யாரு நம்ம சீமான் அண்ணனா… ஆதிபுருஷ் – ராம் சேது ரோஸ்ட்!

ஆதிபுருஷ் ட்ரெய்லர் வந்தப்போவே நிறைய பேர் கமெண்ட்ல ரோஸ்ட் கேட்டீங்க. எதுக்கு தேவையில்லாமல் ஒருத்தர கலாய்க்கணும்னு நினைச்சுட்டு இருந்தோம். அதாவது வெந்து தணிந்தது காடு மோட்ல இருந்தோம். அப்போதான், திடீர்னு ஒரு ஒளி. நம்ம அக்‌ஷய் குமார் கைல ராமர் பாலத்து கல்லோட கடல்ல நடந்து வந்துட்டு இருக்காரு. ரைட்ரா, எட்ரா வண்டிய, போட்றா ரோஸ்டனு கிளம்பியாச்சு. அப்புறம் என்ன ஆரம்பிக்கலாமா?

பிளவுபடட்டும் இந்த பூமியும் ஆகாயமும்னு டீசர்ல வாய்ஸ் ஆரம்பிக்கும்போது நம்ம ராமர், அம்புகளை வான் நோக்கி, அதாவது அதை தாக்குங்கன்ற மோட்ல ஏலியன்ஸ் மாதிரி வர்றவங்களை தாக்கிட்டு இருப்பாரு. இந்த சிக்கன் ஷூட்டர் கேம்லா விளையாடி இருக்கீங்களா? அதுல டார்கெட் என்னனா, நிறைய குட்டி பறவைகள் நம்மள அட்டாக் பண்ண வரும். அதை சுட்டு தள்ளனும் இதான் கேம். எதுக்கு சொல்றேன்னா. இந்த கேம்தான் டீசர்ல வர்ற இந்த சீனுக்கு இன்ஸ்பிரேஷன். அடிச்சு சொல்லலாம். சரி, ரொம்ப நாளா டவுட்டு வலதுசாரிகள் எப்பவுமே பேசும்போது ஃபேக்ட்டா எடுத்து வைக்கவே மாட்டாங்களா? அவங்க பேசுறது, எதிர்கருத்துலாம் நிரூபிக்க எப்பவுமே கதைகளை மட்டும்தான் யூஸ் பண்ணுவாங்களா? எதுக்கு இதை கேட்டேன்னா. சும்மா, அதுக்கு கேட்டேன்.

adipurush
adipurush

பிரபாஸ் சினிமா வாழ்க்கையை நினைச்சா ரொம்ப பாவமா இருக்குனு நிறைய பேர் ட்வீட் போட்டுட்டு இருந்தாங்க. “சாஹோ, ராதே ஷ்யாமையே கொடுமைன்னீங்களே இருங்கடா அதை விடக் கொடூரமா ஒண்ணை இறக்குறேன். பிரபாஸ் சவால்!”னு ஒருத்தர் ட்வீட் போட்டு வைச்சிருக்காரு. இன்னொருத்தர், “மிர்சி கிர்சினு எதோ மசாலா படம் பண்ணி நல்லா இருந்தாங்க. அவர கூட்டிட்டு போயி பாகுபலி ஆக்கி இப்போ ஆதிபுருஷ்னு காமெடி பண்ணி வைச்சிருக்கீங்க”னு ட்வீட் போட்ருக்காரு. இவங்களாவது பரவால்ல. ஏன்டா, ஒரு ஜன்டுபாம் விக்கிறவன் எவ்வளவு அழகா கிராஃபிக்ஸ், விஎஃப்எக்ஸ்லாம் பண்ணியிருக்கான். நீங்க என்னடா இவ்வளவு கேவலமா பண்ணி வைச்சிருக்கீங்க. உங்க 500 கோடி புராஜெக்டுக்கு சூப்பர் மேரியோ வீடியோ கேம் எவ்வளவோ பரவால்லடானு கதறி வைச்சிருக்காங்க. இதுக்கிடைல தம்பிகள், என்னடா எங்க அண்ணன் கிராஃபிக்ஸ் பண்ணி வைச்சிருக்கீங்கனு பிரபாஸ் – சீமான் ஃபோட்டோ போட்டு ஓட்டிக்கிட்டு இருக்காங்க. அண்ணன் மேல உங்களுக்கு ஏன்டா, இவ்வளவு வன்மம்.

சரி, எப்போ சார் ராம் சேதுவுக்கு வருவீங்க?னுதான கேக்குறீங்க. வெயிட் வறேன்!

