சங்கர் கணேஷ்-கிற பெயரை 90 -கிட்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்க. அதில் பலர் இது ஒரே ஆள்னு நினைச்சிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கு. ஆனா, அப்படியில்லை. லெஜண்ட்ரி இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆரம்பிச்சு சமீபமா வைரல் ஆகிட்டு இருக்குற விவேக் – மெர்வின் வரைக்கும் தமிழ் சினிமாவில் இசைமைப்பாளர் காம்போ ஒன்னும் புதுசு இல்லை. அப்படி சங்கர் – கணேஷ்னு ரெண்டு பேரும் சேர்ந்து 70 – 80 சமயங்களில் கலக்கியிருக்காங்க. அதுல இன்னைக்கு நாம கணேஷைப் பற்றித்தான் பார்க்கப்போறோம்.

அதுக்கு முன்னாடி இந்த காம்போ எப்படி உருவாச்சு; அவங்க பண்ணுன பாடல்கள் என்னனு பார்த்திடலாம். சங்கரும் கணேஷும் தனித்தனியா எம்.எஸ்.வி-கிட்ட உதவியாளர்களாக சேர முயற்சி பண்ணிட்டு இருந்த சமயத்தில்தான், நம்மளை மாதிரியே தினமும் ஒருத்தன் வந்து வீட்டு வாசலில் நிற்கிறானேனு ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. அப்படி பழக்கமான இவங்க ரெண்டு பேரும் எம்.எஸ்.வி -கிட்ட வேலைக்கு சேர்ந்து பல படங்கள் அவரோட வொர்க் பண்ணியிருக்காங்க. பல வருடங்கள் வேலை பார்த்ததுக்கு அப்பறம் கணேஷுக்கு தனியா போய் படங்களுக்கு இசையமைக்கணும்னு ஆசை வந்தது. சங்கர்கிட்ட இதை சொல்லி அவரையும் கூட சேர்த்துக்கலாம்னு கேட்டதும், அவர் பயந்துட்டார். ‘டேய், வெளிய போய் படங்கள் பண்ணப்போறோம்னு தெரிஞ்சா இந்த வேலையும் போயிடப்போகுது’னு சொல்லியிருக்கார். நான் போய் பட வாய்ப்புகள் தேடுறேன். கிடைச்சதும் சேர்ந்து மியூசிக் பண்ணலாம்னு சொல்லிட்டு, கண்ணதாசன்கிட்ட வாய்ப்பு கேட்கிறார் கணேஷ்.
ஏற்கெனவே எம்.எஸ்.வி-கிட்ட வேலை பார்க்கும் போதே கணேஷை நன்றாக தெரியும் என்பதால் நகரத்தின் திருடர்கள்னு ஜெய் சங்கர் நடிக்கிற படத்தில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே ட்ராப் ஆக, மீண்டும் கண்ணதாசனிடம் சென்றிருக்கிறார். மறுபடியும், நான் யார் தெரியுமா என்கிற படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார். அதுவும் ஜெய் சங்கர் படம்தான். அந்தப் படமும் ரொம்ப மெதுவாக நகர, மீண்டும் கண்ணதாசன் போய் நிற்கிறார். இது சரிப்பட்டு வராது, ‘வாங்க தேவர் ஃபிலிம்’ஸுக்கு கூப்பிட்டுப் போய், ‘பசங்க உங்க படத்துலதான் மியூசிக் பண்ணுவேன்னு ஒத்தக்காலில் நிற்கிறாங்கனு எக்ஸ்ட்ரா பிட்டெல்லாம் போட்டு மகராசி படத்திற்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம்தான் எந்த பிரச்னையும் இல்லாமை ரிலீஸும் ஆனது. இவர்களின் பெயரை டைட்டில் கார்டில் போடும் போது, ‘கவிஞர் வழங்கிய தேவரின்’ சங்கர் கணேஷ்னுதான் போட்டிருக்காங்க. மகராசி படம் 1967 ஆம் ஆண்டு ரிலீஸாச்சு. இதில் இருந்து 1992 ஆம் ஆண்டு வரைக்கும் இவங்க ரெண்டு பேரும் பயங்கர பிஸியாக பல படங்களுக்கு இசையமைச்சாங்க.
எம்.ஜி.ஆர் – சிவாஜி – நாகேஷ் படங்கள்னு ஆரம்பிச்சி ரஜினி, கமல் ட்ரெண்ட் வரைக்கும் இசையமைச்சிருக்காங்க. குறிப்பா சொல்லணும்னா வித்யாசாகரும், வித்யாசாகரோட அப்பாவும் இவங்ககிட்ட இசைக்கருவிகள் வாசிச்சிருக்காங்க; ஹாரிஸ் ஜெயராஜும் அவரோட அப்பாவும் இவங்ககிட்ட இசைக்கருவிகள் வாசிச்சிருக்காங்க. இவங்க பண்ணுனதுல சிறந்த பாடல்களில் சிலவற்றை சொல்லணும்னு நினைக்கிறேன். தாய்வீடு படத்துல உன்னை அழைத்தது, இதய வீணை படத்துல காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர், டார்லிங் டார்லிங் டார்லிங் படத்துல அழகிய விழிகளில், கன்னிப் பருவத்திலே படத்தில் பட்டு வண்ண ரோசாவாம், பாலைவனச்சோலை படத்துல மேகமே மேகமே, ஆட்டுக்கார அலமேலு படத்துல பருத்தி எடுக்கயிலே, கண்ணில் தெரியும் கதைகள் படத்துல நான் உன்ன நினைச்சேன், விதி படத்துல தேவதாசும் நானும், சட்டம் ஒரு இருட்டறை படத்துல தனிமையிலே, இதய தாமரை படத்துல ஒரு காதல் தேவதை, ஊர்க்காவலன் படத்துல மாசி மாசம் தான், சம்சாரம் அது மின்சாரம் படத்துல சம்சாரம் அது மின்சாரம்னு பல பாடல்கள் சொல்லிட்டே போகலாம்.

