கராத்தே ராஜா

“இளையதளபதியின் நண்பர், உலகநாயகனால் பெயர் சூட்டப்பட்டவர்…” கராத்தே ராஜா

தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கலைஞர்களைக் கொண்டாடும் விதமாக ஒரு புதிய முன்னெடுப்பை Tamilnadu Now மேற்கொண்டது. முதல் முறையாக குணச்சித்திரக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவான Golden carpets விழா சென்னை மியூசிக் அகாடெமியில் வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் காமெடி நடிகரான கராத்தே ராஜா விருது பெற்றார். அந்த நிகழ்வின் சுவாரஸ்யங்களைப் பார்ப்போம்.

கராத்தே ராஜா
கராத்தே ராஜா

பள்ளிகளில் கராத்தே மாஸ்டராக இருந்தவர், சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமானவர். நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் கலக்குவார், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளில் அவர் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி அசத்தும் கராத்தே ராஜாவுக்கு இது தமிழ் சினிமாவில் வெள்ளி விழா ஆண்டு. அவருக்கு நடிகர் சுவாமிநாதன் விருது வழங்கி கௌரவித்தார்.

Also Read – கூட்டத்தில் ஒருத்தன், வில்ல முக நண்பன்.. சம்பத் ராம்!

சின்ன வயசுல ஊர் சண்டை ஒண்ணுல ரெண்டு பசங்க ராஜாவை சுத்தி வளச்சு அடிச்சிருக்காங்க, அப்போ எப்படியோ சமாளிச்சு தப்பிச்சு வந்திருக்கார். அதனாலயே கராத்தே கத்துகிட்டவர், பின்னாடி பள்ளிகளில் கராத்தே மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார். சினிமாவுக்கு வரும் போதே சிக்ஸ் பேக் உடன்தான் அறிமுகமாகி இருக்கிறார்.

நேருக்கு நேர் படம் மூலமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவருக்கு, விருமாண்டி படத்தில், நடிக்க அழைப்பு வந்திருக்கிறது, அப்போது உலக நாயகன் கமலஹாசன் “உன் பேரு ராஜாதானே, கராத்தே மாஸ்டர் தானே, நீ உன் பேரை கராத்தே ராஜான்னு வச்சிக்கோ” என சொல்லி இருக்கிறார். அதிலிருந்து கராத்தே ராஜாவாகவே வலம்வந்துகொண்டு இருக்கிறார்.

கராத்தே ராஜா
கராத்தே ராஜா

இளையதளபதி விஜய் உடனான தன்னுடைய நட்பு பற்றியும், கில்லி, போக்கிரி படங்களில் விஜயுடன் நடித்த அனுபவங்கள் பற்றியும் மேடையில் பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் கராத்தே ராஜா.

கோல்டன் கார்ப்பெட் விருது விழாவின் பல சுவாரஸ்ய தருணங்களையும், நெகிழ்ச்சியான விஷயங்களையும், அட இவருக்கு இதுதான் முதல் விருதா என ஆச்சர்யப்படுத்திய பல விஷயங்களையும் Tamilnadu Now Youtube Channel-ல் முழுமையாகப் பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top