தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர், நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. பத்து ஆண்டுக்கு ஒரு முறை ஹிட் பாடல் கொடுப்பார். ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதெல்லாம் எனக்கு முக்கியமே இல்லை” என்று தெரிவித்திருந்தார். பாலகிருஷ்ணாவின் இந்தப் பேச்சு ஏ.ஆர்.ரஹ்மன் ரசிகர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அவரது படங்களில் வரும் காட்சிகளைப் பகிர்ந்தும் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில், அறிவியலையே குழப்பும் விதமாக அவரது படங்களில் வந்த டாப் ஐந்து காட்சிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம். கட்டுரையில் முடியில் உங்களுக்கும் ஒரு டாஸ்க் இருக்கு அதையும் நீங்க கண்டுபிடிங்க!
காட்சி 1
டிரெயின் வேகமா போய்ட்டு இருக்கும். அதை பைக்லயே போய் சேஸ் பண்ணுவாரு. சேஸ் பண்ணி டிரெயினுக்கு மேலயே போய் பைக்ல டிராவல் பண்ணுவாரு. டிராவல் பண்ணி டிரெயின் இன்ஜினுக்கு முன்னாடி பைக்கோட வந்துருவாரு. இதுல என்ன பிரமாதம்னுதான கேக்குறீங்க. இனி தான் பிரமாதமே இருக்கு… பைக்கை இன்ஜினுக்கு முன்னாடி போட்டுட்டு டிரெயினுக்கு அடியோட வந்து பெட்டில ஏறுவாரு. பைக் வெடிச்சிரும். ஆனால், இவர் உடம்புல சின்ன கீரல் கூட இல்லாம எழுந்து வந்துருவாரு.
காட்சி 2
முன்னாடி டிரெயின் சீன் பாத்தோமா.. இப்போ ஏரோ பிளேன் சீன். பிளேன் ஒண்ணு ஏர் போர்ட்ல இருந்து புறப்பட்டு வந்துட்டு இருக்கும். அதுக்கு முன்னாடி பாலகிருஷ்ணா நின்னுட்டு இருப்பாரு. பிளேன் வேகமா வரும். அப்போ, தன்னோட துப்பாக்கியை எடுத்து பிளேனோட டயர்ல சுடுவாரு டயர் இரண்டும் தனியா கழண்டு போகும். உள்ள இருந்த வில்லன்கள் பிளேனோட கதவு திறந்து வெளியே வந்து விழுவாங்க.
காட்சி 3
பெரிய மலை ஒண்ணு 90 டிகிரி ஆங்கிள்ல இருக்கும். அதுல கஷ்டப்பட்டு ஏறுவாரு. ஏறும்போது கொஞ்சம் ரெஸ்ட்லாம் எடுப்பார்னா பாத்துக்கோங்க. அப்போ கழுகு ஒண்ணு முயலை கொத்திட்டு இருக்குறத பார்ப்பாரு. ஒரே ஜம்ப்.. கழுகை விரட்டிட்டு முயலை காப்பாத்துவாரு. அந்தரத்துல ஒரு கையால மலைய புடிச்சி தொங்கிட்டு இருப்பாரு. இன்னொரு கைல முயலை புடிச்சிருப்பாரு. இதைப் பார்த்து பாலகிருஷ்ணா ஃபேன்ஸ் சில்லறையல்லாம் சிதற விட்டாலும் விட்ருப்பாங்க.
காட்சி 4
இப்போ சொல்லப்போற காட்சியை பெரும்பாலும் நீங்களே பார்த்துருப்பீங்க. தொடைல கைய ஒரு தட்டு தட்டி டிரெயின பார்த்து `பின்னாலே போ’ அப்டின்ற மாதிரி கைய காட்டுவாரு. டிரெயினும் பின்னாடி போகும். கூஸ் பம்ப்ஸ் மூம்ண்ட்ல!
காட்சி 5
ஃபைட், ஸ்டண்ட் சீன்ஸ்லாம் பாத்துட்டோம். இப்போ மங்களகரமான சீன் ஒண்ணு பார்த்துடலாமா? பாலகிருஷ்ணாவை ஜெயில்ல அடைச்சிருப்பாங்க. குறுக்க கம்பி இருக்குறத மறந்துட்டு ஹீரோயினுக்கு ஜெயில்ல வச்சே தாலி கட்டிருவாரு பாலகிருஷ்ணா. ஹீரோவ பார்த்துட்டு ஹீரோயின் திரும்பும்போது தாலி கம்பில மாட்டியிருக்குறத பார்ப்பாங்க. உடனே ஹீரோ கம்பியை வளச்சு நெளிச்சு உடைச்சு தாலியை எடுத்துக்கொடுப்பாரு. வேற லெவல்ல.
பாலகிருஷ்ணாவோட ஸ்டண்ட் சீன்கள் மட்டுமில்ல டான்ஸ், சிங்கிங் ஸ்டைல், டயலாக் டெலிவரினு ஏகப்பட்ட விஷயங்கள் சொல்றதுக்கு இருக்கு. ஆனால், நீங்க தாங்க மாட்டீங்க அப்டின்றதால இதோட முடிச்சுக்கலாம். உங்களுக்கான டாஸ்க் என்னனா.. இந்தக் காட்சிகள் எந்தப் படத்துல வரும்னு கரெக்டா கண்டுபிடிச்சு கமெண்ட்ல சொல்லுங்க.
Also Read : வரதட்சணை கொடுமை… கன்னியாகுமரி அருகே கொட்டும் மழையில் பெண் வழக்கறிஞர் போராட்டம்!