Tour பிளான் பண்றீங்களா… நீங்க கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

கொரோனாவில் இருந்து ஓரளவுக்கு மீண்டு இயல்பு நிலையை நோக்கித் திரும்பியிருக்கிறோம். பள்ளி, கல்லூரிகள் தொடங்கியிருக்கின்றன. வழக்கமான அலுவல்களை மேற்கொண்டு வரும் நமக்கு, விடுமுறை காலங்கள்தான் ஒரு இளைப்பாறுதல் தருபவை. அப்படி லாங் வீக்-எண்ட் போன்ற விடுமுறை நாட்கள் வருகையில் சின்னதா ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வரலாமே என்ற யோசனை தோன்றலாம். சரி, ஒரு சுற்றுலா திட்டமிடும்போது நாம் எதையெல்லாம் முக்கியமா கவனிக்கணும்… எதெல்லாம் முன்னாடியே திட்டமிடணும்… அதைப்பத்திதான் இந்தக் கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

சுற்றுலா
சுற்றுலா

பட்ஜெட் முக்கியம் பாஸ்!

பொதுவாகவே ஹாலிடேஸ்ல நாம போற இடங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்கும். அப்படி உங்களோட டூரை பிளான் பண்ணும்போது உங்க பட்ஜெட்டுக்குள்ள அந்த இடம் இருக்கானு செக் பண்ணுவது அவசியம். அந்த வரிசையில் விடுமுறை நாட்கள்ல குடும்பத்துடன் வெளிநாடுகள் அல்லது தீவுகளைச் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையும் நம்மில் பலருக்கு உண்டு. அவ்வாறு செல்ல ஒரு பட்ஜெட் பிரண்ட்லியான இடம் தான் அந்தமான் நிக்கோபார் தீவு திடல். இந்த தீவை சுற்றிப்பார்க்க 5 பகல் 5 இரவு பேக்கேஜாவது குறைந்தபட்சம் வேண்டும். அந்த அளவிற்கு ஆச்சரியம் ஊட்டும் சுவாரஸ்யங்கள் நிறைந்த இடம் தான் அந்தமான் நிக்கோபார் தீவு.

பட்ஜெட்
பட்ஜெட்

அடுத்ததாக அதிகமான ஆச்சரியங்கள் நிறைந்த இடம் தான் மணாலி. ஆனால், இதற்கான பட்ஜெட் என்பது கொஞ்சம் அதிகமானதாகத் தான் இருக்கும். ஆனால், அந்த பட்ஜெட்டுக்கு வொர்த்தான இடமாக மணாலி இருக்கு. தமிழகத்தில் இருந்து மணாலி செல்ல விரும்புவோர் டெல்லியிலிருந்து பயணத்தை தொடங்கினால் பயணம் ஈஸியாக இருக்கும் என்பதோடு செல்லும் வழியெல்லாம் ரொம்பவே எக்ஸ்சைட்மெண்ட்டான விசுவல்ஸ் நிறைந்துக் காணப்படும். அடுப்பே இல்லாமல் தண்ணீரில் சமைக்கும் சீக்கியர்களின் கோவில் முதல் இயற்கையாகவே பூமியில் இருந்து வரும் சூடான நீரினால் நிறைந்த குளம் என எண்ணற்ற இடங்களின் பிறப்பிடமாய் திகழும் மணாலி பார்த்து வியக்கும் சுற்றுலா தளங்களில் ஒன்று. இதற்கான பட்ஜெட் என்பது தங்களின் வசதிக்கான தேவையை பொருத்து தான் அமையும்.

நம்மில் நிறைய பேர் செல்ல நினைக்கும் ஒரு டூரிஸ்ட்பிலேஸ் என்றால் அது கோவா தான் ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் அந்த டூர் பற்றிய ஆசை நம்மை விட்டு போய் இருக்கும். ஆனால், இப்போது அதிகபட்சமாக 4000 ரூபாயிலேயே வர்கலாவின் மினி கோவாவை திருப்தியாகச் சுற்றி பார்க்க முடியும்.

