கௌதம் மேனன்

பாவம்யா நாங்க.. நடிகர் கௌதம் மேனன் வேணாம்.. டைரக்டர்தான் வேணும்!

பரத்வாஜ் சொல்ற மாதிரிதான் கௌதம் மேனன் கால்ஷீட் இல்லைனா, இன்னைக்கு தமிழ் படங்கள் பூஜை நடக்காதுன்ற லெவலுக்குதான் போய்கிட்டு இருக்காரு. ஒருபக்கம் அவரோட ஸ்டைலிஷான ஆக்டிங்கை படங்கள்ல பலர் ரசிச்சாலும், இன்னொரு பக்கம்.. கைகாச போட்டாவது உங்க கடனை அடைச்சிடுறோம், தயவு செய்து நல்ல படத்தை மட்டும் டைரக்ட் பண்ணுங்க, நடிக்காதீங்கனு மீம்ஸ் போட்டு அவரை பயங்கரமா வைச்சு செய்துட்டு இருக்காங்க. டைரக்டர் கௌதமை ஏன் மிஸ் பண்றோம்.. நடிகர் கௌதமை மேனனை ஏன் வேணாம்னு சொல்றோம்?

கௌதம் மேனன்
கௌதம் மேனன்

ஓ மை கடவுளே படம் தியேட்டர்ல பார்க்கும்போது திடீர்னு ஜி.வி.எம் வாய்ஸ். தியேட்டருக்கே சர்ப்ரைஸ், நீங்க ஏன் நடிக்கக்கூடாதுனு கத்திச்சு.. நீங்க வந்த எல்லா ஸ்டைலிஷ் ஆக்டரையும் தூக்கி சாப்பிடலாம்னு ஏத்தி விட்டுச்சு.. ஆனால், கௌதம் உடனே அந்த முடிவை எடுக்கல..இப்பவும் அந்த சத்தம் காதுல கேக்குது. அடுத்துப் பார்த்தா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். மவனே சம்பவம்.. அதுவும் கார்ல இருந்து இறங்கி ஃபாலோ பண்ணிட்டு வந்தவங்ககிட்ட போய், என்ன ஸ்கெட்ச்சா, நான் இங்கயே வெயிட் பண்றேன், வரியானு கேட்டு.. நீ வேணும்னா சண்டைக்கு வானு கூப்பிடுற மொமண்டுலாம் மாஸ் ஹீரோவுக்கே கிடைக்காது. டோட்டல் க்ரௌட்.. மாஸ்னு தியேட்டரை கதிகலங்க வைச்சுச்சு. அதுவும் விண்ணைத்தாண்டி வருவாயா ரெஃபரன்ஸ் வரும்போதுலாம் யார் காலும் தரைல இல்லை. இவ்வளவு ஸ்டைலிஷான போலீஸ் ஆஃபிஸர பார்த்துருக்கீங்களா? ஆனால், அடுத்து விழுந்தது இடி.. தர்ம அடி.. அதாங்க, ருத்ர தாண்டவம். அதை ஸ்கிப் பண்ணிடுவோம். அப்புறம் போலீஸ்னாலே இவரை மாதிரி ஸ்டைலா, கெத்தா இருக்கணும்னு தோணிச்சு. தொடர்ந்து கிட்டத்தட்ட அப்படியான ரோல்தான் பண்ணிட்டும் இருந்தாரு. லாக் டௌன்ல பாவக்கதைகள் ரிலீஸ் ஆச்சு. என்னடா, தொண்டை கவ்வுதுனு தோணிச்சு. ஆமா, கிராமத்துல வேஷ்டி சட்டை கட்டிட்டு கலக்குற அப்பா வித் எலைட் மேனரிஸம். சர்க்கரை பொங்கலும் வட கறியும் மாதிரி.. ஜஸ்ட் கிக் தேட் ஜெஸி. கட் பண்ணா சமீபத்துல வந்த லோ பட்ஜெட் கே.ஜி.எஃப்ல டான். அந்தாங்க மைக்கேல். போலீஸ்.. கிராமத்து அப்பா.. சிட்டி பாய்.. டான்.. வில்லன்.. அரசியல்வாதி.. இலுமினாட்டி.. இப்படி எல்லா கேரக்டர்லயும் ஜி.வி.எம் மட்டுமே தெரிய ஆரம்பிச்சாரு. வாரத்துக்கு ஏழு படம் ரிலீஸ் ஆச்சுனா, 14 படத்துல ஜி.வி.எம் இருந்தாரு.

