பிரம்மாஸ்திரா டீம்… பாலையாகிட்ட இருந்து கத்துக்கங்க! 

பிரம்மாஸ்திரானு ஒரு படத்தோட ட்ரெய்லர் வந்து டிரெண்டிங்ல போய்கிட்டு இருக்கு. அந்த ட்ரெய்லர் பார்க்கும்போது நம்ம முகத்தைப் பக்கத்துல இருக்குறவங்க பார்த்தா நம்ம முகத்துல மஞ்சள், பச்சை, சிவப்பு, நீலம்னு கலர் கலரா லைட் எரியுற மாதிரி இருக்கும். அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா அப்டினு ஏகப்பட்ட பாலிவுட் செலிபிரிட்டீஸ் நடிக்கிற இந்தப் படம் மூணு பார்ட்டா வெளிவருது. ஆனால், படத்துல வர்ற வி.எஃப்.எக்ஸ் எஃபெக்ட் சீன்ஸ்லாம் ரொம்ப கேவலமா இருக்குனு சோஷியல் மீடியால வைச்சு செஞ்சிட்டு இருக்காங்க. இந்த மாதிரியான வி.எஃப்.எக்ஸ் சீன்ஸ், ஃபைட் சீன்ஸ், ஸ்டண்ட் சீன்ஸ் எல்லாம் எப்படி பண்ணனும்னு தலைவன் பாலையா படத்துல இருந்து பாலிவுட் கத்துக்கணும். இந்த வீடியோல பாலையா படத்துல வந்த மாஸான ஸ்டண்ட், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள், டான்ஸ் இதையெல்லாம் பத்திதான் பார்க்கப்போறோம். பாலையாக்கிட்ட இருந்து அஜித் கத்துக்க வேண்டிய ஒரு விஷயத்தையும் சொல்றேன். வெயிட் பண்ணுங்கோ!

ஸ்டண்ட் சம்பவங்கள்!

நமக்குலாம் சினிமால ட்ரெயின் சீன்னு சொன்னதும் மணிரத்னத்தோட படங்கள்தான் நியாபகம் வரும். அவரு என்ன ட்ரெயின் எல்லாம் குத்தகைக்கு எடுத்துருக்காரா என்ன? என் படத்துலயும் மாஸா ட்ரெயின் சீன்லாம் வைப்பேன்டானு பாலையா முடிவு பண்ணி வைச்சிருப்பாரு பாருங்க. அந்த சீன்லாம் பார்த்தா ‘தலைவன் செம மாஸ்’ல அப்டினு வாயைப் பொளந்துட்டு நிக்க வேண்டியதுதான். ட்ரெயினுக்கும் பாலையாவுக்கும் அப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கு. ஒரு படத்துல ட்ரெயினுக்கு மேலா நின்னுட்டு வில்லன்கிட்ட என்னலாமோ பேசுவாரு. பஞ்சலாம் பேசி முடிச்சதும், “ஜெய் சண்டிகேசவா”னு சாமியை கும்பிட்டுட்டு தொடையை தட்டி விரலை ஒரு சுழட்டு சுழட்டி அப்படி நீட்டுவாரு பாருங்க, ட்ரெயின் அப்படியே பின்னாடி போகும். இந்தியன் ரெயில்வேஸே ஆடிப்போன ஒரு சீன்னா இதுதான். இதென்ன பிரமாதம் இன்னும் இருக்கு.

பூவெல்லாம் உன் வாசம் பசத்துல அஜித் பாட்டுப் பாடிக்கிட்டே டிரெயினுக்கு ஈக்குவலா போய்ட்டு இருப்பாரு. என்னடா ஜோக்கா எடுத்து வைச்சிருக்கானுங்க?னு பாலையா நினைச்சுருப்பாரு. அப்படியே ட்ரெயினை சேஸ் பண்ற நம்ம சீனை மக்களுக்கு போட்டுக்காமிங்கனு ஃபேன்ஸ்கிட்ட சொல்லியிருப்பாருபோல. அவரோட ஃபேன்ஸ் சீரியஸா அந்த சீனை கட் பண்ணி போட்டு வைரலாக்கிட்டாங்க. அந்த சீன்ல, கரடு முரடா இருக்குற பாதைல ட்ரெயினை சேஸ் பண்ணிட்டு போவாரு. அப்படியே ஒரு பாறை மேல பைக்கை ஏத்தி ட்ரெயினுக்கு மேல பொய்டுவாரு. மேலயே பைக்கை ஓட்டிட்டு ட்ரெயினுக்கு முன்னாடி போய் பைக்கை நிப்பாட்டி ட்ரெயின்னு அடில புகுந்து இஞ்சினுக்கு வந்து ட்ரெயினை காப்பாத்துவாரு. ட்ரெயின் ஓட்டிட்டு வர்றது, ட்ரெயினுக்கு அடில படுத்து அம்மா, குழந்தையை காப்பாத்துறதுனு ஏகப்பட்ட ட்ரெயின் சீன்ஸ்லாம் அசால்ட்டா பண்ணியிருப்பாரு.

