நடிகர்விசு என்றதும் நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது அவர் பேசும் வசனங்கள்தான். தான் இயக்கிய படங்களிலும் சரி நடித்த படங்களிலும் சரி இயக்கி நடித்த படங்களிலும் சரி அவர் வசனத்துக்கு என தனியான மெனக்கெடல்கள் தெரியும். நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்க்கையை, அவர்கள் வாழ்வில் இருக்கும் நகைச்சுவைகளை எளிமையான, யதார்த்தமான வசனங்களின் வழியாக பிரதிபலித்தவர் விசு. பெரும்பாலான படங்களை ஒரே பாணியில் உருவாக்கி வெற்றிகளைக் கொடுத்தவர்களில் விசுவும் ஒருவர். விசுவின் இயற்பெயர், விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். இவருடைய பிறந்த தினம் இன்று. இவருடைய படங்களில் வரும் பிரபல வசனங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். அந்த வசனங்கள் எந்த திரைப்படத்தைச் சேர்ந்தது என சரியாக கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Also Read : ஓடிபிடிச்சு விளையாடுறது இப்போ இன்டர்நேஷனல் கேம்! #WorldChaseTag
[zombify_post]