யானை

`பேச்சிலர் யானை, மதம் பிடிப்பது ஏன்?!’ யானை ரகசியங்கள்!

யானைகளுக்கு கோபம் எப்போ வரும்னு தெரியுமா?.. யானை காதை ஆட்டுவதற்கும் வேர்வைக்கும் சம்பந்தம் இருக்கு. தூண் மாதிரி தெரியும் யானையின் பாதம் எப்படி இருக்கும்னு உங்களுக்கு தெரியுமா? யானைகளிலும் பேச்சுலர் யானைகளும் இருக்கு. அது ஏன்னு தெரியுமா?… யானைகளைப் பத்தி நாம நிறைய படித்திருப்போம். நிறைய படங்களில் பார்த்திருப்போம். ஆனா, அதுங்களுக்கு இருக்கிற குணங்கள், அதன் பழக்க வழக்கங்கள் கொஞ்சம் வித்தியாசமானது… அதைப் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

‘பேச்சிலர்’ யானைகள்!

யானைகள் பொதுவாகவே கூட்டமாகத்தான் வாழும். ஆண் யானை அதன் பருவ வயதுக்கு வந்தவுடனேயே மத்த யானைகள் ஒன்றாக சேர்ந்து தனியே விரட்டிடும். இப்படி விரட்டப்பட்ட ‘பேச்சிலர்’ யானைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு கூட்டமாகத்தான் வாழும். பருவ ஆண் யானைகள் தனக்கானத் துணையைத் தேட ஆரம்பிக்கும். தனக்கு ஏற்ற துணையைக் கண்டதும் ஆண் யானை கொஞ்ச நேரம் கூட அதன் துணையை விட்டு விலகாமல் கூடவே பயணிக்கும்.

தலைமைப் பண்பு!

வயதான பெண் யானைதான் மத்த யானைகளுக்கு வழிகாட்டியாகத் தலைமையேற்று மொத்த கூட்டத்தையே கூட்டிட்டு போகும். ஒரு பெண் யானைக்கு வயசு அதிகமாகிவிட்டால் கூட்டத்தில் இருக்கிற அடுத்த சீனியாரிட்டியான பெண் யானை தலைமை பதவிக்கு வரும். அதே மாதிரி என்னைக்காவது ஒரு யானைக் கூட்டம், இன்னொரு யானைக் கூட்டத்துக்கூட சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளமும் கொண்டாட்டமாகவும் இருக்கும்.

காதை ஆட்டுவதன் ரகசியம்!

யானையுடைய நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மத்த இடத்தில் வியர்வை சுரக்காது. இதனால் உடல் வெப்ப நிலை சீரா இருக்காது. இதை சமன்படுத்துவதற்காக யானை காதை ஆட்டிக்கொண்டே இருக்கும். இதன் மூலமா உடம் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் வரைக்கும் குறைக்குமாம். இதைத் தவிர்த்து உடல் வெப்பத்தைக் குறைக்க தன்மேல் தண்ணீர் தெளிக்கிறது, எச்சிலை விழுங்குவது மூலமும் வெப்பநிலை குறைப்பில் ஈடுபடும்.

மதம் மூன்று மாதம்!

ஆண் யானைக்குக் காதுக்கும், கண்ணுக்கும் இடையில் உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இப்படி வழிவதைத்தான் யானைக்கு மதம் பிடிச்சிருக்குனு சொல்றாங்க. இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். யானைகளுக்கு பொதுவாகவே 15 வயதில் இருந்து 20 வயசுக்குள்ளதான மதம் பிடிக்க ஆரம்பிக்கும். 45 வயசு வரைக்கும் மதம் பிடிக்கும். மதம் பிடித்த ஆண் யானைக்கு மற்ற யானைகளைப் பிடிக்காது. பெண் யானையுடன் இணை சேரத் துடிக்கும்.

தொடர்பு கொள்வதில் கில்லாடிகள்!

இயற்கையாகவே யானைகளுக்குப் பார்க்கும் திறன் குறைவு. யானைகள் தொடுதல், அருகில் இருப்பவற்றைப் பார்த்தல், சத்தம், ரகசியமாகச் சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால் தங்களுடைய தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.. எல்லா படங்களிலும் யானை கோபமாக இருக்கும்போது பிளிறுகிற மாதிரி காடுவாங்க. ஆனால், உண்மையா மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் பிளிறும். கோபமாக இருக்கும் போது “கிரீச்… கிரீச்…’ என்ற சத்தத்தை வெளிப்படுத்தும்.

மிருதுவான பாதம்!

தூண்கள் மாதிரியான கால்களால் வேகமா ஓட முடியுமே தவிர, யானையால் தாவ முடியாது. யானையுடைய கால் பார்க்க ரொம்ப முரடா தெரியும். ஆனால் அந்த பாதம் மென்மையானது. நடக்கும்போது யானையின் பாதம் விரியும். தரையிலிருந்து காலை எடுக்கும்போது சுருங்கும்.

யானை எதிர்கொள்ளும் சிக்கல்கள்!

மனிதன் ஏற்படுத்தின வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்பவர்கள் யானைகள் பல சவால்களை சந்திக்கிறது.. இதுபோக காட்டுப்பகுதிக்கு வருகிற சுற்றுலாப் பயணிகள் சிலர், காலியான மதுபாட்டில்கள் எல்லாத்தையும் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். முன்னாடியே சொன்ன மாதிரி யானையுடைய பாதம் ரொம்ப சென்சிடீவ் ஆனது. அந்த பாட்டிலை மிதிக்கிற யானைகளுடைய பாதம் கிழிந்து சீல் பிடிக்கும். இதனால் யானைகள் நிறையவே பாதிக்கப்படுகிறது. அதனால் இனிமே அப்படி யாரும் பண்ண வேண்டாம் என தமிழ்நாடு நவ் சார்பா நாங்கள் வைக்கிற ஒரு வேண்டுகோள்.

Also Read : Sedition Law: தேசதுரோக வழக்குகள் பதிவுக்கு இடைக்காலத் தடை… வழக்கின் பின்னணி என்ன?

3 thoughts on “`பேச்சிலர் யானை, மதம் பிடிப்பது ஏன்?!’ யானை ரகசியங்கள்!”

  1. This entrance is phenomenal. The splendid substance displays the maker’s dedication. I’m overwhelmed and anticipate more such astonishing posts.

  2. I loved as much as youll receive carried out right here The sketch is tasteful your authored material stylish nonetheless you command get bought an nervousness over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top