பொன்னியின் செல்வன்- 2 டிரெய்லர் ரிலீஸாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஃபர்ஸ்ட் பார்டுக்கு அப்புறம் இந்த பார்ட்ல என்ன நடக்கும்.. நாவல் சொல்ற கதை என்ன… டிரெய்லர்ல வர்ற சீன்ஸ் பிரேக் அப் என்ன.. செகண்ட் பார்ட்டோட ஓபனிங், இன்டர்வெல் மற்றும் கிளைமேக்ஸ்லாம் என்னவா இருக்க வாய்ப்பிருக்குங்குறதைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப் போறோம்.
ஓபனிங் சீன்
முதல் பாகத்தோட கிளைமெக்ஸ்ல கடல்ல விழுற ஜெயம் ரவியையும் கார்த்தியையும் ஊமை ராணியான ஐஸ்வர்யா ராய் காப்பாத்துற மாதிரி முடிச்சிருப்பாங்க. அந்த இடத்துல இருந்துதான் செகண்ட் பார்ட்டோட கதை தொடங்கும். டிரெய்லருமே அதுல இருந்துதான் தொடங்குறதை நாம பார்க்க முடியும். நாவலைப் பொறுத்தவரைக்கும் கதையா பார்த்தா, படத்தோட முதல் பார்ட்ல சொல்லிருக்க கதையெல்லாமே பின்னாடி வர்ற முக்கியமான திருப்பங்களுக்கான முன்னோட்டம்தான். நாகப்பட்டினம் புத்த விகாரைல ட்ரீட்மெண்ட்ல இருக்க ஜெயம்ரவியை குந்தவையான த்ரிஷா நேரடியாகப் போய் பார்ப்பாங்க. இலங்கைல தான் நந்தினியைப் பார்த்ததா அவர் த்ரிஷாகிட்ட சொல்ற சீன் அங்கதான் நடக்கும். அதேமாதிரி, கடல்ல விழுந்து காப்பாத்தப்படுற ஜெயம்ரவி புத்த விகாரத்துக்குக் கொண்டு செல்லப்படுற சீன்தான் அந்த டாப் ஆங்கிள்ல படகுல போறமாதிரி காட்டப்படுற சீன்.
அச்சு அசல் நந்தினி போலவே இருக்க ஊமை ராணி யாரு… அவங்களோட பிளாஷ்பேக் என்னனு கொஞ்சம் கொஞ்சமா ட்விஸ்ட்களோட கதை விரியும். இன்னோரு பக்கம் ஜெயம் ரவி (அருண்மொழி வர்மர்) இறந்துட்டதா ஒரு தகவல் தீபோல பரவும், இதனால பட்டத்துக்கு உரியவர் மதுராந்தகத் தேவர்தான்னு ஒரு கோஷ்டி அவருக்கு முடி சூட்டும். சிவனடியார்கள் புடைசூழ தன்னோட தாயான செம்பியன் மாதேவிகிட்ட போய் அவர் அரசாள்றதுக்கு உரிமை கோருவார். ஒரு கட்டத்துல மதுராந்தகத் தேவர் யாருங்குற டிவிஸ்டும் செம்பியன் மாதேவியோட உண்மையான பையன் யாருங்குற முடிச்சும் அவிழ்ற அந்த இடம் அவ்வளவு அழகா கட்டமைக்கப்பட்டிருக்கும். அதேமாதிரி நாவல்ல ஊமை ராணி பத்தின ஃபிளாஷ்பேக்கை சுந்தரச் சோழரான பிரகாஷ் ராஜே தன்னோட மகளான குந்தவை (த்ரிஷா) கிட்ட சொல்ற மாதிரி இருக்கும். ஆனா, டிரெய்லர்ல த்ரிஷாவே பிரகாஷ் ராஜ்கிட்ட அதைப்பத்தி கேக்குற மாதிரி சீன்ஸ் இருக்கும்.
