பிரபு சாலமன்

சரத்குமாருக்கு டூப்.. சுந்தர்.சி அசிஸ்டெண்ட்.. இயக்குநர் பிரபு சாலமன் கதை!

அவர் ஒரு பிரபலமான இயக்குநர்… ஒரு ப்ரொடியூசர் ஆபீஸ்ல உட்கார்ந்திருக்கார். கையில ஒரு கேமரா மட்டும் கொடுங்க, படத்தை நான் எடுத்துக் கொடுக்கிறேன்னு கேட்குறார். என்னங்க சொல்றீங்க, எப்படி முடியும், சாத்தியமானு கேட்க, குடுங்க நான் எடுத்துக் காட்டுறேன் போல்டா சொல்றார். ஓகேனு அவங்களும் சொல்ல, ஹீரோவை கூப்பிட்டு ஷூட்டிங் போயிட்டார். சென்னையில பெர்மிஷன் வாங்கக் கூட கையில காசு இல்ல.. பெர்மிஷனும் கிடைக்காது. ஆனா ஆம்னி வேனுக்குள்ள கேமராவை மவுண்ட் பண்ணிட்டு, சென்னை போர்ஷன்ல 50-க்கும் மேல ஷாட் எடுத்தார். அந்த இயக்குநர் பெயர் பிரபு சாலமன். அந்தப்படத்தோட ஹீரோ கரண். படத்துப் பெயர் கொக்கி. விமர்சன ரீதியா நல்ல வரவேற்பு கொடுக்க, கவனிக்கத்தக்க இயக்குநரா மாறுகிறார், பிரபு சாலமன். இன்னைக்கு நம்மளுக்கு நேஷனல் அவார்டு அளவுக்கு படம் எடுக்கிற இயக்குநர்னு தெரியும். ஆனா இவர் கடந்துவந்த பாதை ரொம்பவே வித்தியாசமானது.

சரத்குமார் மூணு கேரக்டர்ல நடிச்ச நம்ம அண்ணாச்சி படத்துல ஒரு சரத்குமாருக்கு டூப்பு போட்டு தன்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சார், பிரபு சாலமன். அந்த படத்தோட க்ளாப் அசிஸ்டெண்ட்டும் இவர்தான். அந்தப்படத்துல சுந்தர்.சி அசோசியேட் இயக்குநர். இந்தப்படம் முடிச்சுட்டு அடுத்ததா சுந்தர்.சி இயக்குநரா அறிமுகமான முறைமாமன் படத்துலயும் உதவி இயக்குநரா வேலை பார்த்தார். அடுத்ததா இயக்குநர் அகத்தியன்கிட்ட கோகுலத்தில் சீதை படம் உதவி இயக்குநரா வேலை பார்த்தார். அடுத்ததா நடிகர் அர்ஜூனை வைச்சு கண்ணோடு காண்பதெல்லாம் படத்தை இயக்கினார். இது மார்க்கெட் ரீதியா சுமாரா போச்சு. விக்ரமை வைச்சு கிங், கரணை வைச்சு கொக்கி, சிபிராஜை வைச்சு லீ, லாடம்னு பல படங்களை இயக்கினார். அதுல கொக்கி இவரை கவனிக்க வைச்சாலும், இவருக்கு மைல்கல்லான படம் மைனாதான்.

ஒரு நாள் ஆபீஸ்ல ஜன்னலோரமா உட்கார்ந்திருந்த விதார்த்தை ஹீரோவாவும், முதல்முதலா ரிஜக்ட் பண்ண ஹீரோயினான அமலாபாலையும் கதை நாயகர்களா வைச்சுகிட்டு, தம்பி ராமையாவை குணச்சித்திர நடிகராவும் மாத்தி சின்ன டீமை வைச்சுக்கிட்டு படத்தை ஆரம்பிச்சார். படம் வெளியீட்டுக்கு முன்னால் 10 ஷோக்களுக்கு மேல ப்ரிவ்யூ காட்டியிருப்பார். ஆனா கடைசியா ரெட்ஜெயண்ட் ரிலீஸ் பண்ண முன்வந்தாங்க. அதோட நிற்காம, ப்ரொடக்‌ஷனா ஏ.ஜி.எஸை வாங்க வைச்சு, அதை ரெட் ஜெயண்ட் ரிலீஸூம் பண்ணிக் கொடுத்துச்சு. தீபாவளிக்கு ரிலீஸான மைனா மிகப்பெரிய வெற்றி.

