`கொக்கி குமார் முதல் ராம்சே வரை…’ – `Thug life’ மொமன்ட்ஸ் ஆஃப் செல்வராகவன்!

செல்வராகவன், முழுக்க வேற மாதிரியான ஒரு வைபில் வேற வேற மாதிரியான காதல் கதைகளை தமிழ் சினிமாவில் கொடுத்திருக்கிறார். வலி, வேதனை, விரக்தி, காதல் தோல்வி இவைகளைத் தாண்டி அவர் சில தக் லைஃப் மொமன்ட்களையும் நமக்காக கொடுத்திருக்கிறார். அதைத்தான் இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போகிறோம்.

தக் லைஃப் மொமன்ட்ஸ் ஆஃப் செல்வராகவன். 

‘இந்த சீனை வெச்சா ஒருவேளை படம் ஓடாம போயிடுமோ… இதை வைக்கலேனா ஒரு 50 லட்சம் எக்ஸ்ட்ரா கிடைச்சிருக்குமோ… இல்ல இன்னொருத்தர் சொல்றனால அதை மாத்தி எடுக்கணுமோ… இப்படி எல்லாம் நினைச்சா, நீங்க கொஞ்ச நாள் இருக்கலாம். ஆனா காணாம போயிடுவீங்க.’ இது செல்வா சொன்னது. நிஜம்தான். மற்ற படைப்புகளைப் பிரதிபலிக்கும் படங்களை எடுத்த இயக்குநர்கள் சிறிது நாட்கள் கழித்து காணாமல் போவார்கள். இதைத்தான் அவரும் சொல்லியுள்ளார். 

புதுப்பேட்டை 

புதுப்பேட்டை
புதுப்பேட்டை

பென்சிலில் கோடுபோட்ட மாதிரி இருப்பவர்தான் படத்தின் கதாநாயகன். இந்த வசனம் படத்தில் இடம்பெற்றிருக்கும். நம்மைச் சுற்றி பல எதிரிகள் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் இருக்கும் நாம் ஆடு போல் பலியாவோமா அல்லது சிங்கத்தைப்போல் வேட்டையாடுவோமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இதில், இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தார் கொக்கி குமார். எதிர்கட்சியினர் ஏரியாவில் போஸ்டர் அடிக்க சென்றிருக்கும் கொக்கி குமார் எதிரிகளுக்கு மத்தியில் மாட்டிக்கொள்வார். அவரை எதிர்க்கூட்டம் ஆடு என்று நினைத்து மெல்ல மெல்ல அடித்து ரத்தத்தை உறிஞ்சும். ஆனால், அதை சற்றும் பொருட்படுத்தாமல் சிங்கமென கர்ஜித்து ஒற்றை அடியில் ஒட்டுமொத்த கூட்டத்தையும் கதிகலங்க செய்யும் அந்த கொக்கி குமார் எனும் சிங்கமும், அதற்கு எடுத்ததாக அவரது வாழ்க்கை முழுக்க தக் லைஃப்தான். சென்னை முழுக்க கொக்கி குமார் தனது ராஜ்யத்தை ஆரம்பிப்பார். இறுதியில் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவராக மாறிவிடுவார். சுருக்கமாக சொன்னால் புதுப்பேட்டை எனும் மொத்த படமே தக் லைஃப்தான். அதுவும் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படும்போது கொக்கி குமார் கட்சியில் பொறுப்பேற்கும் புகைப்படத்தை அப்டேட் செய்ததெல்லாம் உச்சக்கட்ட தக் லைஃப் மொமென்ட். 

