‘நந்து’, ‘சாப்ளின் செல்லப்பா’… கமல்ஹாசனின் டாப் 10 கெட் அப்கள்! (பகுதி-2)

மெனக்கெடலை விரும்பியேற்கும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தரித்த மிகச்சிறந்த பத்து கெட்டப்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்தான் இருப்பினும் முயற்சி செய்கிறோம். (குறிப்பு : இவை தரவரிசைப் பட்டியல் அல்ல)

`நந்து’ – ‘ஆளவந்தான்’

கமல்ஹாசன் - ஆளவந்தான்
ஆளவந்தான்

‘ஆளவந்தான்’ படத்தின் கதாசிரியருமான கமல் தான் எழுதிய, ‘நந்து’ எனும் மிருகக் கதாப்பாத்திரம் சிறிதும் சேதாரமின்றி திரையில் தெரியவேண்டும் என தீர்மானித்தார். பத்து கிலோ எடையைக் கூட்டி, தலையில் மொட்டை, உடம்பில் டாட்டூ, புருவத்தில் திருத்தம் என ஒரு பீஸ்டாகவே மாறிப்போனார் கமல்.

 `ஷாகேத் ராம்’ – ‘ஹேராம்’

ஷாகேத் ராம்
ஷாகேத் ராம்

சாதாரண அகழ்வராய்ச்சியாளனான ஷாகேத் ராம், மனைவியை பறிகொடுத்து சோகத்தில் மூழ்கிய ஷாகேத் ராம், கொலைவெறியுடன் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பயிற்சிகளை மேற்கொள்ளும் ஷாகேத்ராம், குற்றவுணர்வும் கழிவிரக்கமும் நிரம்பிய ஷாகேத் ராம் என ஒரே கேரக்டரில் பல்வேறு விதமான பரிணாமங்களை பரிணமிக்க பெரிதும் உதவியது ‘ஹேராம்’ படத்தில் அவர் போட்ட இந்தக் கெட்டப்.

`மேயர் ஜி.கே’ – ‘இந்திரன் சந்திரன்’

மேயர் ஜி.கே
மேயர் ஜி.கே

தெத்துப்பல், கரகர குரல், பெரிய தொப்பை, கல்மிஷம் நிரம்பிய சிரிப்பு என ஒரு டிபிக்கல் அரசியல்வாதியாக இந்தப் படத்தில் தோன்றியிருப்பார் கமல். ஒவ்வொரு கேரக்டரிலும் அசத்துவதைப்போலவே இந்த கேரக்டரில் மிக நுட்பமான உடல் மொழிகளை வழங்கி அசத்தியிருப்பார் கமல்ஹாசன்.

`சத்யமூர்த்தி’ – ‘சத்யா’

சத்யா
சத்யா

குடிசையில் இருக்கும் ஹீரோ காஸ்ட்லி ஷூ அணிந்திருப்பதாக காட்டிவந்த தமிழ் சினிமா சூழலில், ஒரு வேலையில்லா கோபக்கார இளைஞனின் எதார்த்த தோற்றத்தை இந்த கெட்டப் மூலம் அப்படியே வெளிப்படுத்தியிருப்பார் கமல். மொட்டையடித்து வளர்ந்த முடி, அடர்ந்த தாடி, கையில் காப்பு என அந்தக் காலத்து யூத்கள் பலரும் மினி சத்யாவாகவே ஏரியாவில் வலம் வந்தனர்.

`சாப்ளின் செல்லப்பா‘ – ‘புன்னகை மன்னன்’

கமல்ஹாசன் - சாப்ளின் செல்லப்பா
சாப்ளின் செல்லப்பா

உலகையே கலக்கிய சார்லி சாப்ளின் கெட்டப் போட்டு நடிக்க எவ்வளவு கட்ஸ் வேண்டும். அந்த கட்ஸ் கமலுக்கு இருக்கவேதான் அந்த கேரக்டரை ஏற்று அதற்கு சிறுதும் பங்கம் விளைவிக்காமல் சாப்ளினுக்குரிய குறும்புத்தனமான சேட்டைகளுடன் அசத்தியிருப்பார் கமல். ஒருவகையில் கமலின் கரியரில் இந்த கெட்டப் கொஞ்சம் ஸ்பெஷல்தான் எப்படியென்றால், இதற்குப்பிறகுதான் கமல் கெட்டப் விஷயத்தில் வழக்கத்தைவிட அதிகமாக படத்துக்குப் படம் தன் உருவத்தை மாற்றிக்கொள்வதில் ஆரம்பித்தார். 

Also Read : கமலின் டாப் 10 கெட்டப்கள்! (பகுதி-1)

1 thought on “‘நந்து’, ‘சாப்ளின் செல்லப்பா’… கமல்ஹாசனின் டாப் 10 கெட் அப்கள்! (பகுதி-2)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top