கோவை, மிக வேகமாக வளர்ந்து வரும் ஓர் மாநகரப் பகுதி. இருப்பினும் பாரம்பர்யத்தை கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காத இடமும்கூட. ஒருபுறம் பரந்து விரிந்த நகரம், மறுபுறம் முழுமையான இயற்கை அழகு நிறைந்த இடம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, தமிழ்நாட்டின் முக்கிய ஜவுளி, தொழில்துறை, வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் உற்பத்தி மையமாகவும் தொழில்மயமான மாவட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. கோவையில் முக்கியமாக ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மோட்டார் தயாரிப்பு, மோட்டார் பம்புகள், வெட் கிரைண்டர், தங்க நகை மற்றும் ஆபரணக் கற்கள் உற்பத்தி என அனைத்துத் தொழில்களிலும் சிறந்து விளங்குகிறது. இந்தத் தொழில்தான் என கோவையை குறிப்பிட்டுச் சொல்லாமல், பல்வேறு தொழில்களின் மையமாக இந்தக் கோவை இருக்கிறது. தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையிலும் இந்த மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, இந்த தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரமாகவும் இந்த கோவை மாநகரம் உருபெற்றுள்ளது. ‘மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கோவையில் செயல்படுத்தி வருவது கோவையை வளர்ச்சிப் பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்’ என்கின்றனர், பொருளாதார நிபுணர்கள்.
கோவை பைபாஸ் பகுதிகளில் குவியும் முதலீடு!
தற்போது இம்மாவட்டத்தில் ரூ.93.66 கோடி மதிப்பீட்டில் 98.42 கி.மீ நீளத்திற்கு 335 சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.60.01 கோடி மதிப்பீட்டில் 62 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பையோமைனிங் திட்டப் பணிகள், ரூ.49 கோடியில் சங்கனூர் பள்ளம் 11.49 கிமீ நீளத்திற்கு மேம்பாட்டுப் பணிகள், ரூ.16.41 கோடி மதிப்பீட்டில் 63 எண்ணிக்கையிலான நகர் நல மையங்கள் மற்றும் 3 எண்ணிக்கையிலான மருத்துவ ஆய்வுக் கூடங்கள் கட்டும் பணிகள் என நடைபெற்று வருகின்றன. அதேபோல் கோவை மெட்ரோ, கோவை – கரூர் பசுமைவழிச் சாலை + நார்தர்ன் ரிங் ரோடு, கோவை – சத்தியமங்கலம் 4 வழிச்சாலை, எல்&டி பைபாஸ் விரிவாக்கம், கோவை ஜங்ஷன் மறுசீரமைப்பு, புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்தால், கோவை மிகப்பெரிய ஸ்மார்ட் சிட்டியாக இருக்கும். கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நகரம் விரிவடைய ஆரம்பித்திருக்கிறது. அதனால் கோவை பைபாஸ் ஒட்டிய நகர எல்லைப் பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. அதனால் மக்களும் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலும் நிலங்களை வாங்கிப்போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே அவர்களுக்கான சரியான முதலீடு என்று பொருளாதார நிபுணர்களும் ஆலோசனை சொல்கிறார்கள்.
ஹெலிபேட் உடன் வீட்டு மனைகள்!
விரிவடைந்து வரும் கோவை மாநகரின் மக்களைக் கருத்தில்கொண்டு அதிநவீன வசதிகள் கொண்ட வீட்டுமனைகளை G Square City 2.O என்ற திட்டத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது. கோவையின் முதல் Integrated ஸ்மார்ட் மெகா சிட்டி G Square City. இனிமே இதுதான் தென்னிந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துகே ஃப்யூச்சர்னு கூட சொல்லலாம். கோயம்புத்தூர் எல்&டி பைபாஸ் ரோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. ஹெலிபேட் முதல் க்ளப் ஹவுஸ் வரை 150-க்கும் மேல் உலகத் தரம் கொண்ட வசதிகள், 24×7 automatic inteligence தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு, 5 வருட இலவச பராமரிப்பு, அகலமான உள் சாலைகள் என எல்லாமே உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிபேட் அமைத்து வீட்டுமனை விற்பனை செய்யும் ஒரே நிறுவனம், ஜி ஸ்கொயர்தான்.
மொத்தமாக 110 ஏக்கரில் அமைக்கப்பட்டு, 1902 வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. விலை ரூபாய் 23.25 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. வெள்ளலூர் பஸ் ஸ்டாண்டு, கோவை ஏர்ப்போர்ட், defence industrial park, லக்ஷ்மி நாராயணன் விசாலாட்சி கல்லூரி, சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி, அவதார் பப்ளிக் பள்ளி, பிசினஸ் ஸ்கூல் ஆப் கோயம்புத்தூர், ஆர்.வி.எஸ் இஞ்சினியரிங் கல்லூரி என சுற்றிலும் பள்ளிகள் நிறைந்த முக்கியமான இடம் G Square City 2.O. கோவை ஏர்ப்போர்ட்டிலிருந்து 30 நிமிட பயணத்தில் இடத்தை அடையலாம். இயற்கையான கார்டன், வெளிப்புற உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல உலகத் தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன. குறைந்த விலையில் ஆடம்பரமான வாழ்வுக்கு G Square City 2.O வீட்டு மனைகளை வாங்கி இன்றே முதலீடு செய்யுங்கள்.
ரியல் எஸ்டேட் முதலீடுகள் இப்போது கோவை பைபாஸ் நோக்கியே இருப்பதால்
இந்தப் பகுதியில் வீட்டு மனை வாங்குவது எதிர்காலத்துக்கான நல்ல முதலீடாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்புகொள்கிறோம்.
[ninja_form id=19]