- 16 வயதில் இருந்தே தி.மு.க சார்பில் யூனியன் சேர்மனுக்காக போட்டியிட்ட தன் மாமா கே.என் நேருவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
- 1989-ம் ஆண்டு திருச்சி லால்குடியில் வெற்றிபெற்று அப்போதைய மின்சாரத்துறை அமைச்சரான கே.என் நேருவுக்கு பி.ஏவாக நியமிக்கப்பட்டார், நெப்போலியன்.
- அந்தக் காலக்கட்டத்தில் வெளியான உதயம் திரைப்படத்தில் நடித்த நாகார்ஜூனா தன்னைப்போல தோற்றம் கொண்டவராக இருக்கிறாரே.. நாமளும் நடித்தால் என்ன என்ற ஆசை இவருக்கு வந்திருக்கிறது.

- அதை இயக்குநர் பாரதிராஜாவிடம் சொல்ல, அவரும் புதுநெல்லு புது நாத்து படத்தில் 60 வயது முதியவராக அறிமுகம் செய்து வைத்தார். அப்போது நெப்போலியனுக்கு வயது 27.
- புதுநெல்லு புது நாத்து படத்தில்தான் குமரேசன் எனும் பெயரை நெப்போலியன் என பாரதிராஜா மாற்றினார்.
- பெயரைக் கேட்டு நண்பர்கள் கிண்டல் செய்ய ‘இந்த பெயர் ஹாலிவுட்டுக்கானது’ என அப்போதே நண்பர்களுக்கு பதிலளித்திருக்கிறார். இப்போது ஹாலிவுட்டில் 4 படங்கள் நடித்து முடித்திருக்கிறார்
- ஆரம்பக் காலகட்டங்களில் அப்பா வேடமாகக் கிடைக்க, வில்லனாக ரஜினியுடன் நடித்த `எஜமான்’ பிரேக் கொடுத்தது.
- நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் தலைவராக இருந்தபோது அவரது விருப்பத்துக்கு இணங்க, நடிகர் சங்க துணைத் தலைவரானார், நெப்போலியன்.
- எத்தனை பக்க வசனமாக இருந்தாலும், ஒரே டேக்கில் பேசுபவர்.
- அமைச்சர் கே.என் நேருவுக்கு பி.ஏ-வாக இருந்த காலத்தில் சுமார் 2,000 தொலைபேசி எண்களை மனப்பாடமாக வைத்திருந்தாராம்.

- எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் அவரது மனசுக்கு நெருக்கமான படம் ‘சீவலப்பேரி பாண்டி’.
- 2001-ம் ஆண்டு முதன்முதலாக தி.மு.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
- 2009-ம் ஆண்டு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய இணைஅமைச்சர் பதவி வகித்தார்.
- ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ `பொடா’ வழக்கில் சிறையில் இருந்தபோது கருணாநிதி நேரில் சென்று அவரை சந்தித்தார். அந்த சந்திப்பில் கருணாநிதியுடன் இருந்த ஒரே நபர் நெப்போலியன் மட்டும்தான்.
- நெப்போலியனின் மகன் தனுஷ் சிறுவயதில் மஸ்குலர் டிஸ்ட்ரபி எனும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ஜீவன் பவுண்டேசன் என்ற அமைப்பைத் தொடங்கி 11 வருடமாக நடத்திவருகிறார்.
Also Read – `ப்ரியா’ முதல் `பானு’ வரை – சிம்ரனின் டாப் 10 ரோல்கள் (பகுதி 1)






I’d like to find out more? I’d love to find out more details. https://z42mi.Mssg.me/
Với giao diện mượt mà và ưu đãi hấp dẫn, MM88 là lựa chọn lý tưởng cho các tín đồ giải trí trực tuyến.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.
Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.