிகழ்ச்சிக்கு பாடுறதுக்குலாம் கூட்டிட்டுப் போவாராம். பழனிசாமிக்கு சினிமாலயும் நல்ல கான்டாக்ட் இருந்துருக்கு. அப்போ, அய்யப்பனும் கோஷியும் சச்சி, பழனிசாமிக்கிட்ட, “இப்படி பழங்குடி மக்கள் பேக்ரௌண்டா வைச்சு ஒரு படம் எடுக்குறேன். அங்க இருந்து பாடுறவங்க யாராவது தெரியுமா?”னு கேட்ருக்காங்க. நஞ்சம்மா இப்படிதான் அந்த டீம்க்கு அறிமுகம் ஆகியிருக்காங்க.

சச்சியை முதல்நாள் மீட் பண்ணியிருக்காங்க. ”பாட முடியுமா?”னு சச்சி கேட்ருக்காரு. “பாடுவேன்”னு உடனே சொல்லியிருக்காங்க. மியூசிக் டைரக்டர் மட்டும்தான் ஸ்டுடியோல முதல்ல இருந்துருக்காங்க. பாடி முடிச்சு வெளிய வரும்போது ரொம்பவே சங்கடத்தோட வெளிய வந்துருக்காங்க. பாடி முடிச்சதும் சச்சி ஸ்டுடியோ வந்துருக்காரு. அந்தப் பாட்டை போட்டு கேட்டதும் ஸ்டுடியோல இருந்த எல்லாரும் அழுதுருக்காங்க. அந்தப் பாட்டைப் பாடின அவங்களாலயே கேக்க முடியலையாம். அப்புறம் அவங்களால நடிக்க முடியுமா?னு சச்சி கேட்ருக்காரு. “நீங்க சொல்லி கொடுக்குற மாதிரி நடிக்கிறேன்”னு சொல்லியிருக்காங்க. அய்யப்பனும் கோஷியும் படத்துல பிஜூமேனனுக்கு மாமியாரா நடிச்சிருப்பாங்க. அந்தப் படத்தோட ஒரு புரோமோ வீடியோல, “பிரித்விராஜ் யாருனு தெரியுமா? பிஜூமேனன் யாருனு தெரியுமா?”னு கேப்பாங்க. யாரையும் தெரியாதுனு சொல்லுவாங்க. அப்புறம் அவங்க நேர்ல சந்திச்சு நான்தான் பிரித்வி, நான்தான் பிஜூனு சொல்லுவாங்க. அந்த வீடியோ செம டச்சிங்கா இருக்கும். அவங்க எவ்வளவு இன்னசென்ட்னு அந்த வீடியோ பார்த்தா தெரியும்.

காடு, மலை, மரம், செடி, கொடி-னு இதை சுத்தியே நஞ்சம்மாவோட வாழ்க்கை இருந்ததால அவங்க பாட்டும் அதை சார்ந்தேதான் இருக்கும். களக்காத்தா பாட்டு இன்னைக்கும் நிறைய பேர் கேப்போம். குழந்தைக்கு சந்தன மரத்தைப் பாரு நிறைய பூத்திருக்கு, மேல விமானம் போகுதுனு சொல்லி சொல்லி சாப்பாடு ஊட்டும் போது பாடுற பாட்டுதான் இது. அப்படி சொல்லியே அந்த அம்மா குழந்தைக்கு நிறைய சோறு ஊட்டுவாளாம். இதுதான் அந்தப் பாட்டு. “நாங்க திரும்பின பக்கம் பார்க்குறது மரம்தான். அதனால, அதைப் பத்தி பாடி மக்களுக்கு தெரிய படுத்துறேன்”னு நஞ்சம்மா சொல்லுவாங்க. இந்தப் படத்துல இவங்க பாடுன இன்னொரு பாட்டு ‘தெய்வ மகளே’ பாட்டு. நஞ்சம்மாக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் குழந்தை இல்லையாம். அப்போ, அதை நினைச்சு ஃபீல் பண்ணி எழுதுன பாட்டுதான் இது. அதாவது குழந்தையை இழந்த ஒரு தாயின் வலிதான் இந்தப் பாட்டு. இதை கேக்கும்போது நம்மளோட கண்ணுலயும் கண்ணீர் வரும்.

பிஜூமேனனுக்கு ஒருநாள் நைட்டு சச்சி ஃபோன் பண்ணியிருக்காரு. ஃப்ளாட்டுக்கு வரட்டுமானு கேட்டுட்டு போய்ருக்காரு. போனதும், நஞ்சம்மா பாடுன ‘தெய்வமகளே’ பாட்டைக் கேட்டு பிஜூமேனனை கட்டிப்பிடுச்சு அழுதுருக்காரு. “என்ன பாட்டு, நம்ம படத்தோட பிளஸ்ஸிங் நஞ்சிம்மா”னு சொல்லியிருக்காரு.    அதே ஃபீலிங்தான் அந்தப் பாட்டைக் கேட்ட எல்லாருக்கும். பாட்டை எழுதி வைச்சுலாம் அவங்களுக்கு பாடத் தெரியாது. அதனால, அப்படியே பிடிச்ச ராகத்துல தோணுன வார்த்தைகளை வைச்சு பாடல் பாடிருவாங்களாம். “என் வாழ்க்கைல நான் அடக்கி வைச்சிருந்த விஷயங்கள் என்பாட்டா எல்லாருக்கும் போய் சேர்ந்துருக்கு. ரொம்ப சந்தோஷம்”னு நஞ்சம்மா சொல்லுவாங்க. அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே சினிமா பார்க்குறது ரொம்ப பிடிக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா படம் எல்லாத்தையும் பார்ப்பாங்களாம். சீக்கிரமே வீட்டுல சோறுலாம் வைச்சுட்டு சினிமாக்கு ஃபேமிலியா போய் பார்ப்பாங்களாம்.

நமக்கு தெரிஞ்ச பாட்டு நம்மளோட போய்டக்கூடாதுனு நஞ்சம்மாவுக்கு எப்பவுமே ஒரு நினைப்பு உண்டு. அதனால, இன்னைக்கு நிறைய குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்துட்டும் இருக்காங்க. “எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது. எல்லாரும் ஒண்ணா இருக்கணும்”ன்றதுதான் நஞ்சம்மாவோட ஆசை.

நஞ்சம்மா பாடுனதுல ‘களக்காத்தா’, ‘தெய்வமகளே’ பாடல்கள்ல எது உங்களுக்கு புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top