இன்டர்வெல்
கடம்பூர் மாளிகைக்குப் போற ஆதித்த கரிகாலனை வந்தியத் தேவன் தடுக்க முடியாமல் போகவே, அவர் கூடவே வந்தியத்தேவனும் அங்க போவார். தான் கொடுத்த வேலையை சரியாச் செஞ்சுட்டதா ஆதித்த கரிகாலனான விக்ரம் வந்தியத்தேவனான கார்த்தியைப் பாராட்டுற சீன் அங்கதான் நடக்கும். நாவல்ல கதையையே வேற மாதிரி திருப்புற மிகப்பெரிய ட்விஸ்டுனா ஆதித்த கரிகாலன் கொலைதான். இது பார்ட் டூவோட இண்டர்வெல்லாவோ அல்லது ப்ரீ கிளைமேக்ஸாவே வர்றதுக்கு நிறைய சான்ஸஸ் இருக்கு. ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான பழி வந்தியத்தேவன் மேல விழும். அதனால அவரை அடிச்சு இழுத்துட்டுப் போவாங்க. இதை டிரெய்லர்லயும் ஒரு இடத்துல காட்டியிருப்பாங்க. அதேமாதிரி கொள்ளிட நதியை மையமா வைச்சு சோழ அரசை ரெண்டா பிரிச்சு மதுராந்தகருக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் கொடுக்குறதுதான் நியாயம்னு பெரிய பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலன்கிட்ட சொல்வார். ஆனால், அதுக்கு ஆதித்த கரிகாலனான விக்ரம் ரொம்பவே கோபமா ரியாக்ஷன் காட்டுவார். இன்னொரு பக்கம் பாண்டிய ஆபத்துதவிகளின் தலைவனான ரவிதாஸன் கேரக்டர்ல நடிச்சிருக்க கிஷோர், ஆதித்த கரிகாலனான விக்ரமைக் கொல்ல கங்கணம் கட்டிட்டுத் திரியுறார். பாண்டிய வம்சாவளில வந்த சின்னப்பையன் கிட்ட சோழ குலத்தையே வேரறுப்போம்னு நந்தினியான ஐஸ்வர்யா ராய் சொல்ற சீனும் டிரெய்லர்ல இருக்கு.
Also Read – இதெல்லாம் அவார்டு படம்தான்… ஆனா ஒவ்வொண்ணும் தரமான சம்பவம்!
கிளைமேக்ஸ்
டிரெய்லரோட கடைசில வர்ற மாதிரி ஆதித்த கரிகாலன் விக்ரமும் நந்தினி ஐஸ்வர்யா ராயும் சந்திக்குற சீனா இருக்குமோனு நாம எல்லாம் யோசிச்சிருக்கலாம். ஆனா, டிரெய்லர் லாஞ்ச்சுக்கு வந்த மதுராந்தகத் தேவரான ரஹ்மான் கிளைமேக்ஸ் என்னவா இருக்கும்னு சின்ன ஹிண்ட் கொடுத்துட்டுப் போயிருக்கார். அவர் என்ன சொல்றாருன்னா, படத்துல எனக்கு ரொம்பவே பிடிச்ச சீன்னா அது கிளைமேக்ஸ்தான். அதுலதான் படத்துல நடிச்ச எல்லா நடிகர்களும் இருப்போம்னு சொல்லிருந்தார். அவர் சொல்றபடி பார்த்தா நாவலோட சுபம் சீன்தான் இங்கயும் கிளைமேக்ஸா இருக்க அதிக வாய்ப்பு இருக்கு.
நாற்பது ஆண்டுகளுக்கு மேல எத்தனையோ ஆளுமைகள் எடுக்க முயன்ற பொன்னியின் செல்வன் நாவலை படமா எடுத்த ஒரு காரணத்துக்காகவே மணிரத்னம் அண்ட் கோவை நாம நிச்சயம் பாராட்டலாம். டிரெய்லர்ல உங்களுக்குப் பிடிச்ச சீன்னா எதைச் சொல்வீங்கனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.