ராஷ்மிகா

எக்ஸ்பிரஷன் குயின்… நேஷனல் க்ரஷ்… – ராஷ்மிகாவின் கியூட் ஸ்டோரி!

கூகுள்ல ‘நேஷனல் க்ரஷ்’னு டைப் பண்ணோம்னா, வர்ற பெயர் ‘ராஷ்மிகா’தான். இந்தியாலயே இன்னைக்கு பிஸியான ஆக்ட்ரஸ்ல ஒருத்தங்க, ராஷ்மிகா. எல்லா இண்டஸ்ட்ரீலயும் இருக்குற முன்னணி ஹீரோஸ் கூட நடிக்கிறாங்க. அதாவது பான் இந்தியா ஆக்ட்ரஸ். குறிப்பிட்ட வருஷங்கள்ல இவ்வளவு பெரிய நடிகையா ராஷ்மிகா வந்துட்டாங்க. ஆனால், அவங்க பிளான்ல நடிகையாகணும்ன்றதே இல்லை. அவங்க பிளான் என்னவா இருந்துச்சு? அவங்க வேற இண்டஸ்ரிக்கு நடிக்க வந்ததை நினைச்சு ஒரு தடவை அழுதாங்களாம். ஏன்? ராஷ்மிகா கைல ஒரு டாட்டூ போட்ருப்பாங்க. அந்த டாட்டூல irreplaceable-னு எழுதியிருக்கும். ஏன் அப்படி போட்ருக்காங்க? ராஷ்மிகா டெலிவரி கேர்ளா வேலை பார்த்த கதை தெரியுமா? ஏன் அவங்கள நேஷனல் க்ரஷ்னு சொல்றாங்க? இதையெல்லாம் பத்தி தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

கர்நாடகால இருக்குற கூர்க் ஏரியால பிறந்து வளர்ந்தவங்கதான், ராஷ்மிகா. ஸ்கூல் படிக்கும்போது நடிகை ஆகணும் அப்டின்ற கனவுலாம் அவங்களுக்கு இல்லை. அவங்க ஃபேமிலிலயும் யாரும் சினிமா இண்டஸ்ட்ரீல இல்லை. அதனால, அதைப் பத்தி எல்லாம் அவங்க நினைக்கவும் இல்லை. அவங்களோட ஹெட் மிஸ்ட்ரஸ், ராஷ்மிகாவோட பெயரை ‘Clean & Clear Times Fresh Face 2014’ போட்டிக்கு கொடுத்துருக்காங்க. ராஷ்மிகாவும் டீச்சர் சொன்னதை தவிர்க்க முடியாதுனு அந்தப் போட்டில போய் கலந்துகிட்டாங்க. அதுல வின் பண்ணனும்ன் அப்டின்ற பெரிய மோட்டிவ்லாம் இல்லை. ஆனால், அந்தப் போட்டிக்கு தேவையான தன்னோட பங்கை கரெக்டா பண்ணிட்டாங்க. அந்த போட்டில வின் பண்ணவும் செய்தாங்க. அப்புறம் சிலபல விளம்பரத்துலயும் நடிச்சாங்க. அதை பார்த்துதான் அவங்க முதல் படமான ‘க்ரிக் பார்டி’ படத்துக்கான வாய்ப்பு வந்துருக்கு.

பெங்களூர்ல காலேஜ் படிக்கும்போது க்ரிக் பார்டி படத்துல ஹீரோயினா நடிச்சாங்க. இந்தப் படத்துல நடிச்சு முடிச்சிட்டு திரும்ப படிக்கப்போய்டுவோம். இந்தப் படத்துல நடிச்சது நமக்கு நல்ல மெமரியா இருக்கும். இந்த படத்துல கேரக்டரும் காலேஜ் கேர்ள்தான். அதுனால, பெருசா நடிக்கவும் தேவையில்லை. அப்புறம் அப்பா பண்ற பிஸினஸ்லாம் பார்த்துக்கலாம் அப்டின்ற ஐடியாலதான் இருந்துருக்காங்க. ஆனால், கன்னட மொழில அந்த வருஷம் வெளியான படங்கள்ல ‘க்ரிக் பார்டி’ அதிக வசூலைப் பெற்ற படங்கள்ல ஒண்ணா மாறிச்சு. ராஷ்மிகாவோட நடிப்பும் அதிகளவில் பேசப்பட்டுச்சு. அந்தப் படத்துக்காக சிலபல விருதுகளும் ராஷ்மிகாக்கு கிடைச்சுது. இதையடுத்து, அஞ்சனி புத்ரா, சமக்-னு ரெண்டு ஹிட் கொடுத்தாங்க. எல்லாமே 100 நாள்கிட்ட ஓடிச்சு. கன்னட படங்களைப் பார்த்துட்டு தெலுங்கு பட வாய்ப்பு ராஷ்மிகாவைத் தேடி போய்ருக்கு.

