கஞ்சா கருப்பு

சூப்பர் ஸ்டாருக்கு ‘நோ’.. மக்களுக்காக இலவச மருத்துவமனை! நடிகர் கஞ்சா கருப்பு சறுக்கிய கதை!

‘அண்ணே சவுக்கியமா, இவிய்ங்க மத்தியில வாழ்றதே பெரிய பொழப்புதான் யா, இப்ப சந்தோஷமா’ அப்படினு அப்பாவியா பேசுற கஞ்சா கருப்புவோட பக்கங்கள்தான் நமக்கு தெரியும். ஆனா கஞ்சா கருப்பு செய்ததை இன்னைக்கு இருக்கிற நடிகர்கள் கூட செய்ய தயங்குவாங்க அப்படிங்குறதுதான் நிதர்சனமான உண்மை. ஏன்னா அவர் செஞ்ச செய்கைகள் அப்படி. காமெடியன் அப்படிங்குறதை தாண்டி ஒரு நல்ல பெர்ஃபார்மர்.. அதுக்கான காரணம் என்ன, எங்கே சறுக்கினார் கஞ்சா கருப்பு, தமிழ் சினிமாவுக்கு கஞ்சா கருப்பு ஏன் முக்கியம் அப்படிங்குறதைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

கஞ்சா கருப்புவோட உண்மையான பெயர் கருப்பு ராஜா. தேனி மாவட்டம் பெரியகுளம்தான் சொந்த ஊர். கஞ்சா கருப்பு பிறந்ததே சினிமா கொட்டகையிலதான். கஞ்சா கருப்புவோட அம்மா கர்ப்பிணியா இருக்கும்போது எம்.ஜி.ஆர் நடிச்ச நினைத்ததை முடிப்பவன் படத்தைப் பார்த்திருக்காங்க. அப்போவே பிரசவ வலி வந்து கஞ்சா கருப்பு பிறந்திருக்கார். சின்ன வயசுலயே அப்பாவை கேன்சரால் பறிகொடுத்தவர். பள்ளிப்படிப்பை பாதியிலயே நிப்பாட்டிட்டு சித்தப்பா வைச்சுக் கொடுத்த சைக்கிள் கடையை கவனிக்க ஆரம்பிச்சார். 10 சைக்கிள்ல கடையை ஆரம்பிச்சார். அதை வாடகைக்கு விட்டு பிழைப்பை ஆரம்பிச்சார். 55 சைக்கிள் வரைக்கும் வாங்கி வாடகைக்கு விட்டார். கடைக்கு வர்றவங்க, பக்கத்துல டீ கடைக்கு போக ஆரம்பிச்சிருக்காங்க. சரி நாமளே டீக்கடை போடலாம்னு முடிவு பண்ணி சைக்கிள் கடைக்குப் பக்கத்துலயே டீக்கடை வைச்சிட்டார். அடுத்து கஸ்டமர்ஸ் ஹோட்டல் தேட அதையும் வைச்சு தொழிலை விரிவுபடுத்தினார், கஞ்சா கருப்பு.

அப்படி ஒரு நாள் வேலை பார்த்துகிட்டிருக்கும்போது, கடைக்கு எதிரே ஒரு புது கார் வந்து இறங்குது. அதிலிருந்து இயக்குநர் பாலா இறங்கினார். இட்லி கிடைக்குமானு கேட்டாற்ற். நெறைய கிடைக்கும்னு கருப்பு சொல்லிட்டு, இட்லிக்கு காரம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, தேங்காய், புதினானு 5 வகை சட்னியை வைச்சு அசத்தியிருக்கார். அப்பொவே ஒரு நாளைக்கு சைக்கிள், டீ, ஹோட்டல்னு நாளைக்கு 15,000 ரூபாய் சம்பாதிச்சார். அடுத்ததா பிதாமகன்ல கருப்புக்கு ஒரு ரோல் கிடைச்சது. இயக்குநர் பாலா இவருக்கு நெருங்கின சொந்தக்காரர். ஆனா ரொம்ப நாளா இதை கஞ்சா கருப்பு வெளில சொல்லவே இல்லை. பாலாகூட சென்னைக்கு வந்து இறங்கி, அவர் ஆபீஸ்லயே வேலை பார்த்தார். அப்படித்தான் அமீர் ஆபீஸ்ல இருந்து நடிக்க வாங்கனு போன் வந்திருக்கு. ஆனா அமீருக்கும் பாலாவுக்கும் சண்டைங்குறதால ஆரம்பத்துல யோசிச்சவர், அப்புறம் கிளம்பிட்டார். அப்படித்தான் ராம் படத்துல நடிச்சார். அதுக்கப்புறம் நான்ஸ்டாப்பா ‘சண்டக்கோழி’, ‘சிவகாசி’, ‘சம்திங் சம்திங்’, ‘சிவப்பதிகாரம்’, ‘தாமிரபரணி’, ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’னு பல படங்கள்ல நடிச்சார். அன்னைக்கு காலக்கட்டத்துல விவேக்-வடிவேலு மாதிரியே சந்தானம்-கஞ்சா கருப்பு ஜோடி பீக்ல இருந்தது. அப்படி இயக்குநர் ஷங்கர் தயாரிச்ச அறை எண் 305-ல் என் கடவுள் படத்துல ஹீரோவாவும் களமிறங்கினார்.