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்


காலம் கடந்து கொண்டாடப்பட்ட ஓர் படைப்புதான் ஆயிரத்தில் ஒருவன். இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் படத்திற்காக செல்வராகவன் கொண்டாடப்படுவதே ஒரு தக் லைஃப் மொமன்ட்தான். இருப்பினும் அந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சொல்வதற்கான ஏகப்பட்ட தக் லைஃப் மொமன்ட்கள் இருக்கின்றன. படம் முடிந்த பின் தூதுவன் யார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். படத்தில் அதுவே goosebumps மொமன்ட். படுத்த படுக்கையாக இருக்கும் சோழ தேசத்தை சேர்ந்த ஒரு தாத்தா கார்த்தியை தேர்ந்தெடுத்து ‘இவன்தான் சோழ ராஜ்யத்தை காப்பாற்ற வந்தவன்’ என்பது போல சொல்வார். அதற்கு முந்தைய காட்சியே வேற லெவல் தக் லைஃபை கொடுத்திருப்பார் கார்த்தி. யாரும் தப்பிச் செல்லாத அந்த ராட்சத உருளை பந்திடம் இருந்து தப்பித்து சோழ ராஜாவிடம் நற்பெயர் வாங்குவார். இதுவரை எந்த தமிழ் சினிமா ஹீரோக்களும் கிடைத்திடாத ஒரு மாஸ் என்ட்ரி சோழ ராஜாவான பார்த்திபனுக்கு கிடைத்திருக்கும். `தி கிங் அரைவ்ஸ்’ என்கிற பிஜிஎம் ஒலிக்க பார்த்திபன் நடந்து வருவதெல்லாம் உச்சக்கட்ட மாஸ். 

மயக்கம் என்ன

மயக்கம் என்ன
மயக்கம் என்ன


கார்த்திக் – யாமினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காதல் ஜோடி. நண்பன் டேட் செய்யும் யாமினியை காதலிப்பது, அவரையே கடைசியில் திருமணம் செய்து கொள்வது பொலைட்டான தக் லைஃப் மொமன்ட். ஃபாலோ தி பேஷன் என்று சொல்வது எளிது; அதை கனவு காண்பதும் எளிது. ஆனால், அதை நிஜமாக்கும் ப்ராசெஸில் வரும் இன்னல்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. தன் கனவை நிஜமாக்க முடியாமல் தவிக்கும் கார்த்திக் தனது திறமை திருடப்படுவதையடுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை கட்டித் தழுவி தட்டிக் கொடுத்து ஊக்கம் கொடுக்கிறார் யாமினி. இறுதியில் அந்த திருட்டை மேற்கொண்டவரின் முன்பே இன்டர்நேஷனல் ஃபோட்டோகிரஃபிக்கான விருதைப் பெறுவது தாறுமாறு தக் லைஃப். இதற்கு முழு காரணம் கார்த்திக்கின் பர்ஸில் வைத்திருக்கும் அவரது மனைவி. 

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை

கார்த்திக்கை போல் ராம்சேவும் தனது வாழ்நாள் லட்சியத்தை அடைவதுதான் இந்தப் படத்தின் கதை. என்ன ஒன்று கார்த்திக்கை போல் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் சிலரின் குறுக்கெலும்பை உடைத்து போட்டுத்தள்ளி அவருக்கான இடத்தை அடைந்திருப்பார். அதை எப்படி அடைந்தார் என்பதை இடைவிடாமல் பேசும் அவரது வசனமே உணர்த்தியிருக்கும். அந்த வசனத்தில் ‘பார்த்தோன்னே வர்றதுதான் டா காதல். பார்க்க பார்க்க வந்தா அது காஜி’ என்று சொல்லியிருப்பார். இதை நான் படிக்காதவன் படத்தில் தனுஷ் சொல்லும் ‘என்ன மாதிரி பசங்களை பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்கதான் பிடிக்கும்’ என்ற வசனத்தோடு கலாயாக பொருத்திப் பார்த்து கலாயான ஒரு தக் லைஃபை கூட நினைத்து பார்க்கலாம். அதுவும் போக தமிழ் சினிமா பல வித பேய் படங்களையும் அரட்டிடும் பயங்களையும் பார்த்திருக்கிறது. ஆனால் பேயையே தக் லைஃபாக டீல் செய்திருப்பது முரட்டு தக் லைஃப். 

Also Read – நாசரின் நவரசா மொமென்ட்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top