டென்சல் வாஷிங்டன்

விஜய்க்கே ஆட்டநாயகன் இவர்தான்… யார் இந்த டென்ஸல் வாஷிங்டன்?

டென்ஸல் வாஷிங்டன் | “வெளிய என்னை புடிச்சவன் கோடி பேர் இருக்காண்டா…” மாஸ்டர் படத்தில் விஜய் இந்த டயலாகை பேசினப்போ எல்லா செண்ட்டர் தியேட்டர்லயும் “ஆமா தலைவா…”னு உண்மையாவே ஒரு கோடி பேராச்சும் தலைக்கு மேல ரெண்டு கையயும் பறக்குற மாதிரி வச்சி கத்தியிருப்பாங்க… ஆனா, விஜய்யோ ஒருத்தருக்கு அப்படி கையத்தூக்கி ஒரு தியேட்டர்ல ஒருத்தருக்காக செலிபரேட் பண்ணா எப்படி இருக்கும்?

நம்புற மாதிரி இல்லையா…? ஆனா, அப்படி ஒரு சம்பவத்தைப் பண்ணியிருக்காரே…

‘தளபதி 68’ படத்தின் 3D Scanning மற்றும் VFX பணிகளுக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துக்கு வெங்கட்பிரபுவுடன் விஜய் சென்றிருக்கிறார். டென்சல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் Equalizer 3 படத்தை தியேட்டரில் பார்க்கும் போதுதான் விஜய் சில்லறையை செதறவிட்டு போஸ் கொடுத்தது வைரல்…

விஜய் கொண்டாடுறது இருக்கட்டும், விஜய் நம்ம ஊர்ல பன்ற ஒரு விஷயத்தை டென்ஸல் அமெரிக்காவில் பல வருஷமா பண்ணிகிட்டிருக்காரு… என்னனு கொஞ்ச நேரத்துல பார்ப்போம்… கூகுள் சர்ச்லதிடீர்னு இன்னைக்கு Denzel Washington கீவேர்ட் சர்ச் இன்ட்ரஸ்ட்ல திடீர்னு Peak அடிச்சிருக்கு. டிவிட்டர்ல ஆல் இந்தியா டிரெண்டிங் தாண்டி போய்கிட்டிருக்கு. எல்லாமும் விஜய் போட்டோவுக்கு அப்புறம் தான்.

சரி யார் இந்த டென்ஸல் வாஷிங்டன்? என்னென்ன படங்கள் நடிச்சிருக்கார்?

சமீபகாலமா ஹாலிவுட்டில் ஒரு படத்தில் ஆஃப்ரோ அமெரிக்க கதாபாத்திரம், LGBTQ+ கதாபாத்திரம், சிறுபான்மையின கதாபாத்திரம் இருக்கனும்னு ஒரு டிரெண்ட் ஓடிகிட்டிருக்கு…. அதுக்குப் பின்னாடி பெரிய அரசியல் இருக்கு. அதை விடுங்க.

ஆனா, ஹாலிவுட்ல காலங்காலமா ஸ்டீரியோடைப் பண்ணப்படுற சில விஷயங்கள் இருக்கு. ஒரு ஆஃப்ரோ அமெரிக்க கதாபாத்திரம் எதாச்சும் ஒரு விஷயத்துக்கு கதையோடவே எழுதப்பட்டுகிட்டிருந்தது. ஒரு இந்தியர் இருந்தா சூப்பர் மார்கெட் வச்சிருக்கனும், பாக்கிஸ்தானியர்னா டேக்ஸி ஓட்டனும், அப்படிங்குற மாதிரி ஆஃப்ரோ அமெரிக்க கேர்கடருக்கு ஸ்டீரியோ டைப் பண்ணி வச்சிருப்பாங்க. ஹாலிவுட்ல இருக்க ஆஃப்ரோ அமெரிக்க நடிகர்களும் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தான் கூப்பிடுவாங்க.

ஆனா, இந்த டிரெண்ட்டை உடைச்ச சில நடிகர்களில் முக்கியமானவர் டென்ஸல் வாஷிங்டன், அதை உடைச்ச ஒரு இயக்குநர் ஹாலிவுட் பா.இரஞ்சித்தான ஸ்பைக் லீ.

மேலே சொன்ன டைப்ல எழுதப்படுற கேரக்டர்கள் தாண்டி, எந்தக் கதாபாத்திரத்துக்கு வேணும்னாலும் நடிக்க கூப்பிடக்கூடிய நடிகர்களில் ஒருத்தர் டென்ஸல். உதாரணமா, டாம் ஹான்ஸ்க்கு முதல் ஆஸ்கர் விருதை வாங்கித்தந்த “பிலடெல்பியா” படத்தில் முக்கியமான கதாபாத்திரம் டென்ஸல்க்கு. அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானவங்க பில் முர்ரே, ராபின் வில்லியம்ஸ் மாதிரியான நடிகர்கள். இந்த ஒரு படம் மட்டுமில்லை, இந்த மாதிரி ‘டேஜா வூ’, ‘த டேக்கிங் ஆஃப் பெல்ஹாம் 123’, ‘The Tragedy of Macbeth’ போன்ற படங்களுமே அந்த வகை தான். டென்ஸல் போட்டுக்கொடுத்த இந்த பாதையில் தான், இப்போதைய ஹாலிவுட்டின் ஆஃப்ரோ அமெரிக்க நடிகர்களுக்கான பாத்திரங்கள் உருவாக்கப்படுது.

‘மால்கம் X’, ‘Flight’, ‘The Great Debaters’, ‘Glory’ போன்ற படங்களில் டென்ஸல் கொடுத்தது லைஃப்டைம் செட்டில்மெண்ட் நடிப்பு. அப்படி கிளாஸான நடிப்பு ஒருபக்கம் என்றால் Training Day, Equalizer 1 & 2, 2 Guns, Unstoppable இன்னும் எக்கச்சக்கமான படங்களில் ஆக்‌ஷன் அவதாரத்திலும் பிண்ணியெடுத்திருப்பார், அதிலும் டிரெயினிங் டேவில் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே திரும்பத் திரும்ப பார்க்கலாம். Glory, Training Day என இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளையும் தட்டிய ‘டேலண்ட் கை’தான் டென்ஸல்.

விஜய் மட்டுமில்ல, உலகளவில் கொண்டாடப்படுற ஒரு சூப்பர் ஹீரோவுமே டென்ஸல் வாஷிங்டனை இப்படித்தான் கொண்டாடி இருக்காரு… இந்தப் போட்டோவை வச்சு அவர் யாருன்னு உங்களால கண்டுபிடிக்க முடியுதா பாருங்க.

Also Read – வெங்கட் பிரபு – தளபதி காம்போ.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

டென்ஸல் பொதுவாவே ரொம்ப பாசிட்டிவான மனுஷன், யூட்யூப்ல போயிட்டு Denzel Washington Motivational Speech அப்படின்னு தேடிப்பாருங்க. அவருடைய இந்தக் குணமே சினிமாவுக்குள்ளயும் சரி, வெளியவும் சரி எக்கச்சக்கமான பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்காரு. அமெரிக்காவின் அரசுப் பொது பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து உற்சாகமளிப்பது, ஊக்கப்படுத்துவது, நிதியுதவி செய்வதுன்னு செயல்பட்டுகிட்டிருக்காரு. அதற்காக நியூயார்க்கில் உள்ள ஒரு பொதுப்பள்ளிக்கு டென்ஸல் வாஷிங்டனுடைய பெயர் வைக்கப்பட்டிருக்குனா பார்த்துக்கோங்களேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top