விக்ரம்ல பட்ட பாடு போதும்… ஸ்பாய்லர்ஸ்ல இருந்து எப்படி தப்பிக்கலாம்?!

விக்ரம் படத்துல அந்தக் குழந்தை யார் தெரியுமா? சூர்யா எப்போ வருவாரு தெரியுமா? சூர்யா பேரு என்ன தெரியுமா? இண்டர்வல் ட்விஸ்ட் இருக்கே. செம! சரி, எல்லாத்தையும் விடுங்க. விக்ரம் படத்துல யாரு விக்ரம்? கிளைமேக்ஸ் என்ன ஆகும்னு தெரியுமா? இப்படி செய்திகள் வாசிப்பது ஆல் இந்தியா ரேடியோ மாதிரி மொத்த படத்தையும் டீட்டெயிலா ஸ்டேட்டஸ் போட்டு மொத்த ஸ்பாயிலரையும் படத்தோட ஒரு ஷோ முடியுறதுக்குள்ள அனௌன்ஸ் பண்ணிட்டாங்க. இந்தப் படத்துக்கு மட்டுமில்ல நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார்னு எதுல என்னப் படம் வந்தாலும் உடனே அதுல இருக்குற ட்விஸ்டை எடுத்துப்போட்டு படம் பார்க்குற சுவாரஸ்யத்தையே குறைச்சிவிட்ருவாங்க. இந்த ஸ்பாய்லர்ஸ் சொல்ற கிரிஞ்ச் எலிமெண்ட்ஸ்கிட்ட இருந்துலாம் எப்படி தப்பிக்கலாம்? அதுக்கான சிம்பிளான வழிகளைத்தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

ஃபர்ஸ்ட் ஆன்லைன், சோஷியல் மீடியாலாம் யூஸ் பண்ணியும் ஸ்பாய்லர்ஸ்ல இருந்து எப்படி தப்பிக்கலாம்னு பார்ப்போம்.

விக்ரம்
விக்ரம்

ஸ்பாய்லர்ஸோட தாய் வீடு ட்விட்டர்னுதான் சொல்லுவாங்க. ஒரு படம் நல்லாருக்கா, இல்லையா, ட்விஸ்ட் என்னனு எல்லாத்தையும் இந்த ரிவியூவர்ஸ்னு சொல்லுறவங்க ட்வீட்டா போட்டு அடுக்கி தள்ளிருவாங்க. குறிப்பா, தன்னை ஒரு பெஸ்ட் ரிவியூவர் என்று நம்பிக்கொண்டிருக்கும் உங்க ஃப்ரெண்டு. இப்படி ட்விட்டர்ல சொல்ற ஸ்பாய்லர்ஸ்ல இருந்து தப்பிக்கணும்னா, குறிப்பிட்ட அந்தப் படம் சம்பந்தமா டிரெண்டாகுற படம் பேரு, நடிகர் பேரு, டைரக்டர்டர் பேருனு எல்லா வார்த்தைகளை பிரைவசி – செட்டிங்க்ஸ்ல போய் மியூட் பண்ணிடுங்க. அப்போ, அந்தப் படம் தொடர்பான எந்த விஷயமும் உங்களோட கவனத்துக்கு வராது. நீங்க ஈஸியா எஸ்கேப் ஆயிடலாம். எவ்வளவு நேரம் அந்த வார்த்தை மியூட்ல இருக்கணும்னு டைம் லிமிட்கூட செட் பண்ணிக்கலாம். படத்துக்கு ஃப்ரெஷ்ஷா போகலாம். ட்விட்டரை அதிகம் யூஸ் பண்றீங்கனா உங்களுக்கு இந்த ஐடியா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்.

ஃபேஸ்புக்ல நீங்க அதிகமா இருக்கீங்க. அதுல ஸ்பாய்லர்ஸ் வர்றதுல இருந்தும் நீங்க தப்பிக்கலாம். அதுக்கு சோஷியல் ஃபிக்ஸர் ஃபார் ஃபேஸ்புக்னு ஒண்ணு இருக்கு. அதை நீங்க யூஸ் பண்ற குரோம், ஒபேரா இதுலலாம் ஆட் பண்ணிட்டு, அந்தப் படம் தொடர்பான வார்த்தைகளை மியூட் பண்ணிட்டீங்கனா அந்தப் படம் தொடர்பா எதுவுமே உங்க நியூஸ் ஃபீடுல வரும். ஸ்பாய்லர்ஸ் புரொடக்‌ஷன் 2.0, அன்ஸ்பாய்லர் போன்றவற்றையும் நீங்க ஆட் பண்ணி ஸ்பாய்லர்ஸ்ல இருந்து தப்பிக்கலாம். அப்புறம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பக்கம் நீங்க படம் பார்க்குற வரைக்கும் போகாமல் இருக்குறது ரொம்பவே நல்லது. ஏன்னா, இன்னைக்கு முக்கால்வாசி ஸ்பாய்லர்ஸ் இதுவழியாதான் நம்மக்கிட்ட வருது.

