சிலிண்டர்

சிலிண்டர் மானியம் வரவில்லையா – இதைச் செய்தால் உடனே உங்கள் அக்கவுண்டுக்கு வரும்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் உங்களுக்கு வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

சிலிண்டர் மானியம்

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை முதலில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வந்தது. ஆனால், அந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கே நேரடியாகத் தற்போது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் மானியத்தில் இருந்து வெளியேறவும் வாடிக்கையாளர்களுக்கு அரசால் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதேநேரம், உங்களுக்கு சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா, அல்லது சிலிண்டர் மானியத்துக்கு நீங்கள் தகுதியானவரா என்பது தெரியவில்லையா… இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

LPG
LPG
  1. www.mylpg.in – என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.
  2. இணையதளத்துக்குள் சென்றதும் வலதுபுறத்தில் பாரத் கியாஸ், ஹெச்.பி மற்றும் இன்டேன் நிறுவனங்கள் கியாஸ் சிலிண்டர்களின் புகைப்படங்களைக் காணலாம்.
  3. நீங்கள் பயன்படுத்தும் கியாஸ் நிறுவனத்தின் சிலிண்டர் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.
  4. இப்போது திறக்கும் புதிய விண்டோவில் உங்களுக்கு கியாஸ் இணைப்புக் கொடுத்திருக்கும் நிறுவனம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
  5. அந்தப் பக்கத்தின் வலது மூலையில் புதிய பயனாளராக உள்நுழையவும், பதிவு செய்யப்பட்டவராக இருந்தால் அந்தத் தகவல்கள் மூலம் உள்நுழையவும் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்யவும்.
  6. உங்கள் ஐ.டி உருவாக்கப்பட்டிருந்தால், அந்தத் தகவல்கள் மூலம் உள்நுழையவும்.
  7. உங்களுக்கான தனிப்பட்ட அடையாளம் (ID) ஏற்கனவே இடம்பெறவில்லை எனில், புதிய பயனாளர் என்பதைத் தேர்வு செய்யவும். அதன் மூலம் உள்நுழையவும்.
  8. அதன்பிறகு திறக்கும் புதிய விண்டோவில் சிலிண்டர் புக்கிங் ஹிஸ்டரி என்ற ஆப்ஷன் வலது மூலையில் இடம்பெற்றிருக்கும். அதில் கிளிக் செய்யவும்.
  9. இதன்மூலம், உங்களுக்கு மானியம் கிடைக்கிறதா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
  10. உங்களுக்கு மானியம் கிடைக்கவில்லை என்றால், 18002333555 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

பெரும்பாலானோருக்கு மானியம் கிடைக்காமல் இருக்க முக்கியக் காரணம் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பதே. மற்றொரு முக்கியமான காரணம், அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் அல்லது அதற்குமேல் இருப்பது. உங்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்குக் குறைவாக இருந்தும், மொத்த வருமானம் அந்தத் தொகைக்கு மேல் இருந்தாலும் சிலிண்டர் மானியம் கிடைக்காது.

Also Read – இன்டர்நெட் இல்லாமலேயே UPI-யில் பணம் செலுத்தலாம் – ஈஸியான 6 ஸ்டெப்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top