கொரோனா சூழலால் பலர் Long Distance ரிலேஷன்ஷிப்பையே மெடெய்ன் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அப்படி லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் வொர்க்-அவுட் ஆகணும்னா என்ன பண்ணனும்… 5 டிப்ஸ் உங்களுக்காக!
Long Distance ரிலேஷன்ஷிப்
பொதுவா ரிலேஷன்ஷிப்னாலே அதுக்கு நீங்க கமிட்டடா இருக்கணும்கிறது ரொம்ப முக்கியம். அதுவும் Long Distance ரிலேஷன்ஷிப்னா இன்னுமே நீங்க கவனமா இருக்க வேண்டியது அவசியம். இந்த ரிலேஷன்ஷிப்பில் பாட்னர்கள் இருவருமே தங்களின் பொன்னான நேரத்தை, தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்காக ஒதுக்கி, அவர்களின் உணர்வுகளுக்குக் காது கொடுக்க வேண்டும் என்கிறார்கள் ரிலேஷன்ஷிப் தெரபிஸ்ட்கள்.
Long Distance ரிலேஷன்ஷிப் – 5 டிப்ஸ்
கம்யூனிகேஷன் முக்கியம் பிகிலு!
Long Distance ரிலேஷன்ஷிப்பைப் பொறுத்தவரை நீங்கள் நினைப்பதை, கூடுமானவரை சரியாக உங்கள் பாட்னரிடம் கொண்டு சேர்த்து விடுங்கள். பூடகமாகப் பேசுவது, குறிப்பால் உணர்த்துவது போன்ற முயற்சிகள் சரியான பலனைத் தராது. எல்லா விஷயங்களையும் பொறுமையாக பாட்னர் புரிந்துகொள்ளும் வரை சொல்லுங்கள். பொறுமையும், சரியான சொல்லாடலும் ரொம்ப ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, வேலைப்பளு அல்லது வேறு வேலைகள் காரணமாக உங்களால் அதிக நேரம் வீடியோ கால் பேச முடியாத சூழல் ஏற்பட்டால், அதைத் தகுந்த காரணங்களோடு உங்கள் பாட்னரைத் திருப்திப்படுத்தும்படி சொல்லி புரியவைத்துவிடுங்கள்.
காதல் மொழி
ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்; உணர்ந்துகொள்வார்கள். உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களோடு உரையாடுகையில் அவர்களின் காதல் மொழியில் பேசுங்கள். அதென்ன காதல் மொழி என்கிறீர்களா… தனக்குப் பிடித்த பட்டப் பெயர்களில் அழைக்கும்போது சிலர் மனமுருகி விடுவார்கள். அப்படி உங்கள் இருவருக்கு மட்டுமே புரியும்படியான சில கோட்-வேர்டுகளை உருவாக்கி முடிந்தவரை அந்த டோன்லயே உரையாடுங்கள். இது உங்கள் இருவர் இடையிலான இடைவெளியை ரொம்பவே குறைத்துவிடும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். சின்ன சின்ன கிஃப்ட்கள், குவாலிட்டியான டைம், பிசிக்கல் டச், உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வார்த்தைகள், செயல்பாடு போன்றவற்றை உள்ளடக்கியதுதான் காதல் மொழி. இதில், உங்கள் பாட்னருக்கான காதல் மொழியை, சரியாகத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
நேரம்
உங்கள் பாட்னருக்காக நீங்கள் ஒதுக்கும் நேரம் ரிலேஷன்ஷிப்பை பில்ட் செய்வதில் பெரிய பங்கு வகிக்கும். அதனால, அப்படியான நேரங்களில் வேற டிஸ்ட்ராக்ஷன்ஸ் எதுவும் இல்லாம பார்த்துக்கோங்க. உங்க அன்றாடப் பணிகள் பாதிக்கப்படாத வகையில், அதேநேரம் உங்க பாட்னருக்கு முக்கியத்துவம் கொடுக்குற மாதிரி நேரத்தை ஒதுக்குங்க. உங்கள் பாட்னருக்கான நேரத்தில் அவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேசுங்க. இது அவங்களை இன்னும் ஸ்பெஷலா உணரவைக்கும். அவங்களோட வீடியோ அல்லது போன் கால்களில் இருக்கும்போது மல்டி டாஸ்கிங் எதுவும் பண்ணி ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
Rituals
உங்க பாட்னரோடு ரிச்சுவல்ஸ் அப்டினு சொல்லப்படுற சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையிலான பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க. நீங்க ஒண்ணா இருக்கும்போதும் சரி, தொலைவில் இருக்கும்போதும் சரி உங்கள் ரிலேஷன்ஷிப்பைக் கொண்டாடுற மாதிரியான சின்ன சின்னப் பழக்கங்கள் உங்க ரிலேஷன்ஷிப்பை உயிர்ப்போட வைச்சுக்க உதவும். உதாரணமா, நீங்க ஒவ்வொரு முறை நேர்ல மீட் பண்ணும்போது, பேவரைட்டான ரெஸ்டாரெண்டுக்கோ அல்லது அருகில் இருக்கும் பிரபலமான மீட்டிங் பாயிண்டுகளுக்குப் போறதையோ வழக்கமா வைச்சிருந்தீங்கன்னா, அதை மறக்காம ஃபாலோ பண்ணுங்க..
Activities
Long Distance ரிலேஷன்ஷிப்புல இது முக்கியமான பார்ட்டுனு சொல்றாங்க… தூரமா இருந்தாலும் சில விஷயங்களை நீங்க ஒண்ணாவே சேர்ந்து பண்ணிப் பாருங்க. அது இன்னும் புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். ஒரே புக்கை சேர்ந்து படிக்குறது, ஓடிடில ஒரே படத்தை சேர்ந்து பார்த்துட்டு, அதைப் பத்தி டிஸ்கஸ் பண்றது, அதே மாதிரி Foodie-யா இருந்தா ஒரே டிஷ்ஷை ரெண்டுபேருமே சமைக்கிறதுனு ஜமாய்க்கலாம். இப்படி உங்க மனசுக்குப் பிடிச்ச ஆக்டிவிட்டியை மனசுக்கு நெருக்கமானவங்களோட சேர்ந்து பண்ணும்போது அது உங்களோட ரிலேஷன்ஷிப்பை இன்னுமே வலுப்படுத்தும்…