படம் வந்து கொஞ்சம் நேரத்துல யூ டியூப்ல டீகோடிங்னு நிறைய விஷயங்களை டைரக்டரே ஆச்சரியப்படுற அளவுக்கு போடுவாங்க. யூடியூப்ல இந்த மாதிரியான கிரிஞ்ச் வீடியோக்கள்ல இருந்து நீங்க தப்பிக்கணும்னா வீடியோ பிளாக்கரை குரோம்ல ஆட் பண்ணிக்கோங்க. அப்புறம் அந்தப் படம் தொடர்பான வார்த்தைகளை மியூட் பண்ணிடுங்க. அவ்வளவுதான். ஸ்பாய்லர்ஸை அவாய்ட் பண்ணிடலாம். யூடியூப் கமெண்ட்ஸ்ல வந்து ஸ்பாய்லர்ஸ் சொல்லுவாங்க. அவங்கக்கிட்ட இருந்து தப்பிக்க ஷட்அப் அப்டின்றதை குரோம்ல ஆட் பண்ணிக்கோங்க. அப்படியே இன்ஸ்டாகிராம் பக்கம் வந்தீங்கனா வேற வழியே இல்லை. ஸ்பாய்லர்ஸ் சொல்ற அக்கௌண்ட்களை அன்ஃபாலோ பண்ணிடுங்க. ரொம்பவே நல்லது.

ஆன்லைன் வந்தா கண்டிப்பா ஸ்பாய்லர்ஸ் தெரிஞ்சுரும். மேல சொன்னதெல்லாம் ட்ரைப் பண்ணியும் ஸ்பாய்லர்ஸ் சொல்றாங்கனா வேற வழியே இல்லை. நெட் ஆஃப் பண்ணி வைச்சிடுங்க.

சோஷியல் மீடியா பக்கம் போனாதான ஸ்பாய்லர்ஸ் சொல்லுவீங்க, நான் அந்தப் பக்கமே போக மாட்டேன். சும்மா நெட்ல வந்து படம் சம்பந்தமா சர்ச் பண்றேன்னு போனீங்கனாலும் மாட்டிப்பீங்க. சர்ச் பார்க்கு கீழ நோட்டிஃபிகேஷன்லாம் வந்து ஸ்பாய்லர்ஸ சொல்லிடும். அந்தப் படத்தோட டைரக்டர், நடிகர், நடிகை, மியூசிக் டைரக்டர்னு யாரைப் பத்தியும் கூகுள் பண்ணாதீங்க. அதுதான் நல்லது. படம் பார்த்துட்டு வந்து நம்மக்கிட்ட உளருவாங்கனு தெரியும்ல, அவங்கக்கிட்ட இருந்தும் கொஞ்சம் தள்ளியே இருங்க. முடிஞ்சா படம் பார்த்துட்டு வெளிய வர்றது வரைக்கும் அவங்கக்கிட்ட பேசாதீங்க.

விக்ரம்
விக்ரம்

மொத்தத்துல என்ன சொல்ல வர்றேன்னா… படம் பார்க்குறது வரைக்கும் ஐம்புலன்களையும் அடக்கிட்டு கன்ட்ரோலா இருங்க. இல்லைனா ஸ்பாய்லர்ஸ் சொல்லியே காதுல இருந்து ரத்தம் வர வைச்சிருவாங்க. முன்னாடிலாம் படம் பார்க்க ஜாலியா போய்ட்டு ஜாலியா வரலாம். ஆனால், இப்போலாம்… ஹ்ம்ம்! நாயகன் கமல் ஸ்டைல்ல சொல்லணும்னா, “ஒரு படம் பார்க்கணும்னா திண்டாடனும். 4 சீன் ட்விஸ்ட் தெரியாம பார்க்கணும்னா சாவணும். படம் ரிலீஸ் ஆகி தியேட்டர்ல போய் பார்க்குறதுக்குள்ள ரத்த அடி படணும். ஒருநாளாவது ராத்தி வரைக்கும் ஸ்பாய்லர்ஸ் தெரியாமல் இருப்போம்னு நம்பிக்கை உண்டா? இல்லை. அதுனாலதான் எங்களால ஸ்பாய்லர்ஸ் சொல்றவங்க மேல கோவம் வருது. படத்தை உடனே பார்த்தாதான் ஸ்பாய்லர்ஸ்ல இருந்து தப்பிக்க முடியும். நான் மேல சொன்னதுலாம் பண்ணாதான் படத்தை ட்விஸ்டோட பார்க்க முடியும். ம்ம்ம்!”.

சரி… ஸ்பாய்லர்ஸ்ல இருந்து வேற என்ன ட்ரிக்ஸ்லாம் யூஸ் பண்ணி தப்பிக்கலாம்னு நீங்க நினைக்கிறீங்கன்றதைக் கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – ’சக்கு சக்கு வத்திக்குச்சி’க்கு மட்டுமில்ல… 90’ஸ் கிட்ஸின் சோக கீதத்துக்கும் இவர்தான் மியூசிக் டைரக்டர்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top