தெலுங்குல வெங்கி குடுமுலா டைரக்ட் பண்ண சலோ படத்துலதான் ராஷ்மிகா அறிமுகமானாங்க. ரொமாண்டிக் காமெடியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவுல ஹிட் ஆச்சு. இந்தப் படத்துல அவங்க நடிக்கும்போது, “தெலுங்கு பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால நடிக்க முடியாது”னு ஃபீல் பண்ணி அழுதுட்டாங்களாம். அப்புறம் அந்தப் படத்தோட டைரக்டர்தான் ஹெல்ப் பண்ணி அவங்களை நடிக்க வைச்சிருக்காரு. இந்தப் படம் தெலுங்குல மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர். இதுதொடர்பா ராஷ்மிகா தன்னோட இன்ஸ்டால, “நான் இன்னைக்கு இப்படி இருக்குறதுக்கு காரணம் வெங்கிதான். நான் உண்மையானே சொல்றேன். அது உங்களுக்கும் தெரியும்”னு எமோஷனலா எழுதியிருந்தாங்க. இந்தப் படத்துக்கு அப்புறம் அவங்களை சவுத் இந்தியா முழுக்க கொண்டுபோய் சேர்த்த படம்னா அது ‘கீதா கோவிந்தம்’தான். விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா பேர் அப்படி பேசப்பட்டுச்சு.

கீதா கோவிந்தம் படத்துல வந்த ‘இன்கேம் இன்கேம்’ பாட்டு இன்னைக்கும் பலரோட ஃபேவரைட்தான். அப்போ டிக்டாக்ல எல்லா ஜோடிகளும் இந்தப் பாட்டைதான் போட்டுட்டு இருந்தாங்க. ராஷ்மிகாவோட கியூட்னஸ் எல்லாம் பார்த்து நேஷனல் க்ரஷ்னு ரசிகர்கள் அவங்களுக்கு பட்டமே கொடுத்தாங்க. அவங்க அளவுக்கு எக்ஸ்பிர்ஷன்ஸ் கொடுக்குற ஹீரோயின்ஸ் இன்னும் இந்தியாலயே இல்லைனு சொல்லலாம். அதுனாலதான் அந்தப் பெயர். இந்தப் படத்துக்கு அப்புறம் தமிழ்ல இவங்க எப்போ நடிப்பாங்கனு எல்லாரும் கேட்டுட்டு இருந்தாங்க. இருந்தாலும் தெலுங்குல ரொம்ப பிஸியான நடிகையா வலம் வந்தாங்க. இவங்களை பொறுத்த வரைக்கும் ஒரு படத்துக்கு கதைதான் ஹீரோ. நல்ல கதை எந்த மொழில வந்தாலும் அங்க நடிக்க தவிர்க்கமாட்டாங்க ராஷ்மிகா. தேவதாஸ், யஜமானா, டியர் காம்ரேட், சரிலேரு நீக்கவரு படங்கள்லயும் ராஷ்மிகாவோட பெர்ஃபாமென்ஸ் அதிகளவில் பேசப்பட்டுச்சு.

ஒரு படம் நடிச்சிட்டு திரும்ப போய்டலாம்னு இருந்த ராஷ்மிகாவுக்கு வாய்ப்புகள் எக்கச்சக்கமா குவிஞ்சுது. பெரும்பாலும் எல்லாப் படங்களுமே ஹிட்டுதான். தமிழ்ல சுல்தான் படம் மூலமா எண்ட்ரி கொடுத்தாங்க. ஆனால், அந்தப் படம் விமர்சன ரீதியா பெரிய அளவுல வரவேற்பைப் பெறலை. இருந்தாலும் ராஷ்மிகா தமிழ் படத்துல நடிச்சிட்டாங்கனு தமிழ்ல இருக்குற நிறைய ஃபேன்ஸ்க்கு சந்தோஷம். அப்படியே பாலிவுட்ல இவங்களுக்கு அதிக ஃபேன்ஸை ஏற்படுத்தி கொடுத்தது டியர் காம்ரேட் படம். அந்தப் படத்துல இவங்க பேரு லில்லி. பாலிவுட்ல மிஷன் மஜ்னு படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்துருக்காங்க. அதுக்காக அந்த டீம் இவங்கள காண்டாக்ட் பண்ணும்போது, “சீரியஸ்லி?”னு கேட்ருக்காங்க. அப்போக்கூட அங்க இருக்குற ஃபேன்ஸ் இவங்கள லில்லினுதான் கூப்பிட்ருக்காங்க. அந்த அளவுக்கு டியர் காம்ரேட் படத்துக்கு ஃபேன்ஸ்.

