இ - பான் கார்டு

இ-பான் கார்டு வேண்டுமா… 10 நிமிடத்தில் பெறுவது எப்படி?

பான் கார்டு தொலைந்துவிட்டால், புதிய கார்டுக்கு அப்ளை செய்து வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. வருமான வரித்துறையின் இணையதளம் மூலம் 10 நிமிடங்களில் எளிதாக இ-பான் கார்டு பெறுவது எப்படி?

அரசு துறையில் ஆவணங்களைப் பதிவு செய்வது, பல்வேறு விதமான கட்டணங்களைச் செலுத்துவது போன்றவை டிஜிட்டலின் வளர்ச்சியால் மிகவும் எளிதாகிவிட்டன. புதிய பான் கார்டு தேவைப்படுவோர் வருமான வரித்துறையின் இணையதளமான incometax.gov.in-ல் பதிவு செய்து, ஆன்லைனிலேயே வெரிஃபிகேஷனையும் முடித்து 10 நிமிடங்களில் இ-பான் கார்டைப் பெற முடியும்.

இ-பான் கார்டு என்றால் என்ன?

இ-பான் கார்டு என்பது டிஜிட்டல் கையெழுத்துடன் டிஜிட்டல் வடிவில் அளிக்கப்படும் பான் கார்டாகும். ஆதார் கார்டு அடிப்படையில் அளிக்கப்படும் இந்த சேவையைப் பெற உங்கள் ஆதாரில் இருக்கும் தகவல்கள் அப்டேட்டானதாக இருக்க வேண்டும். பி.டி.எஃப் வடிவில் அளிக்கப்படும் இதை ஆவணமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இ-பான் கார்டு
இ-பான் கார்டு

இ-பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லுங்கள்.
  2. இ-பான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆப்ஷனை நீங்கள் ஹோம் பேஜில் பார்க்கலாம்.
  3. அந்த ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்தவுடன், புதிதாக ஒரு ஹைப்பர் லிங்க் தோன்றும். அதில், `Get New e-PAN’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  4. அதன்பிறகு ஓப்பனாகும் புதிய பேஜில் உங்கள் ஆதார் தகவல்கள், மொபைல் நம்பர், பிறந்த தேதி போன்ற தேவையான தகவல்களை நிரப்புங்கள். அது முடிந்ததும் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைக் கொடுத்து சரிபார்ப்பை முடித்துவிடுங்கள்.

கீழே இருக்கும் வழிமுறைகள் மூலம் இ-பான் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். அதன் ஸ்டேட்டஸைத் தெரிந்துகொண்டு, டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

  • வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று இ-பான் கார்டு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதில், `Check Status/ Download PAN’ என்ற ஆப்ஷனை கிளிக்கவும்.
  • புதிதாக ஓபனாகும் பேஜில் ஆதார் எண், மொபைல் நம்பரைக் கொடுத்து ஓடிபியை சரிபார்க்கவும். அதன்பின்னர், உங்கள் பான் கார்டின் ஸ்டேட்டஸைத் தெரிந்துகொள்ளலாம்.
  • ஒருவேளை உங்கள் இ-பான் கார்டு தயாராகியிருந்தால், உடனே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Also Read – விராட் கோலி ரசிகர்களே… உங்களுக்கான சின்ன டெஸ்ட்! #13YearsOfViratKohli

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top