ரவிதேஜா

மாஸூக்கெல்லாம் மாஸ்.. பாலையாவுக்கே பாஸ்.. மாஸ் மகாராஜா ரவிதேஜா!

“டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா அதுவும் இருக்கு…” – இதுக்கு மேலயும் நிறைய வேணுமா? குறிப்பா, ஹார்ட்கோர் பாலகிருஷ்ணாவின் சாஃப்ட்கோர் வெர்ஷன் வேணுமா? இருக்கவே இருக்கார் நம்ம தெலுங்கு டூ தமிழ் டப்பிங் மாஸ் ஹீரோ ரவிதேஜா. அவரோட அல்ட்ரா லெவல் ஆக்கங்களின் தமிழ் டப்பிங் படங்களும், அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும்தான் இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கப் போறோம்!

நீங்க டிவி சேனலை மாத்திட்டே இருக்கும்போது ரவிதேஜா படங்களைக் கண்டுகொண்டீங்கன்னா, அப்போ உங்களுக்கு நேரம் இருந்தால், அப்படியே ரிமோட்டுக்கு ஓய்வு கொடுத்துட்டு படத்தை பார்க்க ஆரம்பீங்க. உங்க கஷ்டத்தை எல்லாம் மறக்கவைச்சு வேறொரு உலகத்துக்கு உங்களை அழைச்சுட்டுப் போயிடுவாரு ரவிதேஜா.

ரவிதேஜா

ஆக்சுவல்லி, தெலுங்கு சினிமா உலகில் ரவிதேஜா ஜெயிச்ச கதையே ரொம்ப இன்ஸ்பையரிங் ஆனது. நார்மலான குடும்பப் பின்னணியில இருந்து வந்த ரவிதேஜா பல ஆண்டுகளா சின்னச் சின்ன ரோல்களில் நடிச்சவர். அப்புறம், அசிஸ்டென்ட் டைரக்டராகவும் சினிமாவுல சர்வைவ் பண்ணினவர். இடையில், ஒரு நல்ல கேரக்டர் ரோல் சிக்கி, அதில் தன்னை நிரூபிச்ச அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஹீரோவா எமர்ஜ் ஆகி இப்போ தெலுங்கில் ‘மாஸ் மகாராஜா’ன்ற அடைமொழியோட வலம் வந்துட்டு இருப்பவர்தான் ரவிதேஜா.

அறிவியல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட நம்ம பாலையா ஒரு பல்கலைக்கழகம்னா, அதோட பிரின்ஸிபல்தான் ரவிதேஜா. சில நேரங்களில் நம்ம பிரைன், கிட்னி எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு இவர் படங்களை பார்க்க ஆரம்பிச்சா, நமக்குக் கிடைக்கக் கூட சினிமா அனுபவம்ன்றது எந்த உலகத்துலயும் கிட்டாத ஒண்ணா இருக்கும். இவரோட ஸ்பெலாட்டி என்னன்னா, கம்ப்ளீட் ஆக்‌ஷன் மூவியா இருந்தாலும் சரி, எமோஷனல் ஃபேமிலி டிராமாவும் இருந்தாலும் சரி, அதீத ரொமான்டிக் மூவியா இருந்தாலும் சரி, அதுல எல்லாத்துலயுமே காமெடின்ற மேட்டர் இழையோடிட்டே இருக்கும். அப்படியான மக்களை மகிழ்விக்கக் கூடிய சில டப்பிங் படங்களைப் பத்தி இப்போ பார்ப்போம்.

2015-ல் வெளிவந்த ‘கிக் 2’ படத்தின் தமிழ் டப்பங் வெர்ஷன் தான் ‘எங்களைப் போல் யாருமில்லை’. அமெரிக்காவுல டாக்டரா இருக்குற ரவிதேஜா, அப்பா ரவிதேஜாவின் பூர்விக சொத்தை மீட்பதற்காக சொந்த ஊரு வர்றாரு. இந்த சீரிஸோட முதல் படமான ‘கிக்’குல கிக்கு கிக்குன்னு அலையிற ரவிதேஜா, இந்தப் படத்துல தன்னோட ‘கம்ஃபர்ட்’டுக்காக அலையோ அலையோன்னு அலையுறார். இந்தப் படம் முழுக்க ‘கம்ஃபர்ட்’ன்ற வார்த்தையை முன்னூத்தி எண்பத்திரெண்டு தடவை உச்சரிப்பார். டவுட் இருக்குறவங்க எண்ணிப் பார்த்துக்கலாம்.

