தமிழ் சினிமாவின் மேஜிக்கல் டைரக்டர் – மியூசிக் டைரக்டர் காம்போக்கள்!

மியூசிக்னாலே சூப்பர்தான் பாஸ்.. அதுலயும் தமிழ் சினிமாவுல குறிப்பா சில டைரக்டர்ஸ் – மியூசிக் டைரக்டர்ஸ் காம்போ கைகோர்த்தாலே ஆடியன்ஸுக்கு எதிர்பார்ப்பு எகிறும். அதுதான் அந்த காம்போ கொடுக்குற மேஜிக். அப்படி தமிழ் சினிமாவுல ரெட்ரோ தொடங்கி சமீபத்திய காம்போ வரைக்குமான சில மேஜிக்கல் டைரக்டர்ஸ் – மியூசிக் டைரக்டர்ஸ் காம்போ பத்திதான் நாம இந்த வீடியோல பார்க்கபோறோம்.  

* எம்.எஸ்.வி – கே.பாலச்சந்தர்

எம்.எஸ்.விஸ்வநாதன்
எம்.எஸ்.விஸ்வநாதன்

தமிழ் சினிமாவோட ரெட்ரோ ஹிட் காம்போ இது. சர்வர் சுந்தரம், அபூர்வ ராகங்கள், நினைத்தாலே, இனிக்கும், வறுமையின் நிறம் சிவப்பு தொடங்கி பல எவர்கிரீன் ஹிட்கள் கொடுத்தவங்க. தில்லு முல்லு ஆல்பம் இந்த காம்போவோட மாஸ் சம்பவம்னே சொல்லலாம்.

* இளையராஜா – பாலுமகேந்திரா/ மணிரத்னம்/பாரதிராஜா

ராஜா சாரோட மியூஸிக் எப்பவுமே ஸ்பெஷல்னாலும், இந்த மூன்று இயக்குநர்களோட அவர் பயணிக்குறப்ப பிறக்கும் இசை கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல்னே சொல்லலாம். பாலுமகேந்திரா கூட இளையராஜா வொர்க் பண்ண மூன்றாம் பிறை, மூடுபனி, மறுபடியும் படங்களோட பாடல்கள் எப்போ கேட்டாலும் நமக்கு ரெஃப்ரெஷ்ஷிங்கா இருக்கும். அதேமாதிரி, நீங்கள் கேட்டவை ’பிள்ளை நிலா’, அடியே மனம் நில்லுனா நிக்காது, மூடுபனி படத்துல வர்ற என் இனிய பொன் நிலாவே பாடல்களுக்கு ராஜா சாரோட எவர்கிரீன் சாங்ஸ்ல முக்கியமான இடம் எப்பவும் இருக்கும்.

இளையராஜா
இளையராஜா

பாரதிராஜா கூட சேர்ந்து இளையராஜா பல தரமான சம்பவங்களைப் பண்ணிருக்கார்னே சொல்லலாம். 16 வயதினிலே, டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, மண் வாசனைனு இவங்களோட பல படங்களோட ஆல்பங்கள் ரசிகர்கள் பலரோட ஆல்டைம் ஃபேவரைட்.

இளையராஜா – மணிரத்னம் காம்போ பல மறக்கமுடியாத ஆல்பங்களைக் கொடுத்தது. மௌனராகம், இதயகோயில், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதினு இவங்க காம்போல வெளிவந்த ஒவ்வொரு ஆல்பமும் தமிழ் சினிமாவோட முக்கியமான ஆல்பங்கள்.

* ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம்/ஷங்கர்/கௌதம் மேனன்

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா மியூஸிக்ல ரோஜா மூலமா ஒரு புது எனர்ஜி கொடுத்தது மணிரத்னம் – ஏ.ஆர்.ஆர் காம்போனே சொல்லலாம். அதுக்கப்புறம் ஆஸ்கர் நாயகன் மணிரத்னத்தோடு கைகோர்த்த எல்லா படங்களுமே வேற லெவல்னுதான் சொல்லணும். ரோஜா தொடங்கி, திருடா திருடா, பாம்பே, இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால்-னு இவங்களோட டிராவல் இப்போ பொன்னியின் செல்வன் வரைக்கும் ஒரு கவிதை மாதிரி அவ்ளோ அழகானது. இதே மாதிரிதான், நம்ம ஏ.ஆர்.ஆர் ஷங்கர்கூட சேர்ந்து கொடுத்ததெல்லாம் அதிரிபுதிரி ஹிட்டுதான். ஜென்டில்மேன் படத்துக்கு அப்புறம் ஷங்கர் பண்ண எல்லா படங்களுக்குமே ஏ.ஆர்.ரஹ்மான்தான் மியூசிக். அந்த அளவுக்கு படங்களுக்கு ஹீரோவை புக் பண்றாரோ இல்லையோ, ஏ.ஆர்.ஆரைத்தான் ஃபர்ஸ்ட் ஃபிக்ஸ் பண்ணுவார்னு நினைக்கிறேன். இவங்க காம்போ படத்தைப் போலவே மியூசிக்கலாவும் பிரமாண்டம் காட்டுச்சு. அதேமாதிரி, கௌதம் மேனனோட இவர் இணைஞ்ச படங்களும் தமிழ் சினிமாவுக்கு பல ஸ்பெஷலான ஹிட்டுகளைக் கொடுத்தவை. விண்ணைத்தாண்டி வருவாயா ஹோசான்னா, அச்சம் என்பது மடமையடா தள்ளிப்போகாதே, துருவ நட்சத்திரம்னு இவங்க காம்போ கொடுத்தது அட்டகாச ஆல்பங்கள்.    

* யுவன் ஷங்கர் ராஜா – செல்வராகவன்/வெங்கட் பிரபு/விஷ்ணுவர்தன்/அமீர்

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

யுவனோட மேஜிக் பல டைரக்டர்கள் கூட பயங்கரமா வொர்க் அவுட் ஆகியிருக்கும். குறிப்பா சொல்லணும்னா செல்வராகவன், வெங்கட் பிரபுகூட இவர் பண்ண படங்கள் எல்லாமே ஹிட் ஹாட்தான். செல்வராகவன் கூட இவர் சேர்ந்த, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி படங்கள் எல்லாமே ஆல்பமா பார்த்தீங்கனா உங்களுக்கு வேற ஒரு ஃபீல் கொடுக்கும். அந்த அளவுக்கு இவங்க காம்போ கொடுக்குற மெலடிகள் உங்கள் மனதை வருடிக் கொடுக்குறதாவே இருக்கும். வெங்கட்பிரபு கூட யுவன் சேர்ந்தாலே லூட்டிக்கு பஞ்சம் இருக்காது. சென்னை 600 028 படத்துக்கு ஜெம ஜாலியாவும் கோவா படத்துக்கு வேறொரு பரிமாணத்துலயும் மியூசிக் கொடுத்திருப்பார் யுவன். மங்காத்தா, மாநாடு படங்கள்ல இந்த காம்போ வேறொரு உச்சம் தொட்டிருப்பாங்க. மங்காத்தா தீம் மியூசிக் அல்டிமேட். இவங்கள மாதிரியே விஷ்ணுவர்த்தன் கூட பில்லா, அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம் படங்களோட மியூசிக் ரெஃப்ரெஷிங்கா இருக்கும். விஷ்ணுவர்த்தன் படங்கள்ல மாடர்னா இருக்க யுவனோட மியூசிக், அப்படியே இந்தப் பக்கம் பார்த்தா அமீரோட படங்கள்ல கிராமத்துப் பின்னணியை எதிரொலிக்கும். பருத்திவீரன் படத்தோட உயிர்நாதமே அந்த மியூசிக்தான். அதேமாதிரி, மௌனம் பேசியதே, ராம் படங்களுக்கு மியூசிக் மூலமா வேறொரு டோன் கொடுத்திருப்பார் யுவன்.