கௌதம் மேனன்
கௌதம் மேனன்

டாக்டர்.. டாக்டர்.. எந்தப் படம் பார்த்தாலும் அதுல ஜி.வி.எம் தெரியுறாரு.. எதாவது வியாதியானு கேக்குற அளவுக்கு மைண்ட்ல அவர் ஸ்டைல்ல உட்கார்ந்துட்டாரு. எக்ஸ்ட்ரீம் என்னனா, லவ் டுடேல ஜி.வி.எம் மாதிரி குருபாய் நடிச்சிருப்பாரு.. அந்தக் கேரக்டரை எங்கிட்ட கேட்ருந்தா நானே நடிச்சிருப்பேன்றாரு.. உண்மையாவே பணக்கஷ்டமாயானுதான் தோணுச்சு. இப்போ, உன் ஆணவத்தையும் அக்ரமத்தையும் அடக்க ஒருத்தன் வருவான்டானு விஜய் சேதுபதிகிட்ட பெட் கெட்டுன மாதிரி அவருக்கே போட்டியா வந்து நிக்கிறாரு. பத்து தல கேரக்டர்லாம் சுத்தமா செட் ஆவல.. டைரக்‌ஷனுக்கு திரும்பிருங்க ஜி.வி.எம். நீங்க தமிழ் சினிமால பண்ண மேஜிக்கை வேற யாராலயும் பண்ண முடியாது. அந்த மாதிரி நீங்க டைரக்டரா செம கம்பேக் கொடுக்கணும்னு தோணுச்சு. இவ்வளவு சொல்றியே.. டைரக்டரா அப்படி என்ன பண்ணாருனு நீங்க கேக்கலாம்.. சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க.

பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம்ல தொடங்கி லோகேஷ் வரைக்கும் பலர் தமிழ் சினிமால டிரெண்டிங் டைரக்டரா இருந்துருக்காங்க. இவங்களுக்கு இடைல வந்து பல இளைஞர்களோட ட்ரீம் டைரக்டரா மாறுனது, நம்ம கௌதம். எல்லாத்துக்கும் காரணம் காதல்தான். தன்னோட முதல் படத்துல இருந்து கடைசி படம் வரைக்கும் காதல் பத்தி சமூகத்துல இருக்குற ஏகப்பட்ட ஸ்டீரியோடைப் பர்னிச்சர்களை உடைச்சிருக்காரு. மின்னலே படம் எடுத்துப்போம்.. நம்ம காதலிக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சுனா முடிஞ்சுதுனு மைண்ட் செட் பண்ணி, தாடி வளர்த்துட்டு இருந்த காலத்துல, நம்ம கௌதம், கல்யாணம் ஆகலைல? ட்ரை பண்ணுடா அப்டினு மின்னலேல சொல்லி புது நம்பிக்கையே கிரியேட் பண்ணி விட்டாரு. ஒரு பொண்ண பார்க்குறோம், காதல சொல்ல தயங்கி விட்டுறோம், அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு காதலை அன்னைக்கே சொல்லிருக்கலாம்னு நினைப்போம். அவங்க மண்டைலயே கொட்டி, மொதல்ல போய் சொல்றா வெண்ணனு அனுப்புனது நம்ம கௌதம்தான். ஷார்ட்டா சொல்லணும்னா, வென்றால் முயற்சி.. தோற்றால் பயிற்சினு வேட்டையாடு விளையாடுல சொல்லியிருப்பாரு.

எல்லாருக்கும் காதல் தோல்வி வரும். தண்ணி, தம்முனு உடம்பை கெடுத்து குட்டிச்சுவராக்கி, வாழ்க்கையை தொலைச்சு காதல் பரத் மாதிரி சுத்தினு இருப்பாங்க. அவங்களுக்கு, உங்க உடம்பை ரெடி பண்ணுங்க, புடிச்சத செய்யுங்க அப்டினு வாரணம் ஆயிரம்ல போற போக்குல சொன்னத இன்னைக்கு இருக்குற 2’கே கிட்ஸ்கூட ஃபாலோ பண்ணிட்டு சுத்துறாங்க. ஜிம்ல வர்ற பையன்கூட மேகனானு சொல்லி 5 கிலோ தம்பிள்ஸ தூக்குறான். எல்லா காதல் தோல்விக்கு அப்புறமும் இன்னொரு காதல் இருக்கும், அந்தக் காதல் உங்க வாழ்க்கையை இன்னும் அழகாக்கும்னு அட்லீக்குலாம் முன்னாடியே சொன்னது எங்க பெரியண்ணன். காதல் அதுவா தாக்கணும்.. தலைகீழா போட்டு திருப்பணும்.. அப்படி திருப்பிச்சுனா என்னலாம் நடக்கும்னு விண்ணைத்தாண்டி வந்து இறங்கி பண்ணிருப்பாரு. படத்துல ஹீரோ ஹீரோயின் லவ் பண்ணா, கண்டிப்பா சேரணும்.. இல்லைனா, ஒருத்தர் சாகணும். இதுதான் எழுதப்படாத விதி. அப்படிலாம் இல்லை, எதார்த்தத்துல தங்களோட காதலை நினைச்சு வாழ்ற, சேராத காதலர்கள்தான் இருக்காங்க. அவங்கள ரெப்ரசண்ட் பண்ணியும் படம் எடுக்கலாம்னு தூள் கிளப்பியிருப்பாரு. அதுமட்டுமா? லவ் பண்ணாலே, ஜூனியரதான் லவ் பண்ணனும், வயசுல பெரியவங்கள கல்யாணம் பண்ணக்கூடாதுனுலாம் சொல்லிட்டு இருக்காங்க. அதெல்லாம் துவைச்சு துவம்சம் ஆக்கியிருப்பாரு.

