வதந்தி வாயர்களுக்கு வாய்ப்பூட்டு போடுவதற்காக கூகுள், வாட்ஸ்அப், ட்விட்டர், போன்ற நிறுவனங்கள் அந்தந்த பிளாட்ஃபார்முக்கு ஏற்றபடி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வகையில் ட்விட்டர் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு செய்திக்கட்டுரையைப் படிக்காமலே ஒரு ட்வீட்டை ரீட்விட் செய்தால், “இந்தச் செய்தியை நீங்கள் படிக்காமலே பகிர்கிறீர்கள், இந்தக் கட்டுரையைப் படிக்கலாமே” என்ற அறிவிப்பைக் காட்டும்.
தற்போது ஃபேஸ்புக் தன் பங்குக்கு இந்த மாதிரியான எச்சரிக்கைச் செய்தியை இனிமேல் காட்டப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த எச்சரிக்கையைக் காட்டுவதன் மூலமாக ஒரு செய்தியைப் பகிர்வதை இது தடை செய்யாவிட்டாலும், பகிர்பவர்களை சில நொடிகளாவது யோசிக்க வைக்க முடியும் என நம்பப்படுகிறது.
ட்விட்டர் இந்த வசதியை சோதனை முயற்சியாகக் கொண்டு வந்தபோது, இந்த எச்சரிக்கை செய்தியைப் பார்த்த பிறகு 40%-க்கும் அதிகமானவர்கள் கட்டுரையை திறந்து படிப்பதாகக் கண்டறிந்தது. ஃபேஸ்புக் தரும் இந்த வசதி என்ன வகையான விளைவுகளைத் தருகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Also Read : ட்விட்டரே அதிர்கிறது… மாநிலமே கலங்குகிறது! – யார் இந்த கே.ஆர்.கௌரி அம்மா?
எத்தனை வசதிகளைக் கொண்டு வந்தாலும் வதந்தி பரப்புவர்களாய்ப் பார்த்து திருந்தினால்தான் உண்டு.