நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், `இந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார்?’ என்றும் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்திய இளைஞர்களிடம் மட்டுமல்லாது உலகத்தின் பல நாடுகளில் உள்ள இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்து வருகிறார். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான ஏழு தகவல்களைதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
- பிரதமர் நரேந்திர மோடி டீனேஜராக இருந்தபோது ஜிப்சி வாழ்க்கை முறையால் அதிகம் கவரப்பட்டார். தெரியாத இடங்களுக்கு தனியாக பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இமயமலையில் சாதுக்களுடனும் தனது நேரத்தை செலவிட்டுள்ளார்.
- தனது பள்ளி நாள்களில் மோடி மிகவும் தைரியமான, துணிச்சல் மிக்க மாணவராக இருந்துள்ளார். ஷர்மிஸ்தா என்ற ஏரியில் முதலைகள் இருப்பது தெரிந்தும் தைரியமாக அதில் மோடி நீந்துவாராம். ஒரு தடவை குட்டி முதலை ஒன்றை வீட்டுக்கே எடுத்து வந்துவிட்டாராம்.
- ஒபாமாவுக்கு அடுத்து ட்விட்டரில் அதிகமானோரால் ஃபாலோ செய்யப்படும் தலைவர்களில் ஒருவராகப் பிரதமர் மோடி உள்ளார். அவரை ட்விட்டரில் சுமார் 68.7 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
- ஜப்பானின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே எப்போதும் ஜப்பானிய மொழியிலேயே ட்வீட் செய்யக்கூடியவர். ஆனால், மே 20-ம் தேதி 2014-ம் ஆண்டு நரேந்திரமோடியை வாழ்த்துவதற்காக முதன்முதறையாக ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார்.
- பிரதமர் நரேந்திரமோடி தனது தாய் மொழியான குஜராத்தியில் கவிதை எழுதக்கூடியவர். புகைப்படங்களை எடுப்பதிலும் ஆர்வம் உடையவர். புகைப்படக் கண்காட்சி ஒன்றையும் நடத்தியுள்ளார்.
- பிரதமர் நரேந்திரமோடி அதிகமாக வேலை செய்யக்கூடிய நபராக அறியப்படுகிறார். ஒருமுறை அவரிடம்,
ஒருநாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்குவீர்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
“நான் மிகவும் குறைவான நேரமே தூங்குகிறேன். யோகா, பிராணயாமா போன்றவற்றின் வழியாக என்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். - குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றினார். அவர் இன்றுவரை தனது அனைத்து அதிகாரிகளையும் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வலியுறுத்தி வருகிறார்.
Also Read : பி.டி.எஸ் டீமின் கேப்டன் ஆர்.எம் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்!