கணேஷைப் பற்றி தனியா சில விஷயங்கள் சொல்லலாம்னா, இவர் எம்.ஜி.ஆரோட மாப்பிள்ளை. அது எப்படினா, எம்.எஸ்.வி-கிட்ட கணேஷ் உதவியாளரா வேலை பார்த்திட்டு இருந்த சமயத்தில் இவரும் சத்யா ஃபிலிம்ஸின் தயாரிப்பாளர் வேலுமணியோட மகளும் காதலிச்சிருக்காங்க. வேலுமணி யார் என்றால் எம்.ஜி.ஆர் – சிவாஜியை வெச்செல்லாம் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அந்த தயாரிப்பாளருக்கு காதல் விஷயம் தெரிஞ்சதும் இவருக்கு பல மிரட்டல்கள் வந்திருக்கு. ஆனால், இவர் பயந்திடாமல் காதலை விடாமல் இருந்திருக்கிறார். ஒரு நாள் திடீர்னு அந்த தயாரிப்பாளர் எம்.எஸ்.வி ஸ்டுடியோவுக்கு கால் பண்ணி கணேஷிடம் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லியிருக்கிறார். என்ன காரணம்னு பார்த்தால் எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆரின் படங்களில் எம்.எஸ்.வி வேலை பார்த்த சமயத்திலேயே கணேஷை எம்.ஜி.ஆர் பார்த்திருக்கிறார். அவர் மேல் நல்ல அபிப்பிராயமும் இருந்திருக்கிறது. இவர்கள் காதலிக்கும் விஷயம் கேட்டு, எம்.ஜி.ஆரே அந்த தயாரிப்பாளரிடம் பேசி சம்மதம் செய்ய வைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் உன் மனைவி எனக்கு மகள்; அதுனால நீ எனக்கு மாப்பிள்ளைனு சொல்லி அவரை கடைசி வரைக்கும் மாப்பிள்ளை என்றுதான் கூப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் எம்.ஜி.ஆர் வீட்டுக்குச் சென்று அவருடன் காலையில் சாப்பிட்டு மதியம் ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பதுதான் இவரின் வேலையாம். இப்படி எம்.ஜி.ஆருக்கு செல்லப்பிள்ளையாக கணேஷ் இருந்திருக்கிறார்.

கணேஷ் எப்போதும் இரண்டு கைகளிலும் க்ளவுஸ் போட்டிருப்பார். அதற்கு காரணம் என்னென்னா, 1986 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி கணேஷ் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது. அதில் ஒரு டேப் ரெக்கார்ட்டரும் கேசட்டும் இருந்திருக்கிறது. அந்த கேசட்டைப் போட்டு ப்ளே பட்டனை அழுத்தியதும் அது வெட்டிச்சிடுச்சு. அதில்தான் கணேஷோட ரெண்டு கையிலும் ஒரு காலிலும் பயங்கரமா அடிப்பட்டிருக்கு. கைகளில் பெரிய பிரச்னை இல்லை. காலில் பெரிய அடி. கண்டிப்பாக காலை எடுக்கணும்னு சொல்லியிருக்காங்க இந்த செய்தி கேட்டு உடனே மருத்துவமனைக்கு வந்த எம்.ஜி.ஆர் நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது; இவன் பழைய மாதிரி நடக்கணும்னு சொல்லிட்டாராம். இப்போதும் இவர் இவ்வளவு ஆக்டிவ்வாக இருப்பதற்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் என்கிறார்.
Also Read –
Also Read – `ஷங்கர், விஜய், மிஷ்கின், பா.இரஞ்சித்’ – இது கபிலனின் சக்ஸஸ் காம்போ!
சங்கர் – கணேஷில் இருக்கும் சங்கர் இறந்தப்பிறகும் தனது பெயரில் இருக்கும் சங்கரை அவர் எடுக்கவேயில்லை. உங்களைப் பொறுத்தவரைக்கும்தான் சங்கர் இல்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் சங்கர் என்னோடுதான் இருக்கிறார் என்று இப்போதும் இவரை சங்கர் கணேஷ் என்றே அழைக்க வேண்டும் என்கிறார். சமீபத்தில் இவர் நடித்த நாய் சேகர் படத்திலும் இவர் பெயர் சங்கர் கணேஷ் என்றுதான் போடுவார்கள். அந்தளவுக்கு நட்புக்கு இலக்கணமாய் இருக்கிறார்.
I’m extremely inspired with your writing abilities and also with the layout in your blog. Is that this a paid subject matter or did you customize it yourself? Either way keep up the excellent quality writing, it’s uncommon to look a great weblog like this one nowadays!