ராணா

ரோலெக்ஸ் கேரக்டர்ல ராணாவா?… இந்த லிஸ்ட் நல்லாருக்குல?!

தமிழ் சினிமால ராணாவுக்கு நடிக்கணும்னு ஆசை. அதுக்கு முன்னாடி தெலுங்குல ஒரரு படம் பண்ணி இருந்தாரு. லீடருன்ற அந்தப் படம் மிகப்பெரிய ஹிட். தமிழ்ல அந்தப் படம் ரிலீஸ் ஆகணும்னு ரொம்ப எதிர்பார்த்துருக்காரு சில பல பொலிட்டிகல் விஷயம் அதுல இருந்ததால ரிலீஸாகலை. அதுக்கப்புறம் நியூஸ் பேப்பர்லலாம் தெலுங்குல ஹிட் கொடுத்த ராணா கௌதம் மேனன்கூட படம் பண்ணப்போறாரு.. செல்வராகவன்கூட படம் பண்ணப்போறாருனு எழுத.. உண்மை என்னனா யாருமே அவருக்கு தமிழ்ல நடிக்க வாய்ப்பு கொடுக்கலையாம். நான் அமெரிக்காவுக்கே போயிடுறேன் சிவாஜினு அப்புறம் இந்தில தம் மாரோ தம் நடிக்க போய்ட்டாரு. தமிழ்ல எப்படியாவது படம் பண்ணனும்னு நினைச்சுட்டு இருந்துருக்காரு.

சந்தோஷ் ஷிவன்கிட்ட விஷ்ணு வர்தன் அஸிஸ்டெண்டா இருந்ததுல இருந்து ராணாக்கு நல்ல நண்பன். அவர் ஆரம்பம் பண்ண முடிவு பண்ணதும் ஸ்பெஷலான ரோல் ஒண்ணு இருக்குனு இவர்கிட்ட சொல்லிருக்காரு. சரி, பண்ணலாம் இதுல என்ன இருக்குனு நடிக்க அக்சப்ட் பண்ணிக்கிறாரு. அதுக்கு முன்னாடி வரைக்கும் அஜித் சாரை அவர் மீட் பண்ணதில்லையாம். அவர்கூட சேர்ந்து நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் தமிழ் சினிமாவோட ஸ்டைல அவர் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்காரு.

அஜித் படம் ரிலீஸாகி ஹிட்டான எப்படியிருக்கும்னு எனக்கு தெரியாது. படம் ரிலீஸான பிறகு துல்கர் படம் ஒண்ணுக்கு ஆடியோ லாஞ்சுக்கு என்னை கூப்பிட்டாங்க. அப்போ கூட்டத்துல இருந்து எல்லாரும் சஞ்சய், சஞ்சய், சஞ்சய்னு கத்துறாங்க. நான் பாகுபலி ஷுட்டிங்க்ல இருந்து வந்துருக்கேன். யாருடா இந்த சஞ்சய்னு எனக்கு டவுட்டு. அப்புறம் பார்த்தா ஆரம்பம்ல என்னோட பெயர் சஞ்சய். டக்னு நியாபகம் வந்துச்சு. அதுதா என்னோட முதல் தமிழ் படம். அப்போல இருந்து என்னை நியாபகம் வைச்சிருக்காங்கனு ரொம்பவே பெருமையா இன்டர்வியூக்கள்ள சொல்லுவாரு. அஜித்தோட அருமை அப்போதான் இவருக்கு புரிஞ்சிருக்கு. ஆரம்பம் படத்துக்கப்புறம் யாருப்பா இவருனு கூகுள் பண்ணி தேடுனாங்க. ஆனால், பாகுபலி ரிலீஸ் ஆனப்பிறகு அவர் ரேஞ்சே வேற.

பாகுபலின்ற படம் ராணாவை இந்தியால டாப் மோஸ்ட் ஆக்டர்ஸ் லிஸ்ட்ல கொண்டு போய் வைச்சுது. அந்த படத்தால அவருக்கு பெரிய நல்ல ரோல்கள் கண்டிப்பா தேடி வந்துருக்கும், அவர் படங்கள் மேல எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. ஆனால், அதுக்கப்புறமா அவர் நடிச்ச பல படங்கள்ல கேரக்டர்ஸ் ரொம்பவே சொதப்பலாதான் இருந்துச்சு. ஐயப்பனும் கோஷியும், காடன், பெங்களூர் நாட்கள், காஸினு நல்ல கதைலகூட அவரோட கேரக்டர் பயங்கர சொதப்பலாதான் அமைஞ்சுது. ராணாவோட சொதப்பல் கேரக்டர்ஸை பார்க்கும்போது.. தமிழ் சினிமால ஹிட்டான கேரக்டர்களை அவர் பண்ணியிருந்தா ரொம்ப நல்லாருக்கும்லனு தோண வைச்சுது. அப்படியான கேரக்டர்கள் என்னென்ன?