சுப்ரமணியபுரம் காசி, நாடோடிகள் மாரியப்பன், களவாணி பஞ்சாயத்து கேரக்டர்களையெல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போவுமே மறக்க மாட்டாங்கனு சொல்லலாம். எல்லாமே வேற வேற டைப்ல இருக்கும். கஞ்சா கருப்புவோட பலமே எதார்த்தம்தான். இன்னொரு வடிவேலுவை பிரதிபலிக்கிற மாதிரி இருந்தாலும், கஞ்சா கருப்புவோட பாடிலாங்வேஜ் வேற டைப்ல இருந்தது. பருத்திவீரன்ல அப்பாவியான கஞ்சா கருப்புவை உதாரணமா எடுத்துக்கலாம். அதுல கோபம் கொந்தளிக்கிற மாதிரியான இடங்கள்ல கூட அப்பாவியான நடிப்பு கஞ்சா கருப்புவோடது. தேனி மாவட்ட ஸ்லாங்கால அசால்ட்டா அடிச்சு துவம்சம் பண்ணார். சுப்ரமணியபுரம் காசி மாதிரியான நெகட்டீவ் ரோல் அதுக்குப் பின்னால கஞ்சா கருப்புக்கு வரலைன்னுதான் சொல்லணும். அப்படி வந்திருந்தா இன்னும் பல பரிமாண நடிப்பு அவர்கிட்ட இருந்து வெளிப்பட்டிருக்கும். காமெடியைத் தாண்டி, ஒரு நல்ல பெர்ஃபார்மர் கஞ்சா கருப்பு. ஆனா தமிழ் சினிமாவோட சாபம் பணம், கொடுக்கல் வாங்கல் நஷ்டத்தால அமீர், சமுத்திரகனி, கஞ்சா கருப்புனு பலபேரைக் கட்டிப்போட்டிருக்குன்னே சொல்லலாம். ஒரு டைம்ல சந்தானம் ஹீரோனு முடிவு பண்ண காமெடிக்கான இடம் காலியாவே இருந்தது. அதுல கஞ்சா கருப்புதான் அமர்வார்னு நினைச்சுக்கிட்டிருந்த நேரம் சூரி, யோகிபாபுனு பலர் உள்ள வந்தாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மார்க்கெட்டை இழக்க ஆரம்பிச்சார், கஞ்சா கருப்பு.

Also Read – எம்.ஆர்.ராதா-வின் ரீல் – ரியல் தக் லைஃப் சம்பவங்கள்!

பீக்ல இருந்தப்போவே மருத்துவர் சங்கீதாவை திருமணம் பண்ணிக்கிறார். அந்த மேடையிலதான் ரொம்ப நாளைக்கு அப்புறமா பாலாவும், அமீரும் ஒன்னா இருந்தாங்க. அப்படி ஒரு மேஜிக்கையும் கஞ்சா கருப்பு பண்ணார். தன் சொந்த ஊர்ல மக்கள் எல்லோரும் இலவசமா படிக்கணும்னு 10 ஏக்கர்ல நிலம் வாங்கி ஆரம்பக் கட்ட பணிகளை ஆரம்பிச்சார். இதுபோக மனைவி மூலம் இலவச மருத்துவமனை கட்டும் திட்டத்தையும் அறிவிச்சார். சென்னையில வாங்குன வீட்டுக்கு பாலா-அமீர் இல்லம்னு தன்னோட குருக்கள் பேரையே வைச்சார். ஆனா விதி ரொம்பவே கொடுமையானது. சொந்தப்படமா வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரிச்சார். படம் பெரிய நஷ்டத்தைத் தந்தது. அதோட விளைவா சென்னையில இருந்த வீட்டை விற்பனை செஞ்சார். வாடகை வீட்டுக்கு குடியேறினார். அடுத்தடுத்து அவங்க வீட்ல கடன் தொல்லை தாங்காம அதனால துன்பப்பட்டு 5 பேர் அடுத்தடுத்து இறந்தாங்க. அப்புறம் தமிழ்ல கொஞ்ச காலம் பட வாய்ப்புகளே இல்லாம இருந்தார். இடையில சினிமாவுல இருந்து கொஞ்சம் தொலைவுக்குப் போனார். கொஞ்சம் நாள் விட்டு தர்மதுரையில வாய்ப்பு கிடைச்சது. அப்பிறம் பிக்பாஸ்ல கலந்துகிட்டு கொஞ்சம் லைம் லைட்டுக்கு வந்தார். அது கொடுத்த தெம்பால அடுத்தடுத்து நிறைய படங்கள்ல நடிச்சுகிட்டிருக்கார். இடையில கொஞ்ச காலம் அரசியலுக்கும் போனார். ஆனா அதுல பெரிசா வரமுடியலை.

கஞ்சா கருப்புவும் அவரது மனைவி சங்கீதாவும் இணைந்து சில மன நலம் குன்றிய குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களோட படிப்பு செலவை ஏத்துக்கிட்டாங்க. திருச்சி பக்கத்துல இருக்கிற மனநலம் குன்றியோர் ஸ்கூலுக்கு போய் அங்கு படிச்சு வர்ற 10 குழந்தைகளுக்கு 30,000 ரூபாய் வழங்கினர். இதை பெரிசா எங்கேயும் வெளில சொல்லிக்கிட்டதே இல்லை கஞ்சா கருப்பு. அதே கஞ்சா கருப்புதான் இன்னைக்கு குழந்தைகளுக்கு ஸ்கூல்ஃபீஸ் கட்ட தவிச்சுக்கிட்டு இருக்கார். இது எல்லாத்தையும் விட இவரோட மேனேஜரால ரொம்ப பணத்தை இழந்து பொருளாதார ரீதியாவும் கஷ்டப்படுறார். பேட்ட படத்துக்கு வாய்ப்பு வந்த நேரம் சண்டக்கோழி-2 கால்ஷீட் டைட்டா இருந்ததால கஞ்சா கருப்புவால பண்ண முடியாம போயிடுச்சு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top