Also Read – வைப்னா வைப்…. செம வைப் – இதெல்லாம் வித்யாசாகர் பாடல்களா?

மைனாவுல ஜெயிலரா வர்றவருக்கும் இந்தப்படத்துக்கும் ஒரு கனெக்‌ஷன் இருக்கு.

இந்தப்படம் ஹிட்டடிச்சதுக்கு முக்கியமான காரணம், படைப்பாளியோட சுதந்திரம்தான். இதுக்கு முன்னால பண்ண படங்கள்ல அர்ஜூனுக்கு பதிலா ஃபிக்ஸ் பண்ணி வைச்சிருந்தது ரகுவரனை, விக்ரமை வைச்சி பண்ணுன கிங் படத்துக்கு விவாதிக்கப்பட்ட கதை வேற ஒரு கதை. அதையும் ஒரு சூழல்ல கட்டாயமா மாத்த வேண்டி இருந்தது. அடுத்ததா கொக்கி பட்ஜெட், லீ படம் சத்யராஜ் கேட்டதுக்காக பண்ணதுனு பல முறை பிரபு சாலமன் சமரசம் செய்ய வேண்டியிருந்தது. ஆனா மைனாவுக்கு அந்த ரிஸ்க் எடுக்கலை. மைனாவுல ஜெயிலரா வருவாரே அவர் மைனா படத்துக்கு ஒரு இணை தயாரிப்பாளர். அவரோட சேர்ந்துதான் மைனா படத்தை தயாரிச்சார், பிரபு சாலமன். இந்தப்படம் மூலமா தேசிய விருதை வாங்கினார், தம்பி ராமையா. மைனா கொடுத்த உற்சாகத்தோட அடுத்தப்படத்துக்கான வேலைகள்ல இறங்கினார். அப்போதான் ஓசூர் காட்டுப்பகுதியை ஒட்டின இடங்கள்ல யானை இறங்கினதாவும், அதை விரட்ட கும்கி யானைகள் அழைச்சதாவும் தகவல் வருது. ஐடியா நல்லா இருக்கேனு அதை பிடிச்சு அதுக்கான தேடல்ல கிடைச்ச படம்தான் கும்கி. தரமான ஒரு தமிழ் சினிமாவா கும்கி ரிலீஸ் ஆச்சு. இமான் கூட்டணியில பாடல்கள் எல்லாமே ஹிட். பிரபு சாலமன் படம்னா தரமா இருக்கும்னு நிரூபிச்ச படம்னு கூட சொல்லலாம்.

தன்னோட அசிஸ்டெண்ட் அன்பழகனை இயக்குநரா சாட்டை படத்து மூலமா அறிமுகப்படுத்துறார். அதுல சமுத்திரகனி ரோல் முதல்ல பிரபு சாலமன்தான் நடிக்கிறதா இருந்தது. ஆனா பிரபு சாலமன்தான் இதுக்கு சமுத்திர கனியும், தம்பி ராமையாவும் சரியா இருப்பங்கனு சொல்லி நடிக்க வைச்சார். அடுத்ததா கயல், தனுஷ் கூட தொடரி, ராணா கூட காடன், கோவை சரளா, அஷ்வினை வைச்சு செம்பினு படங்கள் இயக்கினார். செம்பி ஹாட்ஸ்டார்ல வந்ததுக்கு அப்புறமா நிறையபேர் கொண்டாடுனாங்க. இப்படி தன் படங்கள் மூலமா கவனிக்க வைச்சுக்கிட்டே இருக்கார், பிரபு சாலமன். காடன் படத்துக்காக இயக்குநர் பிரபு சாலமனை ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே நேரடியா அணுகி எனக்கு யானை வைச்சு படம் பண்ணிக் கொடுங்கனு கேட்குற அளவுக்கு ஃபேமஸான இயக்குநரும் கூட..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top