இந்தியன் ரெயில்வேஸே ஆடிப்போற மாதிரி ட்ரெயின் வைச்சு பாலையா பல ஸ்டண்டுகளை பண்ணியிருக்கலாம். இதையெல்லாம்விட இன்னொரு சீனை பாலையாவால கிரியேட் பண்ணிற முடியுமா?னு நீங்க கேக்கலாம். பாலையாவால முடியாத விஷயம்னு ஒண்ணு இந்த உலகத்துல கிடையவே கிடையாது. ஒரு படத்துல வில்லன்கள்கூட ஃபைட் வரும். அப்போ, சீனியர் வில்லனை பாலையா ஒரு குத்து விடுவாரு. வில்லன் பறந்து போய் சேர்ல உட்காருவான். தூரமா போய்ட்டாரு வில்லன் இப்போ. பக்கத்துல அவரை வர வைக்க, தொடையை தட்டு சொடக்கு போட்டு விரலை வைச்சு வா அப்டின்னுவாரு. சேர் அப்படியே பக்கத்துல வரும். அதேமாதிரி சேரை விரலை வைட்டு போ அப்டின்னுவாரு சேர் பின்னாடி போகும். வில்லன் நைட்டு ஃபுல்லா அந்த சேர்கூட உட்கார்ந்து அவன் சொடக்கு போட்டு கூப்பிட்டாதான் வருவியா? நான் கூப்பிட்டா வர மாட்டியா?னு புலம்பிக்கிட்டு இருப்பான். அப்புறம் சேரைப் போட்டு உடைச்சு பொத்த வன்மத்தையும் அதுமேல காட்டுவான்.

கார்ல பறக்குறது, குடைல பறக்குறது, ஏர் பில்லோ கட்டிட்டு பறக்குறது ட்ரெயின்ல சாகசம் பண்றது, மலையேறி முயலைக் காப்பாத்துறது, புல்லட்டை வாயாலயே துப்பி பாமை ஆஃப் பண்றதுனு எல்லா பர்னிச்சரையும் உடைச்சாச்சு. அடுத்து பிளேன்தான். தீவிரவாதிகள் பிளேனை கடத்திட்டுப் போவாங்க. எதிர்க்க வந்து நின்னுட்டு ஷார்ட் கன் ரெண்டை எடுத்து டயர்லயே சுடுவாரு. பிளேன் அப்படியே நிலைகுலைஞ்சு போய் விழும். அந்த வி.எஃப்.எக்ஸ்லாம் அமிதாப் பச்சன் பார்க்கணும். இந்த விஷயம் எல்லாத்தையும் அஜித்லாம் கத்துக்கணும்.

ஃபயரான ஃபைட் சீன்கள்

பிரம்மாஸ்திரா படத்துல எலக்ட்ரிஃபை ஆகுற மாதிரியான சீன்லாம் வரும். இதெல்லாம் தலைவன் எப்பவே பண்ணியாச்சு தெரியுமா? ஒரு படத்துல மிலிட்டரி ஆஃபிஸரா நடிச்சிருப்பாரு. இந்தியன் ஆர்மினு பயங்கரமா டயலாக்லாம் பேசிட்டு ஃபைட் சீனுக்கு தயார் ஆகுவாரு. பின்னாடி கடல் அலையெல்லாம் பொங்கும். அவர் உருவம் அப்படியே நரசிம்மா மாதிரி மாறி தீயா இருக்கும். வாய்ல இருந்து சிவலிங்கம் எடுத்து பார்த்திருப்பீங்க. கண்ணுல இருந்து சிவலிங்கம் எடுத்து பார்த்திருக்கீங்களா? தலைவன் பண்ணுவாரு. கைல இருந்து எலக்ட்ரிஃபை மோட்லாம் ஆன் ஆகி ரௌடிகளை போட்டு பொளப்பாரு. அந்தக் கையை கீழ இறக்காமல் அப்படியே நடந்து அடுத்த ஆள அடிக்கப்போவாரு. சூலம்லாம் சுத்தி வரும். இந்திய மேப் குள்ளயெல்லாம் நடந்து வருவாரு. கத்தி குத்தி அடுத்த பக்கம் வழியா வெளிய வந்துரும். அவரு சண்டை போடுவாரு. குண்டு துளைச்சு இன்னொரு பக்கம் வழியா வெளியேபோய்ரும். அப்பவும் சண்டை போடுவாரு. அவர் சீரியஸ் மோடுல இருக்குறதுலாம் கொரளிவித்தை காட்டுற மாதிரியே ஃபீல் ஆகும்.

