`வீட்டுக்கே வந்து சமைத்துத் தரும் செஃப்!’ – இப்போ இதுதான் டிரெண்டிங்

செஃப்-பை வீட்டுக்கே வரவைச்சு ஹோட்டல் அனுபவத்தைப் பெறுவதுதான் இப்போ டிரெண்ட்.

வீட்டுலயே சமைச்சு சாப்ட்டு போர் அடிச்சா.. அப்படியே பைக் எடுத்துட்டு ஃப்ரண்ட்ஸ் கூடவோ.. இல்லை, கார் எடுத்துட்டு ஃபேமிலி கூடவோ ஹோட்டலுக்கு போய் சாப்ட்டு அந்த நாள கொஞ்சம் எனர்ஜெட்டிக்கான நாளா மாத்திட்டு வீட்டுக்கு வரலாம். டெய்லி வீட்டுல சமைக்கிறவங்களுக்கு கொஞ்சம் ரிலீஃப் கிடைச்ச மாதிரியும் இருக்கும். வெளிய போன மாதிரியும் இருக்கும். ஆனால், லாக்டௌன் வந்ததும்தான் வந்துச்சு நம்மள வீட்டுக்குள்ளயே முடக்கி வச்சிடுச்சு. திரும்புற பக்கம்லாம் அணைய கட்டி, டீ சாப்ட கூட வெளிய போகாத நிலைமைல மனுஷன் நொந்து போய் உட்கார்ந்து இருந்தப்போதான், மக்கள்ல பலரும் செஃப்ஃபை வீட்டுக்கு இன்வைட் பண்ணி சமைக்கிற ஐடியா பக்கம் கவனத்த திருப்ப ஆரம்பிச்சாங்க.

உலக அளவுல பல நாடுகள்ல செஃப்ஃபை வீட்டுக்கு கூப்பிட்டு சமைக்கிற வழக்கம் சமீபகாலமா அதிகரிச்சிட்டே வருது. இதுக்காகவே தனியா நிறைய வெப்சைட் ரன் பண்றாங்க. குறிப்பிட்ட வெப்சைட்டை ஓப்பன் பண்ணி நமக்கு பிடிச்ச செஃப் யாரு வேணுமோ அவங்கள தேர்வு செஞ்சிக்கலாம். நமக்கு புடிச்ச மெனுவை நமக்கு புடிச்ச செஃப் நம்ம வீட்டுக்கே வந்து சமைச்சு குடுப்பாங்க. பிரான்ஸ் போன்ற நாடுகளில் பிரைவேட் செஃப்ஃபை வீடுகள்ல வேலைக்காகவே எடுத்துக்குறாங்களாம். சிறப்பான டைனிங் அனுபவத்தை பெறுவதற்காக பிரைவேட் செஃப்பை அவங்க அதிகமா ப்ரிஃபர் பண்றாங்களாம்.

Chef

பிரான்ஸைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரைவேட் செஃப் பத்தி, “டைனிங் அனுபவம் நாங்க தவறவிட்ட ஒண்ணு. என்னோட மகள், நண்பர்கள் கூட சேர்ந்து அடிக்கடி ஹோட்டல்களுக்குச் செல்வோம். நான் அதை ரொம்பவே மிஸ் பண்ணேன். பிரைவேட் செஃப் வந்ததால, அந்தக் குறை இப்போ போயிருக்கு. வீட்டுலயே ஹோட்டல் இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது. இந்த அனுபவம் ரொம்ப அழகானது” அப்படினு மகிழ்ச்சியா சொல்றாங்க.

பிரைவேட் செஃப் பத்தி கேள்விபட்டதும் சில வெப்சைட்டுகளை அலசி ஆராய்ந்தோம். அதுல என்ன சொல்ல வர்றாங்கனா… “உங்களுக்கு நாங்க தரமான டைனிங் எக்ஸ்பீரியன்ஸை உங்களது வீட்டுக்கே வந்து குடுப்போம். நாங்க சமைக்கிறதைப் பார்த்து நீங்களும் கத்துக்கலாம். சமையல்ல இருந்து டைனிங்ல பரிமாறுவது வரை எல்லா வேலையையும் நாங்க கவனிச்சிப்போம். நீங்களும் உங்களது விருந்தினர்களும் எதைப் பத்தியும் கவலைப்படாமல் அந்த நாளை இனிமையாக அனுபவிக்கலாம்” அப்டிங்றாங்க! ஃபாரீன்ல மட்டுமில்ல இந்தியாவுலயும் ஏன் சென்னைலயும் கூட இந்த கான்சப்ட் வொர்க் ஆகிட்டு வருதுனு சொல்றாங்க.

இந்த ப்ரைவேட் செஃப் கான்சப்ட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க பாஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top