கேரளா
கேரளா

அடுத்ததாக கேரளாவின் மூணார், இயற்கை கொஞ்சி விளையாடும் எழில் மிகுந்த குட்டி காஷ்மீர் என அழைக்கப்படும் குளிர் நிறைந்த பிரதேசம். மூணார் சென்றுவர 2 நாட்களுக்கான பட்ஜெட் 2,750 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அருகிலிருக்கும் தேக்கடிக்கும் அப்படியே ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம். அது மனதுக்கு ரொம்பவே ரிலாக்ஸா இருக்கும். ஆழப்புழா படகு சவாரியும் ஒரு வித்தியாசமான எக்ஸ்பிரீயன்ஸ தரக்கூடியது.

நம் தமிழ்நாட்டிலேயே நாம் பார்த்து ரசிக்க கூடிய ஏராளமான அருவிகள் நிறைய இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தின் ஆகாய கங்கை அருவி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் குரங்கு அருவி, நீலகிரி மாவட்டத்தின் கேத்ரின் அருவி என நம்ம தினசரி ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு மிகுந்த மன அமைதியை கொடுக்கிறது, சுற்றுலா தளங்கள்.

எப்படி போகப்போறீங்க?

நாம ஒவ்வொருத்தருமே ஹாலிடேஸ்ல பயணிக்குற வாகனம் நமக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் வகையில் இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு. அதே சமயம் அந்த வாகனம் தங்களுக்கு சவுகரியமா இருக்கவேண்டும் என்றும் பார்ப்போம். அந்த வசதி நாம் தேர்ந்தெடுக்கும் வாகனங்களை பொருத்து தான் அமைகிறது.

உங்களுடைய விடுமுறையை நீங்க மணாலியை நோக்கி தொடங்கப்போகிறீர்கள் என்றால், தமிழகத்திலிருந்து டெல்லி ரீச் ஆனவுடன் ஓலா அல்லது உபெர் போன்ற ஆப் மூலம் ஆன்லைன் டாக்ஸிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது பெஸ்டாக இருக்கும். இத்தனை நாட்களுக்கு இவ்வளவு கட்டணம் என அவர்களே தங்களுக்கானதை சொல்லிவிடுவார்கள். இவ்வாறு டாக்ஸி மூலம் மணாலி சென்றால் பட்ஜெட் கட்டுப்படி ஆகாது பாஸ் என்பவர்கள், பேருந்து மூலமாகவும் மணாலி செல்லலாம். அதற்கான வசதிகளும் இருக்கின்றன.

டிராவல்
டிராவல்

அதேபோல் டூர் கேரளாவிவை நோக்கி ஸ்டார்ட் பண்ண போறீங்க என்றால் தங்களின் வசதிக்கேற்ப வாகனத்தைத் தேர்வு செய்துக்கொள்ளலாம். வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்றால் பைக் மூலம் பயணத்தை தொடங்கலாம். அது மிகுந்த சுவாரஸ்யத்தை கொடுக்கும், ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

தங்குமிடம், உணவு

நாம் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு விதமான உணவு பழக்கங்கள் இருக்கலாம். ஆனால், டூர் போகும்போது அந்தந்த ஊர்கள் எந்தெந்த உணவுகளுக்கு பெயர் போனதாக இருக்கிறதோ அதாவது ஒவ்வொரு ஊர்களுக்கும் பிரபலமான உணவு என ஒன்று இருப்பது வழக்கம். அதனை கண்டிப்பாக மிஸ் பண்ணாம டேஸ்ட் பண்ணி பாருங்கள். நிச்சயமாக வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.

உணவு
உணவு

சீசன் என்ன?

நீங்கள் டூர் போவதற்கு முன்பாக நீங்கள் செல்லும் ஊர்களின் சீசன் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற் போல தங்களின் உடைகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் குளிர்பிரதேசங்களுக்கு செல்லப் போகிறீர்கள் என்றால் அங்கு நிலவும் சீசனை சமாளிக்கும் வகையில் கிளவுஸ், ஸ்கார்ப், ஷு, என தயார்படுத்திக் கொண்டு செல்லுங்கள். அது உங்களூடைய டூரை மகிழ்ச்சியா அனுபவிக்க வசதியாக இருக்கும்.

Also Read: தமிழ் சினிமாவின் ‘பழம்’ கேரக்டர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top