இந்த அறிகுறிகள் இருந்தா பிரேக்கப் ஆகப்போதுனு அர்த்தம்… செக் பண்ணிக்கோங்க!

“காதல் என்ற ஒன்று அது கடவுள் போல… உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை”னு பாட்டுலாம் பாடி கொஞ்சம் எக்ஸ்ட்ராவா காதலைப் பற்றி ஃபீல் பண்ற உலகம் இது. காதல் சிலருக்கு சட்டென பார்த்ததும் வரும், சிலருக்கு பார்த்து, பழகி, பேசி அதுக்கப்புறமா வரும். எப்படி வந்தாலும் காதல் வர்றதுக்கு சில அறிகுறிகள் இருக்கும். அதேபோல, பிரேக்கப் ஆகுறதுக்கும் சில அறிகுறிகள் இருக்கும். சட்டென வரும் காதல்போல சட்டென பிரேக் அப் நிகழாது. பொதுவாக இன்றைய சூழலில் பிரேக் அப் நடக்குறது மிகவும் சாதாரணமானதுனு சொல்லி கடந்துறவும் முடியாது.

பிரேக்கப்
Breakup

பிரேக்கப் பலரது வாழ்க்கைலையும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும். காதலிக்கிற நபர் நம்மளை பிரேக்கப் பண்ணிக்க போறதுக்கு முன்னாடி நாம இல்லாத வாழ்க்கைக்கு அவங்க தயாராவாங்கனு சொல்றாங்க. எப்போ அவங்க நம்மள விட்டு முழுமையாக பிரிஞ்சு போறாங்கனு சொல்ல முடியாது. ஆனால், அந்த ரிலேஷன்ஷிப் ரொம்ப நாள் நீடிக்காதுனு அவங்களுக்கு நல்லாவே தெரியும். ரொம்பப் பொறுமையா இந்த ப்ராஸஸ் அவங்களுக்குள்ள நடக்க ஆரம்பிக்கும். அந்த ப்ராஸஸ்க்கான அறிகுறிகளைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

உற்சாகமில்லாத உரையாடல்கள்

முதலில் ரிலேஷன்ஷிப் புதியதாகவும் எக்ஸைட்டிங்காகவும் இருக்கும். அப்படியான தருணங்களில் உங்களது மொபைல் எண் உங்க பார்ட்னரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கும். `do not disturb’ மோடில் அவர்களுடைய மொபைல் இருந்தாலும் உங்கள் அழைப்புகளுக்கு மட்டும் ஆல்வேஸ் வெல்கம் போர்டு எப்போதும் இருக்கும். சாட்டிங் லிஸ்டில் உங்களைப் பின் செய்து டாப்பில் வைத்திருப்பார்கள். உங்களுக்கென தனியாக ரிங்டோன்களையும் செட் செய்திருப்பார்கள். காலநேரம் பார்க்காமல் உங்களது அழைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

பிரேக்கப்
பிரேக்கப்

பிரேக்கப் ஆகப்போகும் நாள்களுக்கு முன்பு உங்களது ரிலேஷன்ஷிப்பில் உங்களது பார்ட்னர் டயர்டாக உணர்வார். உங்களது அழைப்புகள் அடிக்கடி புறக்கணிக்கப்படும். உங்களது மிஸ்டுகால்களைப் பார்த்துவிட்டு மீண்டும் அழைக்காமல் இருப்பார். உங்களிடம் பேசும்போது குரலில் உற்சாகம் இருக்காது. பெரும்பாலும் உரையாடல்களைத் தவிர்க்கவே விரும்புவார். முக்கியமான வேலைகள் இல்லாமல் வெட்டியாகவே இருந்தாலும் உங்களுடன் நடக்கும் உரையாடல்களை முதலில் முடிக்க முயற்சிப்பார். உங்களிடம் பேச வேற எதுவும் இல்லை என கூறுவார். இதுதான் பிரேக் அப் செய்யப்போகிறார் என்பதற்கான முதல் அறிகுறி.