ரவிதேஜா

சொந்த ஊருல சொத்தை மீட்க வந்தவர் மேல ஸ்பீடான கார்ல உரசிட்டுப் போறார் ஒரு உள்ளூர் ரவுடி அரசியல்வாதி. வயத்துல ரத்தக்காயத்தோட தானே போய் ஸ்ட்ரெச்சர்ல படுத்துகிட்டு ஆஸ்பிட்டலுக்குள்ள நுழையிற ரவிதேஜா தானே கிழிஞ்ச வயித்த தச்சிகிட்டு, தையல் போட்ட கையோடு பெயின் கில்லர் கூட எடுத்துக்காம அந்த ரவுடியை தேடி போறார். அங்க செம்ம ஃபைட்டு. அந்த ஃபைட்ல தான் பாலையா யுனிவர்சிட்டி ஆளுன்னு நிரூபிக்கிற அதே நேரத்துல, தனக்கே உரிய காமெடியையும் கலந்து கட்டுறார். அந்த ஃபைட்டை நேர்ல பார்க்குற ஒருத்தர் ‘நம்ம ஊரு ரவுடியை போட்டுத் தள்ள இவர்தான் சரியான ஆளு’ன்னு ஊருக்கு கிளம்பி போய், அந்த ஊர் மக்கள்கிட்ட தான் நேரில் கண்ட ராபின்ஹுட் ரவிதேஜா பத்தி எடுத்து சொல்றார்.

‘சொந்தப் பிரச்சினைக்கு மட்டுமே வூடு கட்டும் கொள்கை’ கொண்ட ரவிதேஜாவை அந்த ஊருக்கு வரவழைக்க காதல் உத்தியைக் கையாளும் அசைன்மென்ட்டில் ஈடுபடுகிறார் ரகுல் ப்ரீத்தி சிங். அவர் மிஷன் அக்கம்ப்ளிஷ்டு ஆனதா? அந்த ஊருக்கு ரவிதேஜா ஆஜரானாரா? அந்த வில்லனை போட்டுத்தள்ளுனாரா? இவற்றின் மூலமா அவருக்கு ‘கம்ஃபர்ட்’ கிடைச்சுதான்றதுதான் திரைக்கதை.

படம் முழுக்க ‘எப்புர்றா’ மொமன்ட்டுகளுடன் பட்டைய கிளப்பியிருப்பாரு ரவிதேஜா. கில்லில விஜய்க்கு ஏர்போர்ட்ல த்ரிஷா நினைவு வந்த மாதிரி, ஃப்ளைட்ல உட்கார்ந்துட்டு இருக்கும்போது ரகுல் ப்ரீத்தி சிங் நினைவு வந்து எமோஷனா கிளம்புறது ஆகட்டும், உள்நோக்கத்தோடதான் காதல் பண்ணியான்னு கலங்குறது ஆகட்டும் எமோஷனலாவும் நம்மை சிலிர்க்கவைத்திருப்பார் ரவிதேஜா. கிட்டத்தட்ட 45 கோடி ரூபாயை கலெக்ட் பண்ண இந்தப் படம், ரவிதேஜாவின் ஆக்‌ஷன் ஃபான்டஸி டிராமால முக்கியமான படம்! இதென்னாட ‘ஃபேன்ட்டஸி’க்கு வந்த சோதனையெல்லாம் கேட்கக் கூடாது. கடைசில அந்த வில்லன் எப்படி சாவாருன்றதுல இருக்கு ட்விஸ்ட்!

அடுத்தது அடுத்த லெவல் பொலிட்டிகல் ப்ளஸ் ரொமான்ட்டிக் ஃபேன்டஸி. அதே 2015-ல வந்த படம்தான் ‘பெங்கால் டைகர்’. ஒரு சாதாரண வேலை வெட்டி இல்லாத பேரிளைஞரால ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கண்ணுலயே விரல் விட்டு ஆட்ட முடியும்னு உலகத்துக்குச் சொன்னவர்தான் ‘பெங்கால் டைகர்’ ரவிதேஜா.

