நோன்புக் கஞ்சி

ஆரோக்கியமான நோன்புக் கஞ்சி… வீட்டிலேயே செய்வது எப்படி? #Explainer

ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது நோன்புக் கஞ்சிதான். ஒரு நாள் முழுவதும் நோன்பு இருந்த பின்னர், நோன்பைத் துறக்கும் போது நோன்புக் கஞ்சியைத்தான் பலரும் சாப்பிடுவது உண்டு. இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாது பிற மதங்களைச் சேர்ந்த மக்களும் இந்த நோன்புக் கஞ்சியை விரும்பி உண்ணுவது உண்டு. இந்த நோன்புக் கஞ்சியை மசூதிகளில் எப்படி செய்கிறார்கள் என்பது பற்றிதான் இந்த கட்டுரையில் தெரிஞ்சுக்க போறோம். வாங்க…

நோன்புக் கஞ்சி

கோடம்பாக்கம் ஜூம்மா பள்ளி வாசல் பல சிறப்புகளுக்கு உரிய பள்ளி வாசல். இந்த பள்ளி வாசலானது தொழுகைக்காக மட்டும் இயங்காமல் மக்களுக்கான சேவைகளையும் செய்து வருகிறது. நோன்புக் கஞ்சியை எப்படி தயார் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த பள்ளி வாசலுக்கு நேரடியாக விசிட் செய்தோம். அப்போது அந்தப் பள்ளியின் பொருளாளர் அப்துல் காதர் நம்மிடம் பேசினார்.

Also Read : `கைரேகை நிபுணர்.. டிரெட்லாக்ஸ் ஹேர்ஸ்டைல் பின்னணி’ – பாப் மார்லி பற்றிய 9 சுவாரஸ்யங்கள்!

அப்துல் காதர் பேசும்போது, “நோன்புக் கஞ்சி தயார் செய்வது என்பது அற்புதமான விஷயம். எங்களுடைய பள்ளியில் தயார் செய்யப்படும் நோன்புக் கஞ்சி இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலானது. பிரியாணிக்கு இணையான சுவை இந்த நோன்புக் கஞ்சில இருக்கும், மாலை வேளையில் கிட்டத்தட்ட 500-க்கும் மேல மக்கள் வந்து நோன்புக் கஞ்சி வாங்குவாங்க. எல்லா மதங்களைச் சேர்ந்த சகோதரர்களும் நோன்புக் கஞ்சி வாங்கிட்டு போவாங்க. நோன்புக்கஞ்சி அவ்வளவு ருசியா இருக்கும். இதுல பல மருத்துவ குணங்களும் இருக்கு. இந்த கஞ்சில இயற்கை மருத்துவத்துக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, கசகசானு பல பொருள்களையும் பயன்படுத்துவோம். இதனால், உடல் ஆரோக்கியமா இருக்கும்” என்றார்.

தயாராகும் நோன்புக் கஞ்சி

சையது நிஸாமுதீன் என்பவர்தான் இந்த பள்ளி வாசல்ல சீஃப் செஃப்ஃபா இருக்காரு. அவருடைய பையன் சையது ரஃபீக்கும் அவருக்கு உதவியா வேலை செய்றாரு. இஷாக் என்பவர் மேற்பார்வையாளராக இருந்து செயல்பட்டு வருகிறார். இவங்களோட நோன்புக் கஞ்சி ரொம்ப ஃபேமஸானது. இவங்களோட நோன்புக் கஞ்சி சீக்ரெட்ட நீங்களும் ட்ரை பண்ணா பிரியாணி ருசிக்கு சமமா ருசிய நீங்க கொண்டு வந்துர முடியும்னு கான்ஃபிடன்டா சொல்றாங்க.

நோன்புக் கஞ்சி வாங்க வரிசையில் நிற்பவர்கள்

இஷாக், நோன்புக் கஞ்சி செய்முறையை விளக்கி சொல்றாரு…“முதலில் பெரிய அளவுள்ள டபரால தேவையான தண்ணிய எடுத்துக்கனும். கேரட், தக்காளி, பச்சைமிளகாய் போன்ற காய்கறிகளை அதுல போட்டு நல்லா வேக வைக்கணும். அப்புறமா.. அரிசி, பாசிப்பருப்பு போட்டு நல்லா வேக வைக்கணும். மசாலாவ ரெடி பண்ண தனியா ஒரு பாத்திரம் எடுத்துக்கணும். அதுல எண்ணெய ஊத்தி, வெங்காயம் சிவந்து வர்ற அளவுக்கு வதக்கணும். அப்புறம் தக்காளிய போட்டு வதக்கணும். இஞ்சி, பூண்டு பேஸ்டு போடணும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகு, கரம் மசாலா எல்லாம் போட்டு நல்லா வதக்கணும்.கொழுப்பு கூட இல்லாம சுத்தமான மட்டன் கைமா போட்டு நல்லா கிளறிவிடணும். அப்புறமா கெட்டி தயிரை மிக்ஸ் பண்ணனும். அரை மணி நேரத்துல இருந்து முக்கால் மணி நேரம் வரைக்கும் கலந்து விட்டுட்டே இருக்கனும். இந்த மசாலா ரெடி ஆகுறதுக்குள்ள.. அரிசி, பருப்பு, காய்கறி நல்லா வெந்துரும். ரெடியான மசாலாவ அரிசி, பருப்புல சேர்த்து கலந்துவிடனும். மசாலவ போட்டுட்டு ஒரு மணி நேரம் குறைந்தது கலந்து விட்டுட்டே இருக்கனும். அப்போதான் மசாலா, அரிசி, பருப்பு எல்லாம் நல்லா கலந்து நல்ல டேஸ்டா வரும். கடைசில தேங்காய்ப்பாலையும் சேர்க்கணும். காலைல ஒரு 9 மணிக்கு ஆரம்பிச்சா கடைசில நெருப்ப அணைச்சு தம் போட்டு முடிச்சு, கஞ்சிய கொடுக்க ஆரம்பிக்கிறதுக்கு 3 மணி ஆயிடும்” என்றார்.

இப்படித்தாங்க நோன்புக் கஞ்சி பிரிபேர் பண்றாங்க. நீங்களும் இதை வீட்டுல ட்ரை பண்ணிப் பாருங்க… உங்க அனுபவத்தை கீழ இருக்க வீடியோவோட கமெண்ட்ல சொல்லுங்க… நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top