வெறுப்பை வெளிப்படுத்துதல்

உங்களுடைய பார்ட்னருடன் நீங்கள் பேசும்போதெல்லாம் வெறுப்பை அதிகமாக வெளிப்படுத்துவார். `பேசும்போது ஏன் குறுக்க பேசுற?, எனது விருப்பத்துக்கும் எதிரா தான் எல்லாம் செய்வியா?, நான் பேசவா? வேண்டாமா?’ போன்ற கேள்விகளை எப்போதும் கேட்டபடி இருப்பார். இதுதொடர்பாக பல மாதங்களாக ஏன் பல ஆண்டுகளாக உங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகத் தெரிவிப்பார். நீங்கள் எதைச் செய்தாலும் பேசினாலும் அவரை ட்ரிக்கர் செய்வதாகக் கோபப்படுவார். அவர்களின் எரிச்சலுக்கு முழு காரணமே நீங்கள்தான் என்று குற்றம் சாட்டுவார். அப்போது அவர் பிரேக்கப்பிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

காதலர்கள்
காதலர்கள்

வேலையில் பிஸியாக காட்டிக்கொள்வது

நிச்சயமாக எல்லோருக்கும் வேலை அதிகமாகவே இருக்கும். சில நேரங்களில் வழக்கத்துக்கும் மாறாக அதிகமான வேலைகள் வந்து பார்ட்னருடன் சரியாகப் பேச முடியாமல் போகும் நாள்கள் வரும். ஆனால், வேலைகள் அதிகமாக இருப்பதாகத் தொடர்ந்து உங்களிடம் கூறி உங்களுடன் இருக்கும் நேரத்தைத் தவிர்ப்பதற்காகத் தன்னுடைய தொழில், படிப்பு, உடலை பராமரிப்பது, பணத்தின் தேவைகளை நோக்கி செயல்படுவது போன்றவற்றில் உங்களது பார்ட்னர் ஈடுபட்டால் எஸ்கேப் ஆகத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம். வேலைகளைக் காரணம் காட்டி தொடர்ந்து நீங்கள் புறக்கணிக்கப்படுவதை பெர்சனலாக நீங்களேகூட உணரலாம்.

காதல்
காதல்

நண்பர்கள் கேங்கில் இருந்து தவிர்ப்பது

உங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்களுடன் மீட்டிங் செல்லும்போது தலைவலி போன்ற காரணங்களைக் கூறி அதனைத் தவிர்ப்பது. நண்பர்களுடன் சேர்ந்து பயணங்களுக்கு திட்டமிடும்போது உங்களை மென்ஷன்கூட செய்யாமல் இருப்பது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து உங்களைத் துண்டிப்பது. அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களின் மனதில் இருந்துகூட உங்களை மெதுவாக அழிப்பது. இவை போன்ற காரணங்களும் அவர் உங்களை விட்டு விலகிச்செல்கிறார் என்பதற்கான அறிகுறிகள்தான்.

பிரேக்கப்
பிரேக்கப்

ஆர்கியூமென்ட் செய்யாமல் இருப்பது

நீங்கள் என்ன சொன்னாலும், எதைக் கேட்டாலும்.. அதைப் பற்றி குறுகிய பதிலை சொல்லிவிட்டு எதையும் விளக்காமல் அந்த இடத்தில் இருந்து விலகிச் சென்று விடுவார். அதற்கு நீங்கள் தெரிவிக்கும் மறுப்பைக்கூட கண்டுகொள்ள மாட்டார். அதுமட்டுமில்லாமல் நீங்கள் இதனால் எவ்வாறு உணர்வீர்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் மீது அக்கறைக் கொள்ளாமல் இருப்பார். நீங்கள் சுயநலவாதி என்று உங்களது பார்ட்னரைத் திட்டினால்கூட அதற்கு எந்தவித பதிலும் கூறாமல் இருப்பது போன்றவை உங்களது பார்ட்னர் உங்களை சீக்கிரம் விட்டுவிட்டு செல்லப்போகிறார் என்பதற்கான அறிகுறிகள்தான்.

Also Read : அறிமுகம், பீக், இப்போ…. எப்படி இருக்காங்க இந்த 16 பேரும்!? #TimeTravel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top