வேலை வெட்டி இல்லாத சொந்த ஊரில் பிரபலமான ரவிதேஜா பொண்ணுப் பார்க்கப் போறாரு. அந்தப் பொண்ணோ, ‘நான் ஃபேமஸான ஒருத்தரைதான் கலியாணம் பண்ணுவேன்’ன்னு ரிஜக்ட் பண்ண, ஃபேமஸாக களம் இறங்குறாரு ரவிதேஜா. ஒரு அமைச்சரை பொதுக் கூட்டத்துல கல்லால அடிச்சு நியூஸ் பேப்பர்ல வருது. அந்த அமைச்சரோ தன்னோட வலதுகரமா வேலை கொடுக்கிறார். அங்கிருந்து வேறொரு அமைச்சர்கிட்ட இருந்து ஒரு அசைன்மெண்ட் வருது. தன்னோட பொண்ணை ஏர்ப்போர்ட்ல இருந்து பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்ன்றதுதான் அந்த அசைன்மென்ட். அதை கச்சிதமா முடிக்கிறாரு ரவிதேஜா.

ரவிதேஜா

இங்க ஒரு மேட்டர் சொல்லியே ஆகணும். அந்தப் பொண்ணுக்கு யார்கிட்ட இருந்து பிரச்சினையோ அவங்ககிட்டயே போட்டுக் கொடுக்கிறாரு. அவங்களும் அடியாளை அனுப்ப, அந்த அடியாட்களை அந்தப் பொண்ணு முன்னாடி போட்டுத்தாக்கிட்டு பத்திரமா கூட்டிட்டு வர்றாரு. ஏன் இப்படி நீயே பாம் வெச்சுட்டு நீயே எடுத்தன்னு கேட்டா, ‘இனிமே எப்பவும் உங்க பொண்ண தூக்க எவனும் வரமாட்டாங்’கன்னு செம்ம லாஜிக் பேசுறார். அந்தப் பொண்ணுக்கு ரவிதேஜாவை பிடிச்சுப் போக, அவங்க வீட்லயே வேலைக்கு சேர்க்கப்படுறாரு ரவிதேஜா. அந்தப் பொண்ணுதான். ராஷி கண்ணா. அப்புறம் என்ன? லவ்வுதான்.

இப்பிடியே போயிட்டு இருக்கிற ஸ்டோரில ஒரு ட்விஸ்ட். அந்த அமைச்சர் ஒரு ஃபங்ஷன்ல தன்னோட பொண்ணு ராஷிக்கு ரவிதேஜாதான் மாப்ளைன்னு சொல்ல, மேடையேறுற ரவிதேஜா, ‘நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன். ஆனா, எங்க காதலை யாரலையும் சேர்த்து வைக்க முடியாது’னு சொல்றாரு. அந்த ஃபங்ஷன்ல இருந்த சி.எம். “நான் இந்த ஸ்டேட்டோட சி.எம். நான் சொல்றேன். உன் லவ்வர் யாரு?’னு சொல்லுன்றார். அங்கதான் உலக லெவல் ட்விஸ்ட்டு. அசராத நம்ம ரவிதேஜா, ‘உங்க பொண்ணுதான்’னு தமன்னாவை கை காட்டுறார். அப்புறம் என்ன ஸ்டேட் லெவல் ஃபேமஸ் செலிபிரிட்டி ஆகுறாரு நம்ம ஹீரோ.

அப்புறம் என்னடான்னா, அடுத்த அரைமணி நேரத்துல சிஎம்மையே பதவி இழக்க வெச்சு நடுரோட்ல அனாமத்த நிக்க வைக்கிறார். இதுக்கு இடையில தமன்னாவும் ரவிதேஜாவை சுத்தி வர்ற… காத்து வாக்குல ரெண்டு காதல் களேபரங்கள் ஓடுது. கடைசிலதான சி.எம்.மை காலி பண்ணதுக்கான ஃப்ளாஷ்பேக் ட்விஸ்ட் ரிவீல் ஆகுது. ஒட்டுமொத்தமாவே அரசியல்ல இதெல்லாம் சாத்தியமே இல்லைன்னு தெரிஞ்சும் சில பல சம்பவங்களை அரங்கேத்தி சாத்தியப்படுத்திய விதத்துல இது ஒரு பொலிட்டிகல் ஃபேன்டஸிதான். அப்போ, ரொமான்டிக் ஃபேன்டஸி? ராஷி கண்ணா, தமன்னா… ரெண்டு பேருமே லவ் பண்றாங்க இல்லையா? இந்த மூணு பேரோட முடிவு என்னன்றதுதான் அந்த ரொமான்டிங் ஃபேன்டஸி. அதை நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