* ஹாரிஸ் ஜெயராஜ் – கௌதம் மேனன்/ஜீவா

ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் – கௌதம் மேனன் காம்போ தமிழ் சினிமாவோட One of the happening Combo-னே சொல்லலாம். மின்னலே தொடங்கி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம்னு இவங்க கொடுத்த ஆல்பங்கள் எல்லாமே வேற லெவல் ஹிட்டடித்தவை. ஒளிப்பதிவாளரா இருந்து டைரக்டரான ஜீவா, தமிழ்ல மொத்தம் 4 படங்கள்தான் இயக்கியிருக்கார். 12பி, உள்ளம் கேட்குமே, லேசா லேசா, தாம் தூம்னு இந்த நாலு படங்களுக்குமே ஹாரிஸ்தான் மியூசிக். இசை லவ்வர்களின் பிளேலிஸ்ட்ல ஆல்டைம் பேவரைட்டா இருக்க பல பாடல்களை ஜீவா – ஹாரிஸ் கூட்டணி நமக்குக் கொடுத்திருப்பாங்க.  

* ஜி.வி.பிரகாஷ் – வெற்றிமாறன்/ஏ.எல்.விஜய்

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் – வெற்றிமாறன் கைகோர்த்தாலே ஒரு மேஜிக் நடக்கும்னு சொல்லலாம். அந்தவரிசைல பொல்லாதவன் தொடங்கி, ஆடுகளம், அசுரன் வரைக்குமான பட்டியல் பெருசுதான். அதேமாதிரிதான், ஏ.எல்.விஜய்கூட இவர் சேருறப்ப மெலடிகள் பெருசா பேசப்படும்னே சொல்லலாம். மதராசப்பட்டினம், தலைவால ஆரம்பிச்சு, தெய்வத் திருமகள், தாண்டவம் போன்ற படங்களை எக்ஸாம்பிளா சொல்லலாம்.

* சந்தோஷ் நாராயணன் – பா.இரஞ்சித்/கார்த்திக் சுப்புராஜ்

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா இசைக்கு புது கலர் கொடுத்தவர் சந்தோஷ் நாராயணன். இவர் பா.இரஞ்சித் கூட சேர்ந்து நமக்குக் கொடுத்த 5 படங்களுமே மியூசிக்கலா வேற லெவல்ல இருக்கும். அட்டக்கத்தில எக்ஸ்பரிமெண்ட் பண்ண இந்த ஜோடி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரைனு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பாங்க. மெட்ராஸ் கானா இவங்க கூட்டணியோட ஆகப்பெரும் பலம்னே சொல்லலாம். இதேமாதிரி, கார்த்திக் சுப்புராஜ்கூட இவர் வொர்க் பண்ண பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, ஜகமே தந்திரம், மகான் படங்களோட மியூசிக் ரொம்பவே யுனிக்கானதுனே சொல்லலாம்.  

* அனிருத் – விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் - அனிருத்
விக்னேஷ் சிவன் – அனிருத்

தமிழ் சினிமா மியூசிக்கோட லேட்டஸ்ட் சென்சேஷன் நம்ம அனி. எல்லா களத்துலயும் புகுந்து விளையாடுற அவர், விக்னேஷ் சிவன்கூட சேரும்போது இன்னுமே ஸ்பெஷலான ஆல்பங்களை நமக்குக் கொடுத்திருப்பார். இவங்க கூட்டணி நமக்குக் கொடுத்த நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களோட பாடல்களும், பேக்ரவுண்ட் மியூசிக்கும் அதுக்கு சாட்சி சொல்லும்.

* பரத்வாஜ் – சரண்

பரத்வாஜ் - சரண்
பரத்வாஜ் – சரண்

பரத்வாஜ்னு சொன்னாலே நமக்கு நினைவுக்கு வர்றது காதல் மன்னன் படமாத்தான் இருக்கும். அந்த அளவுக்கு இவர் டைரக்டர் சரண் கூட சேர்ந்து வொர்க் பண்ன படங்கள் இவருக்கு ஒரு தனி அடையாளத்தையே கொடுத்திருச்சுனு சொல்லலாம். காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-னு சரண் கூட சேர்ந்து பரத்வாஜ் பண்ணது எல்லாமே சூப்பர், டூப்பர் ஹிட் ஆல்பங்கள்தான்..

இந்த காம்போல உங்களோட ஃபேவரைட் காம்போ எது… குறிப்பா எந்தப் பாடல் மனசுக்கு நெருக்கமானதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – போர் அடிக்குதா… இந்த `நீயா நானா’ எபிசோடுகளைப் பாருங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top