விக்ரம் – ரோலக்ஸ்

விக்ரம் படத்துல வந்த ரோலக்ஸ் கேரக்டர் ராணா பண்ணியிருந்தா, சூர்யாவுக்கு அமைஞ்ச மாதிரி ராணா கரியர்ல அவருக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் கேரக்டரா அமைஞ்சுருக்கும். பிளட்டா இருக்குற சட்டை, முகம், தேள் டாட்டூ, கடுக்கன், ஈவில் சிரிப்பு, கண்ணு, தாடி எல்லாமே ராணா ஃபேஸோட நினைச்சு பார்த்தா ப்பா.. பயங்கரமா இருக்குல. ரோலக்ஸ் ட்வின்ஸா இருந்தக்கூட நல்லாதான் இருக்கும். அந்த ட்வின் ராணாவா இருந்தா இன்னும் மாஸா இருக்கும்.

சார்பட்டா பரம்பரை – கபிலன்

ஆர்யாவுக்கு செமயா அமைஞ்ச படம் சார்பட்டா பரம்பரை. உன்ன அடிச்சு நான் தூக்குறண்டா, வாத்தியார பல்லு புடிச்சு பார்க்குறியானு மாஸா பேசியிருப்பாரு. இருந்தாலும் அவர் நடிக்கும்போது சம்திங் மிஸ்ஸிங்ல அப்டினு தோணிட்டே இருக்கும். அந்த டவுட் இருந்தாலும் படமா பார்க்கும்போது துருத்திட்டு இருக்கார்து. அவர் மாதிரி அந்த கேரக்டருக்கு இன்னொருத்தர் செட் ஆவாருனா ராணாவை சொல்லலாம். அந்த பாடி பில்டிங்.. வில்லனுக்கு எதிரான இவரோட ஃபைட் சீன்ஸ் எல்லாமே நல்லாருக்கும்.

சிங்கம் 3 – விட்டல்

சிங்கம் 3 படம் அதிகளவுல ஒட்டாமல் போனதுக்கு காரணம். அந்தப் படத்தோட வில்லன்கள்தான். ராணா என்னதான் தெலுங்கு ஹீரோவா இருந்தாலும் அவர்கிட்ட ஒரு தமிழ் வாசனை இருக்கு. விட்டல் பிரசாத்னு ஆஸ்திரேலியா வில்லன் ஒருத்தர் வருவாரு. கத்துனா வில்லனானு கேட்க தோணும். அவருக்கு பதிலா இந்த கேரக்டரை ராணா பண்ணியிருந்தா இன்னும் மாஸா இருக்கும். ரோலக்ஸுக்கே டஃப் கொடுத்துருப்பாரு. படமும் கொஞ்சம் விமர்சன ரீதியா மாறியிருக்க வாய்ப்புகள் இருக்கு.

Also Read – இவங்க எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல பாடியிருக்காங்க தெரியுமா?!

கே.ஜி.எஃப் – ராக்கி பாய்

கே.ஜி.எஃப்ல ராக்கி பாய் கேரக்டருக்கே ராணா வொர்த்துதான். இல்லைன்னுலாம் சொல்லக்கூடாது. ஏன்னா அந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாடி யஷே நமக்கு யாருனு தெரியாது. ஆனால், பாகுபலி மாதிரி வில்லன் கேரக்டர் கொடுத்துட்டு, அதே கம்பீரம்.. மிடுக்கு.. மஸில்ஸோட துப்பாக்கியை தூக்கிடு வந்து நின்னா, ஏய் இந்தாளுக்கு இந்த கேரக்டர்கூட செமயா செட் ஆகுதுல்லனு தோண வைப்பாரு. பிளட் முகம் முழுக்க இருக்க போஸ்டர்ல ராணாதான் இருக்காருனு நினைச்சுப் பாருங்க.. அப்படியே செட் ஆயிடுவீங்க.

துணிவு – கிரிஷ்

ஆரம்பம்ல அஜித்கூட ஆரம்பிச்ச ராணாவோட பயணம் துணிவுலயும் இருந்துருந்தா மாஸா இருந்துருக்கும். என்னமோ தெரியல.. என்ன மாயமோ புரியல.. வில்லன் கேரக்டர், அதுவும் சிக்ஸ் பேக்லாம் வைச்சிட்டு இருந்தாலே ராணா அந்த கேரக்டருக்கு பக்காவா செட் ஆயிடுவாருனு தோணுது. ஜான் கொக்கைனுக்கு பதில் அந்த கேரக்டர் ராணா பண்ணியிருந்தா அவர் கரியர்ல முக்கியமான படமா துணிவு இருந்துருக்கும்.

இந்த லிஸ்ட்ல வேற என்ன கேரக்டர்ஸை ராணாவுக்கு கொடுக்கலாம்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top