பான் இந்தியா படம்னு டீசர் வெளியிட்ட இவங்கள அந்த படத்தோட கருத்துக்கு ஒத்துப்போகாதவங்க வைச்சு செய்றாங்க. இது பரவால்ல செவ்வாழை. மத்திய பிரதேசத்தோட உள்துறை அமைச்சர், “இந்த டீஸர்ல ஆட்சேபத்திற்குரிய காட்சிகள்லாம் இருக்கு”னு சொல்லிருக்காரு. என்னடானு கேட்டா, “ஹனுமான் தோலால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதாகக் காட்டுறாங்க. இம்மாதிரியான காட்சிகள், மத உணர்வுகளைப் புண்படுத்துகின்றன. இந்தக் காட்சிகளை படத்துல இருந்து நீக்கும்படி ஓம் ராவுத்தரிடம் தெரிவித்துள்ளேன். அவர் நீக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்”னு சொல்லியிருக்காரு. அமைச்சர் அவர்களே, உங்களுக்கு அவ்வளவு டீட்டெய்லிங் தெரியுதா? எங்களுக்கு எல்லாமே கேமிங்ல வர்ற கேரக்டர்ஸ் மாதிரிதான் இருக்கு. சுட்டி டிவி கேரக்டர்கள்லாம் சேர்ந்து எங்களுக்கே டஃப் கொடுப்பான் போல, இந்த கேமை எப்போ ரிலீஸ் பண்ணுவீங்கனுலாம் மீம்ஸ் போட்டுட்டு இருக்காங்க.

என்னங்கடா வீடியோ கேம் எடுத்து வைச்சிருக்கீங்கனு ஒருபக்கம் ஓட்ட ஆரம்பிச்சதும், ஓம் கம் டு ரூம்-னு பிரபாஸ் ரைமிங்ல, காண்டுல டைரக்டரை கூப்பிட்டதைப் பார்த்து, “ரூம்க்குள்ள கூட்டிட்டுப் போய் பொளக்கப்போறாரு”னு இவங்க ஆதியிலேயே ஆதிபுருஷ்க்கு பிரச்னைனு கிளப்பிவிட்டதுலாம் ஹைலைட்டு. அப்புறம் பிரபாஸ் வந்து, “ஆதிபுருஷ்’ டீசர் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்!”னு சொன்னாரு. சும்மாவே செய்வாங்க. கண்டெண்ட் கொடுத்தா விடுவாங்களா. அதுக்கு இவங்க, “அப்படியே… படத்தை ‘போகோ’ சேனல்ல ரிலீஸ் பண்ண ஏற்பாடு செஞ்சிடுங்க..!”னு கலாய்ச்சு விட்டாங்க. இடைல, நம்ம சூர்யா ஃபேன்ஸ், “பங்கு எதாவது எசக்கு பிசக்கு ஆச்சு”னு சிவாக்கிட்ட சொல்ற மாதிரி ட்வீட் போட்டுட்டு இருந்தாங்க. பொதுவா, வில்லன் பாவப்பட்டவங்களைப் போட்டு அடிக்கும்போது ஹீரோ வந்து வில்லன் தோள் மேல கையை வைச்சு காப்பாத்துவாருல. இப்போ, ஆதிபுருஷ் டீம்க்கு ஹீரோ அக்‌ஷய்குமார்தான். அதாவது ராம் சேது டீம். 

Ram Setu
Ram Setu

ராம் சேதுல என்னடா பர்னிச்சரை உடைச்சீங்கனு வந்து பார்த்தா, அதேதான் அதேதான். ராம் சேது அதாவது ராமர் பாலம் ஃபஸ்ட் லுக் வந்தப்போவே, “என்னடா பக்கத்துல புள்ள டார்ச்லைட் வைச்சிட்டு இருக்கு. ஹீரோ, அதை மதிக்காமல் தீப்பந்தம் ஏந்திட்டு நிக்கிறான். யார்ரா இவன்”னு கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுல அக்‌ஷய் குமார் சயிண்டிஸ்ட் வேற. என்னத்த படிச்சானோனு கமெண்ட்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. டீசர்ல உண்மையை யாராலயும் மறைக்க முடியாதுனுலாம் அக்‌ஷய் குமார் பேசும்போது, நம்ம ஊர்ல மோகன் ஜிக்கே மொரட்டு டஃப் கொடுப்பாரு போலயேனு நமக்கு தோண வைக்கும். அப்படியே தமிழ்ல வந்த இந்த ட்ரெய்லர் கமெண்டுக்கு போனோம்னு வைங்க. செம ஃபன் காத்துட்டு இருக்கு உங்களுக்கு. “பாம்பன் பாலம் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள், கண்ணாண கண்ணே சீரியல் ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இராவணன் ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்”னு அப்படி கமெண்ட் பண்ணி வைச்சிருக்காங்க. இன்னும் நிறைய கமெண்ட் பண்ணி வைச்சிருக்காங்க. சொன்னா, கண்ணுல கண்ணீர் வர்ற அளவுக்கு சிரிப்பீங்க. அந்தக் கண்ணீர் சிலநேரங்கள்ல ரத்தக்கண்ணீராவும் வர வாய்ப்பு இருக்கு. அதனால, அப்படியே கட் பண்ணிடுவோம். 

சமீபத்துல வந்த இந்த ரெண்டு படங்களோட டீசர்லயுமே இலங்கையை எதிர் நிலப்பரப்புல வைச்சு காமிச்சிருக்காங்க. லாஸ்லியாக்களையும் ஜனனிக்களையும் தந்த மண் அது. அதைப்போய் எதிர்ல வைச்சு பார்க்க உங்களுக்கு எப்படி மனசு வருதுனு தெரியல. என்னமோ போங்கடா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top