Also Read – எஸ்.பி.பி வாய்ஸ் யாருக்கு செமயா செட் ஆச்சு?… நம்பர் 1 யாரு?

திருமணம் ஆகி சிங்கிளா இருக்குறவங்கள, லவ் பண்றது தப்பு, குழந்தை இருந்தா கல்யாணம் பண்ணலாமா அப்படி இப்படினு சமூகத்துல ஆயிரம் விஷயம் இருக்கு. ஆனால், அதை அவ்வளவு ஈஸியா தூக்கிப்போட்டு, உன் லைஃப், உனக்கு புடிச்சிருக்கா, டிசைட் பண்ணிக்கோனு என்னை அறிந்தால்ல சொல்லியிருப்பாரு. இப்படி சென்ஸிடிவான சில காதல் விஷயங்களை அவ்வளவு ஈஸியா பேசி நார்மலைஸ் பண்ணியிருப்பாரு. காதல் அவ்வளவு அழகானது, நீங்க ஒரு ஸ்டெப் எடுத்து வைங்க, அடுத்த ஸ்டெப் அவங்க எடுத்து வைச்சா, முன்னால போங்க, இல்லைனா வொர்க் அவுட் ஆகாது, பேக் அடிச்சிடுங்கனு சிம்பிளா சொல்லுவாரு. காதல் பாட்டுலாம் எடுத்துக்கோங்க.. தமிழ்ல உள்ள ரொம்ப ரேரான, அழகான வார்த்தையை பாட்டுல பயன்படுத்துவாரு. வசீகரால தொடங்கி கலாபம் வரைக்கும் அந்த வார்த்தை லிஸ்ட் பெருசு. வெற்றிமாறன் சொல்லுவாரு, மணிரத்னம் பாட்டை பிக்சரைஸ் பண்ண டெம்ப்ளேட் ஒண்ணை கிரியேட் பண்ணாரு. அதுக்கப்புறம், இன்னைக்கு வரைக்கும் உள்ள யங் டைரக்டர்ஸ் தங்களோட பாடலை பிக்சரைஸ் பண்றது கௌதம் டெம்ப்ளேட்லதான். காக்க காக்கல என்னனு சொல்லாமலேயே, முதல்ல உயிரின் உயிரே பாட்டு போட்டு ஓடிட்டு இருப்பாங்க. பார்த்ததும், இது புதுசா இருக்குணேனுதான் தோணுச்சு.

கௌதம் மேனன்
கௌதம் மேனன்

தனி ஒருவன் சித்தார்த் அபிமன்யு, இரும்புதிரை சத்தியமூர்த்தி, விக்ரம் சூர்யானு இன்னைக்கு ஏகப்பட்ட ஸ்டைலிஷ் வில்லன்கள் இருக்கலாம். ஆனால், விதை கௌதம் போட்டது. வேட்டையாடு விளையாடுல டாக்டர்ஸ்தான் வில்லன். அவங்க மேனரிஸம்தான் இன்னைக்கும் பலர் வில்லன்னு சொன்ன இமிடேட் பண்றாங்க. எக்ஸ்ட்ரீம் ஸ்டைலிஷ்னெஸ்னா விக்டர்தான். ஹேர்ஸ்டைல், டிரெஸ்ஸிங் சென்ஸ், பேசுறதுனு எல்லாமே அவ்வளவு ஸ்டைலா இருக்கும். வில்லன் இல்லாமலேயும் படம் எடுக்கலாம்னு சொன்னதும் கௌதம்தான். மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் படங்கள்லயெல்லாம் வில்லன்னு சொன்னா யாரும் நியாபகம் வரமாட்டாங்க. அதான் ஸ்பெஷலே. கைல காப்பு போட்டது, புல்லட் கொடுத்தது, கெட்டவார்த்தை பேசுறதுலயும் ஸ்டைல் இருக்குனு சொன்னது, பொன்னுங்க கால்லயே வாழணும்னு சொன்னது, வாய்ஸ் ஓவர் கொடுக்குறதுனு மனுஷன் ஏகப்பட்ட ஸ்டீரியோடைப்பை உடைச்சிருக்காரு, ஸ்டீரியோடைப்பை கொடுத்துருக்காரு.

கௌதம் கடைசியா நல்ல படம் கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமானு நீங்க கேட்கலாம். என்ன ஒரு 13 வருஷம் இருக்குமா? அப்போ.. வெந்து தணிந்தது காடு ஹிட்டா இல்லையான்ற கேள்வி உங்களுக்கு வரும். அது ரகசியம்.. ரகசியத்துக்குலாம் பதில் சொல்றதில்ல!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top