Stalin signature - Pen

கருணாநிதி கனெக்‌ஷன்… மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட பேனா… சில நினைவுகள் #Wality69

தமிழக முதலமைச்சராக முதல்முறையாகப் பதவியேற்றிருக்கும் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’, முதல் நாளிலேயே கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய அரசாணைகள் அடங்கிய கோப்பில் கையெழுத்திட்டிருக்கிறார்.

இந்த கோப்புகளில் கையெழுத்திட அவர் பயன்படுத்தியது `Wality’ பேனா. அதைப் பார்த்ததும் சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இதில் என்ன இருக்கிறது என கேட்கிறீர்களா?

மு.க. ஸ்டாலின் முதல் கையெழுத்து

அதிதீவிர பேனா காதலரான கருணாநிதியின் பிரியத்துக்குரிய wality69 வகைப் பேனா. முதல் முறையாக கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்கும் போது தலைமைச் செயலகத்தில் அவருக்குப் இந்த Wality69 பிராண்ட் பேனாவைப் பரிசாக வழங்கலாம்' என பேச்சுகள் அடிபட்டிருக்கின்றன. தினசரி அதிகாலையில் எழுந்ததும் உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முதல் அரை நூற்றாண்டு காலம் அவருடைய அத்தனை எழுத்துகளையும் பதிவுசெய்த பெருமை அந்த Wality பேனாவையே சேரும்.உடன்பிறப்பே…’ என்று தொடங்கும் அந்தக் கடிதம், `மு.க’ என்ற கருணாநிதியின் கையெழுத்துடன் முடியும்.

கருணாநிதி கையெழுத்து, Wality69 பேனா

கலைஞருடைய இறுதிக்காலத்தில் கனமான இந்த Wality 69 பேனாவைப் பிடித்து எழுதுவதில் சிரமம் ஏற்பட பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினார். 

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001 ஜூன் 30ம் தேதி நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டபோது கூட சட்டைப்பையில் அந்த உருளையான பேனா அழுத்தமாக அமர்ந்திருந்தது. அத்தனை களேபரங்களுக்கும் அமைதியான சாட்சி அந்த பேனா. கருணாநிதி இறுதி ஊர்வலத்தின்போது அவருடன் அவர் பிரியத்துக்குரிய பொருள்கள் உடனிருக்க பேனா மட்டும் மிஸ்ஸாகி இருந்தது. அவருடைய பேரன் ஆதித்யா அங்கிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேனாவைக் கேட்டு ‘தாத்தாவின் அடையாளம் பேனா. அது எப்போதும் அவருடன் இருக்க வேண்டும்’ என்று கூறியதுடன், அவர் பிரியத்துக்குரிய பேனா அவரிடம் சேர்க்கப்பட்டது.

பிராட்வேயில் உள்ள Gem & Co பேனா கடையில் இருந்துதான் அவர் பேனாக்களை வாங்குவார். அந்தக் கடையின் வயது அவரைவிட கொஞ்சம்தான் குறைவு. 90 வயதைக் கடந்த அந்தக் கடையில் இன்றும் கூட `கலைஞர் பேனா இருக்கா?’ எனக் கேட்டு வருபவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் அந்தக் கடையை நிர்வகிக்கும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.

GEM & Co

முதல் முறை முதல்வரானதும் ஸ்டாலின் கையெழுத்திட்டதும் கூட அவர் தந்தையின் பிரியத்துக்குரிய பேனாவில்தான். 

Also Read – நீங்கள் எவ்வளவு தீவிரமான உ.பி.!? – இந்த 5 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க..!

43 thoughts on “கருணாநிதி கனெக்‌ஷன்… மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட பேனா… சில நினைவுகள் #Wality69”

  1. ordering drugs from canada [url=http://canadapharmast.com/#]best canadian pharmacy[/url] legit canadian online pharmacy

  2. canadian king pharmacy [url=https://canadapharmast.online/#]the canadian pharmacy[/url] canadian pharmacy 24

  3. indianpharmacy com [url=https://indiapharmast.com/#]india pharmacy mail order[/url] indian pharmacies safe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top