டான்ஸ் டான்ஸ் டான்ஸ்

ஒவ்வொரு தடவையும் இந்தியால இருக்குற பெஸ்ட் டான்ஸர்களைப் பத்தி பேசும்போது பாலையாவை மிஸ் பண்ணிடுறோம். சமீபத்துல வந்த ‘யா யா யா யா ஜெய் பாலையா’ பாட்டுல பாலையா ஆடுற டான்ஸ்லாம் தான நாம பார்த்துருப்போம். ஆனால், பழைய ரெக்கார்டுலாம் எடுத்துப்பாருங்க. பரதநாட்டியம்ல தொடங்கி எல்லாவிதமான டான்ஸ்லயும் மனுஷன் புகுந்து விளையாடிப்பாரு. ஒரு படத்துல பரதநாட்டியம் டான்ஸரா நடிச்சிருப்பாரு. அதுல அவரு போடுற ஸ்டெப்ஸ்லாம் பார்த்தா, ஆல் இன் ஆல் அழகுராஜா காஜலுக்கே டஃப் கொடுக்குற மாதிரி இருக்கும். அதைப் பார்த்து ஹீரோயினுக்கு காதல்லாம் வரும். இந்தக் கொடுமையை நான் எங்கப்போய் சொல்ல. இன்னொரு படத்துல ஒத்தைக் கால்ல லெக் ஸ்டெப் போடுவாரு. யாருமே இல்லாம பறப்பாரு, 360 டிகிரில வளையுறதுனு தலைவன் போடாத ஸ்டெப்பே இல்லை. விஜய் என்னங்க விஜய், ஹிருத்திக் ரோஷன் என்னங்க ஹிருத்திக் ரோஷன். தலைவன் போடுவான் பாருங்க ஸ்டெப் அப்படியே சிலிர்த்துப்போய் சில்லறையை விட்டு எறியலாம்.

இதையெல்லாம் பார்த்து ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் பாடம் கத்துக்கணும். குறிப்பா, பிரம்மாஸ்திரா மாதிரி படம் எடுக்குறவங்க.

ஸ்டைலிஷ் இங்கிலீஷ்

பாலையா ஃபேன்ஸ்க்கு இந்த பாயிண்ட் போனஸ். பஞ்ச பேசுவாரு, மாஸா பேசுவாரு எல்லாம் நமக்கு தெரியும். ஆனால், அவரு இன்னொன்னுலயும் ஸ்பெஷல், அது என்னனா, இங்கிலீஷ் டயலாக் பேசுறது. “தேட் மீ, திஸ் மீ, டாக்கிங் டூ மீ”னு நித்யானந்தாவுக்கே டஃப் கொடுக்குற மாதிரி இங்கிலீஷ் பேசுற இந்தியால இருக்குற ஒரே ஆளு பாலையாதான். ஒரு படத்துல “Dont Trouble the trouble. If You Trouble The Trouble. Trouble Troubles you. I am not the Trouble. I am the truth”னு டயலாக் பேசுவாரு. இன்னொரு படத்துல, “Once I Step In. History Repeat”னு பேசுவாரு. பெரும்பாலும் எல்லாப் படங்கள்லயும் ஒரு இங்கிலீஷ் டயலாக்காவது வைச்சிருவாரு. அதெல்லாம் பேச ஒரு தனி தைரியம் வேணும்.

ஆன் ஸ்கிரீன்லதான் இப்படி அட்டகாசம் பண்றாருனா, ஆஃப் ஸ்கிரீன்லயும் கண்ணாடியைத் தூக்கி வீசுறது, மொபைலை தூக்கி வீசுறது, தூங்கிட்டு இருக்குற குழந்தையை தட்டு எழுப்பி ஃபோட்டோ எடுக்குறதுனு அட்டகாசம் பண்ணுவாரு. 

Also Read – இந்தியாவின் முதல் Peoples Car – Maruti 800-ன் வரலாறு தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top