Income Tax

வரி சேமிப்புக்குத் திட்டமிடல் ஏன் அவசியம்… 4 ஈஸி இன்வெஸ்ட்மெண்ட் பிளான்கள்!

வரி சேமிப்புக்குக் கடைசி நேரத்தில் திட்டமிடுதல் பல சிக்கல்களை உங்களுக்கு உருவாக்கலாம். வரி சேமிப்புக்குத் திட்டமிட எது சரியான நேரம்… 4 ஈஸி இன்வெஸ்ட்மெண்ட் பிளான்களையும் பார்க்கலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் பலர் முறையான திட்டமிடல் மற்றும் அரசு வழங்கியிருக்கும் சலுகைகள் மூலம் வரி சேமிப்பு செய்ய முடியும். மாத ஊதியம் பெறுபவர்கள் வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரியை சேமிக்க முடியும். பி.பி.எஃப், தேசிய சேமிப்பு சான்றிதழ், பென்சன் திட்டம், இ.எல்.எல்.எஸ் திட்டங்கள், வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டங்கள் ஆகியவை மூலம் வரியை சேமிக்க முடியும்.

நிதியாண்டின் தொடக்கத்திலேயே வரி சேமிப்புக்குத் திட்டமிடுவது கடைசி நேர பரபரப்புகளையும் சிக்கல்களையும் தவிர்க்க உதவும். வரி சேமிப்பு முதலீடுகளைத் தள்ளிப்போடாமல், ஆரம்பகாலத்திலேயே தொடங்குவதன் மூலம் வரி சேமிப்பின் முழு பலனையும் பெற முடியும். கடைசி நேரத்தில் பெரிய தொகையைத் திரட்டுவது பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், நிதியாண்டின் தொடக்கத்திலேயே திட்டமிட்டால் மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து வரி சேமிப்பின் மொத்த பலனையும் அறுவடை செய்ய முடியும்.

4 ஈஸி இன்வெஸ்ட்மெண்ட் பிளான்கள்!

ஹெல்த் இன்சூரன்ஸ்

குடும்பத்தின் அவசர மருத்துவ செலவுகளை சமாளிக்க உங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உதவும். உங்களுக்கு மட்டுமல்லாது, மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என உங்களைச் சார்ந்திருப்போருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டுக்கொள்வது அவசியமானது. அவசர மருத்துவ செலவுகளைச் சமாளிக்கக் கைகொடுப்பதோடு, வருமான வரிச் சட்டம் 80 டி பிரிவின் கீழ் வரி சேமிப்பும் செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வரிவிலக்குப் பெறலாம்.

Investment

டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ்

குடும்பத்தின் நிதி தேவைகளைச் சமாளிக்க டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் உதவும். டெர்ம் லைஃப் இன்சூரன்ஸுக்கு ஆண்டுதோறும் பிரீமியமாக நீங்கள் செலுத்தும் தொகையை வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி-யின் சேமிக்க முடியும். அதிகபட்ச வரி சேமிப்பு ரூ.1.5 லட்சமாகும். 2012ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் படி டெர்ம் இன்சூரன்ஸுக்கான தொகையில் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். டெர்ம் இன்சூரன்ஸ் செய்திருக்கும் நபர் உயிரிழக்கும் நிலையில், அவரது குடும்பத்தினருக்குக் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். எந்தவிதமான வரிப் பிடித்தமும் இல்லாமல் அந்தத் தொகை முழுமையாகக் குடும்பத்தினருக்குக் கிடைக்கும்.

நிரந்தர வைப்புத் தொகை – சேமிப்புத் திட்டங்கள்

வங்கிகளில் அளிக்கப்படும் நிரந்தர வைப்புத் தொகை எனப்படும் எஃப்.டி மூலம் முதலீடு செய்து வருமான வரி சட்டம் 80 சி-யின் கீழ் வரியை சேமிக்க முடியும். இதேபிரிவின் கீழ் பி.பி.எஃப், என்.எஸ்.சி போன்ற சேமிப்புத் திட்டங்கள் மூலமும் வரி விலக்குப் பெறலாம். உங்கள் வருமானத்துக்கேற்ற சரியான சேமிப்புத் திட்டத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது நல்லது.

Share Market

SIP

பங்குச் சந்தைகளில் ஒரே நேரத்தில் பெரிய அளவு முதலீடு செய்யாமல் சிறுக சிறுக உரிய இடைவெளியில் முதலீடு செய்வதை சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் அல்லது எஸ்.ஐ.பி என்பார்கள். இ.எல்.எல்.எஸ் கேட்டகிரியின் கீழ் எஸ்.ஐ.பி வாயிலாக நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்கையில், அதன் மூலம் வரிச்சலுகை பெற முடியும். அதேபோல், எஸ்.பி.ஐ வாயிலாக ப்ளூ சிப் எனப்படும் பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தால், சந்தையின் வீழ்ச்சியின்போது பாதிப்புகளைக் குறைக்கலாம்.

Also Read – உங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்… செக் பண்ணலாமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top