ராஷ்மிகாவை பான் இந்தியா ஆக்ட்ரஸா மாத்துன ஒரு படம் ‘புஷ்பா – தி ரைஸ்’ படம்தான். அந்தப் படத்துல இவங்க நடிப்பு ரொம்பவே வரவேற்பைப் பெற்றிச்சு. எப்பவும் சிட்டி கேர்ளா கியூட்டா எக்ஸ்பிரஷன் மட்டும் கொடுத்துட்டு நடிச்சிட்டு இருந்தாங்க. இதுல கலர் எல்லாம் கொஞ்சம் கம்மி பண்ணி வில்லேஜ் கேர்ளா இறங்கி நடிச்சிருப்பாங்க. ஸ்டில் இதுவும் கியூட்டாதான் இருக்கும். அதுவும் அந்த சாமி ஸ்டெப்லாம் வேற மாறி. இப்போ அமிதாப் பச்சன், விஜய், துல்கர்னு எல்லா இண்டஸ்ட்ரீல இருக்குற முன்னணி ஹீரோக்கள் கூடவும் நடிச்சிட்டு இருக்காங்க. ராஷ்மிகா முதல்முதல்ல தியேட்டர்ல பார்த்த படம் கில்லிதான். அவங்க அப்பாக்கூட போய் பார்த்தாங்களாம். அப்போல இருந்தே இவங்க விஜய் ஃபேன்தான். விஜய்கூட எப்படியாபது நடிக்கணும்னு ஒரு ஆசை. விஜய்யோட அடுத்த படம் பத்தின தகவல் வரும்போதுலாம் இவங்க விஜய்கூட நடிக்கிறாங்கனு சொல்லுவாங்க. கடைசில வாரிசுல அது நடந்திருச்சு.

நேஷனல் லெவல்ல ராஷ்மிகா கவனம் பெற்றதுக்கு முக்கியமான காரணங்கள்ல பாட்டும் ஒண்ணு. அதுவும் யுவன் ஷங்கர் ராஜாகூட சேர்ந்து ஒரு ஆல்பம் பண்ணியிருப்பாங்க. அது வேறலெவல்ல இருக்கும். டாப் டக்கர் ஸ்டெப்பும் ரீல்ஸ்ல செமயா வைரல் ஆச்சு. ராஷ்மிகா நிறைய தடவை ட்ரோலும் செய்யப்பட்ருக்காங். ஆனால், அவங்க எப்பவும் கான்ஃபிடண்டா இருப்பாங்க. அதுக்கு ஒரு சின்ன எக்ஸாம்பிள் அவங்க கைல இருக்குற டாட்டூ. அதுல irreplaceable-னு எழுதியிருக்கும். ஏன் அப்படினு அவங்கக்கிட்ட கேட்டா, “இந்த உலகத்துல எல்லாருமே irreplaceabletதான். ஒருத்தரோட இடத்தை இன்னொருத்தரால நிரப்ப முடியாது”னு தத்துவமா பேசுவாங்க. ஒரு விஷயம் தெரியுமா? ராஷ்மிகா ஃபிலாசபி, ஜார்னலிஸம், இங்கிலீஷ் லிட்ரேச்சர்னு மூணு டிகிரி முடிச்சிருக்காங்க. ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்துல நடிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் இருக்குற ரூமர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவுல் லவ் பண்றாங்கன்றது.

க்ரிக் பார்டி படத்தப்போ ராத்மிகாவுக்கும் அந்தப் படத்தோட ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டிக்கும் காதல் வந்தது. அப்புறம் அவங்க நிச்சயதார்த்தமும் பண்ணிக்கிட்டாங்க. இதைக்கேட்டு பல ராஷ்மிகா ஃபேன்ஸ் ஹார்ட் பிரேக் ஆயிடுச்சு. அப்புறம் அவங்க கல்யாணம் கொஞ்சம் நாள்ல நின்னு போனதா செய்திகள் வெளியாச்சு. இதை நினைச்சும் அவங்க ஃபேன்ஸ் கொஞ்சம் வருத்தப்பட்டாங்க. அப்புறம் ஃபுல்லாவே விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் புரளிகள்தான். சமீபத்துலகூட விஜய் தேவரகொண்டா, “நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒண்ணுமில்லை”னு ராஷ்மிகா தொடர்பான் கேள்விக்கு பதில் கொடுத்துருந்தாரு. சரி, அதை விடுவோம். ராஷ்மிகா பேர்ல மெக்டொனால்ட்ஸ் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்தாங்க. அவங்க புரொமோஷனுக்காகதான். ராஷ்மிகா முதல் ஆர்டரை, ஆர்டர் பண்ணவங்க வீட்டுக்கே போய் கொடுத்தாங்க. அந்த வீடியோவும் செம வைரல் ஆச்சு.

ராஷ்மிகா நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

https://fb.watch/eP0wakwYSb/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top