அப்படியே 2021-க்கு வந்தா, நம் கண் முன்னால் நிக்குது ‘கிராக்’ (Krack) படம். நார்மல் கேரக்டர்லயே ஆக்‌ஷன்ல அதிரடி காட்டுற ரவிதேஜா போலீஸ் கேரக்டர்னா சும்மா விட்ருவாரா என்ன? போலீஸ் கேரக்டர்கள் என்றாலே ரவிதேஜாவுக்கு அல்வா சாப்டுற மாதிரின்றதை இந்தப் படத்துலயும் ப்ரூவ் பண்ணியிருப்பாரு. கதைன்னு கேட்டா, நம்ம விஜய் சேதுபதி நடிச்ச ‘சேதுபதி’ படத்தோட சேம் டெம்ப்ளேட் தான். ஆனா, திரைக்கதையும் மேக்கிங்கும்தான் ரகளையாக இருக்கும்.

இந்தியாவின் மோஸ்ட் வான்ட்டட் டெரரிஸ்ட் முதலில் ஃப்ளாஷ்பேக் சொல்வாரு. நாடே தேடிட்டு இருந்த அவரை, அசால்டா உள்ளூர் போலீஸ் அதிகாரி ரவிதேஜா புடிச்சு உள்ளே போட்ட கதையை சொல்வாரு. அப்படியே கட் பண்ணினா, டெரர் லோக்கல் ரவுடியா இருந்து ஜெயிலுக்குப் போய் திருந்திய சமுத்திரக்கனி கதை சொல்ல ஆரம்பிப்பாரு. அவருக்கும் ரவிதேஜாவுக்கும் நடக்குற வார் தான் படமே.
இந்த போலீஸ் ஃபேன்ட்டஸி படத்துல வழக்கமான காமெடியை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிட்டு, ஆக்‌ஷன் ப்ளாக்ல அட்டகாசம் செய்வாரு நம்ம ரவிதேஜா. கூடவே, அவரோட மனைவியா வர்ற ஸ்ருதி ஹாசனுக்கும் ஒரு செம்ம ஃபைட் சீக்வன்ஸ் இருக்கு. கரோனாவுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவை வசூலில் தூக்கி நிறுத்திய படங்களில் இதுவும் ஒண்ணு.

Also Read – லோகேஷ் கேங்க்லயே அநியாயத்துக்கு நல்லவர்… ஃபிலோமின் ராஜ் சம்பவங்கள்!

ஒருபக்கம் சமுத்திரகனியோட மோதல் காட்சிகள் மாஸ் காட்டும்னா, இன்னொரு பக்கம் வில்லியா வர்ற வரலட்சுமி சரத்குமாரை டீல் பண்றது செம்ம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். மொத்தத்துல, இப்படியெல்லாம் ஒரு போலீஸ் இருப்பாரான்ற சந்தேகமே வராத அளவுக்கு மாஸ் காட்டியிருப்பாரு ரவிதேஜா.

இவரோட தமிழ் டப்பிங் வெர்ஷன் படங்கள்ல வர்ற இன்னொரு முக்கிய அம்சம் என்னன்னா, ஒரிஜனலை விட தமிழ் டயலாக் செம்ம மாஸாவும் ரகளையாவும் இருக்கும். டயலாக்லயே பல சேட்டைத்தனங்கள் தெரியும். அதவும் குறிப்பாக, பக்காவா லிப் சிங் செட்டாவற மாதிரி வசனமும் டப்பிங்கும் கலக்கலா இருக்கும்.

கமிஷ்னர் குழந்தையை கடத்தி வெச்சிருக்கிற கேங்ஸ்டர்ஸோட வெறும் கையோடு உள்ளே நுழைஞ்சு, ஒருத்தர் விடாம எல்லாரையும் போட்டுத் தள்ளுறது, ஒரு ஃபேமிலி டிராமால கண்ணு தெரியாத மாற்றுத்திறனாளி ஹீரோவா டிசைன் டிசைனான ஆக்‌ஷன் காமெடில அலறவிடுறதுன்னு ரவிதேஜா படங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ண ஆரம்பிச்சா இன்னும் பல மணி நேரங்கள் நமக்குத் தேவைப்படும்.

ஆனா, ஏற்கெனவே சொன்ன மாதிரி நம்ம மூளைக்கு இரண்டரை மூணு மணி நேரம் கம்ப்ளீட் ரெஸ்ட் கொடுத்துட்டு ரவிதேஜாவின் தமிழ் டப்பிங் படங்களை பார்க்க ஆரம்பிச்சா கிடைக்கிற சுகானுபவமே தனிதான். அந்த வகையில், உங்களைக் கவர்ந்த ரவிதேஜா படங்களை கமென்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top