நீங்க சோம்பேறியா… அப்போ இந்த கேட்ஜெட்ஸ் உங்களுக்கானதுதான்!

டெக்னாலஜி வளர்ந்து வர்றதால சோம்பேறித்தனம் அதிகமாகுதா… இல்லை சோம்பேறித்தனம் அதிகமாகுறதால டெக்னாலஜி வளர்ந்து வருதானு கேட்டா பதில் என்னவா இருக்கும்னு தெரியல! ஆனால், சோம்பேறிகளுக்கு டெக்னாலஜி அதிகமாகவே உதவி செய்யுதுனுதான் சொல்லனும். ஏன்னா அவ்வளவு விஷயங்கள் டெக்னாலஜில கொட்டி கிடக்குது. நீங்களும் சோம்பேறிகள்ல ஒருத்தர்னா.. இங்கே பட்டியலிடப்பட்டிருக்கும் பொருள்கள் நிச்சயம் உங்களுக்கு உதவியா இருக்கும். சரி. அந்தப் பொருள்கள் என்னல்லாம்னு தெரிஞ்சுக்கலாமா?

Neck bracket phone holder 

கையில போன் வச்சிக்கிறதுக்கே கடுப்பா ஃபீல் பண்ணக்கூடிய ஆளா நீங்க ஆப்போ இந்த நெக் பிரேக்கட் ஃபோன் ஹோல்டர் உங்களுக்கானதுதான். இதை நீங்க கழுத்துல மாட்டிகிட்டே மற்ற வேலைகளை செய்யலாம். சும்மா இருந்து மொபைல்ல வீடியோக்களையும் பார்க்கலாம்.

Grabber tool

உங்க வாழ்க்கையில கைகொடுக்காத நிறைய விஷயங்கள் இருக்கலாம். ஆனால், இந்த கிரேப்பர் டூல் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். படுக்கைல படுத்திருக்கும்போது கைக்கு எட்டுற தூரத்துல இருந்து கொஞ்சம் தள்ளி ரிமோட், மொபைல், ஸ்நாக்ஸ் போன்றவை இருக்கும்போது இந்த கிரேப்பர் டூலை வைத்து இருந்த இடத்தில் இருந்தே அந்தப் பொருள்களை எடுக்க முடியும்.

Programmable wireless remote control power outlets

லைட்ட ஆன் பண்ணிட்டு ஆஃப் பண்ண மறக்குற ஆளா நீங்க. அப்போ உங்களுக்கு இந்த புரோடக்ட் ரொம்பவே பயனுள்ளதா இருக்கும். ஹால்ல இருக்குற லைட்ல இருந்து பாத்ரூம் லைட் வரைக்கும் நீங்க இந்த ரிமோட்ட பயன்படுத்தி இருந்த இடத்துல இருந்தே கன்ட்ரோல் பண்ணிக்க முடியும். 

Microfibre mop slippers

வீட்டை சுத்தமா வச்சிக்கணும். ஆனால், வேலை செய்ய கடுப்பா இருக்குதுனு ஃபீல் பண்றவங்களுக்காகவே இந்த மைக்ரோஃபைபர் மாப் ஸ்லிப்பர்ஸ் ரொம்பவே பயனுள்ளதா இருக்கும். உங்களோட வேலையையும் கொஞ்சம் குறைக்கும். கால்ல செருப்பு மாதிரி போட்டுகிட்டே வீட்டை நீங்க எளிதிப் மாப் பண்ண முடியும். குனிஞ்சு, நிமிர்ந்து கஷ்டப்படத் தேவையில்லை.

 Shirt folding board

துணி அடுக்கி வைக்கிற பீரோவிலோ அல்லது ஷெல்ஃப்லையோ எப்பவும் துணி கலைஞ்சு கிடந்து.. அதை அடுக்கி வைக்குறதுக்கு சோம்பேறித்தனப்படுற ஆளா நீங்க? அப்போ இந்த ஷர்ட் ஃபோல்டிங் போர்டு உங்களோட வேலைய ரொம்ப சிம்பிளா மாத்தும்.

Electronic muscle trainer

எப்பவும் ஜிம்முக்கு போறது சாத்தியம் இல்லாத ஒரு விஷயம்தான். ஜிம்முக்கு போக முடியாத சூழலில் நீங்க எக்ஸர்சைஸ் பண்றத ரொம்பவே மிஸ் பண்ணுவீங்கள்ல? நீங்க மிஸ் பண்ணாம இருக்க இந்த எலக்ட்ரானிக் மஸில் ட்ரெய்னர் உங்களுக்கு உதவி பண்ணும்.

Automatic pet feeder

பெட் லவ்வரா இருக்குறது மட்டும் முக்கியம் இல்ல.. அந்த பெட்டுக்கு சாப்பாடு வைக்கிறதும் முக்கியம்தான? அதை நீங்க அடிக்கடி மறந்து போறீங்களா? அப்போ உங்களுக்கு இந்த ஆட்டோமேடிக் பெட் ஃபீடர் ரொம்பவே பயனுள்ளதா இருக்கும். 

இந்தப் பொருள்களில் உங்க ஃபேவரைட் பொருள் என்னனு கமென்ட்ல சொல்லுங்க மக்களே!

Also Read : ஒன் செகண்ட் டிராஃபிக் முதல் மோட்டோ வரை… கூகுள் பற்றி இந்த 9 சுவாரஸ்யங்கள் தெரியுமா?

4 thoughts on “நீங்க சோம்பேறியா… அப்போ இந்த கேட்ஜெட்ஸ் உங்களுக்கானதுதான்!”

  1. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top